Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவாரசியமான செய்திகள்
#15
நீ காயப்பட்டால் எனக்கு வலிக்கிறது.. !

சமீபத்தில் சயின்ஸ் என்ற பிரபலமான விஞ்ஞான இதழில் வெளிவந்த சுவாரசிய விஷயம் இது. நாம் பலதடவை "... நீ காயம்பட்டால் எனக்கு வலிக்கிறது..." , " ..உனது வலியை நானும் உணர்கிறேன்.." என்பது போன்ற டயலாக்குகளை சினிமாமாவில் கேட்டிருக்கிறோம் .. இது மேலோட்டமாய்ப் பார்ப்பதற்கு "...தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா..? " என்ற பழமொழியை ஞாபகப் படுத்தலாம். ஆனால் ஒருவருக்கு வலிப்பதை இன்னொருவர் உணரக்கூடிய சாத்தியம் உள்ளது என்று விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். லண்டனில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. மனமொத்து வாழும் 16 தம்பதியரைத் தெர்ந்தெடுத்து தம்பதியரில் ஆண் அல்லது பெண்ணுக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்து மற்றவரின் மூளையை எம்.ஆர்.ஐ (மேக்னடிக் ரெஸனன்ஸ் இமேஜிங்) மூலம் ஆராய்ந்தபின் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இன்னும் இது பற்றிக் கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்வதென்றால் அவர்கள் செய்த சோதனை இதுதான். முதலில் தம்பதியர் இருவரில் ஒருவருக்கு கையில் ஒரு வினாடி மின்சார அதிர்ச்சி கொடுத்து அதன் விளைவாய் மூளையில் நிகழும் மாற்றங்களை எம்.ஆர்.ஐ மூலம் கவனத்துடன் பதிவு செய்திருக்கிறார்கள். மின் அதிர்ச்சி கொடுக்கும்போது மூளையின் எப்பகுதி அதிகமாகத் தூண்டப்படுகிறது, பாதிக்கப்படுகிறது என்பதைக் கவனித்திருக்கிறார்கள். பின்னர் அவரது துணையை அழைத்து அதேபோல் ஒரு வினாடி மின் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள், இந்த முறை தனது துணைக்கு மின் அதிர்ச்சி கொடுக்கும்போது அவரால் துணையின் முகத்தை மட்டும் பார்க்கமுடியும்படி செய்திருகிறார்கள், ஆனால் துணைக்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்படுகிறதா இல்லையா, என்பதைத் அதிர்ச்சி கொடுக்கும் கருவியின் இண்டிகேட்டர் மூலம் பார்த்துத் தெரிந்துகொள்ள இயலாது. ஆனாலும்கூட அவருக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டால் எப்பகுதிகள் மூளையில் தூண்டப்படுமோ அதேபகுதிகள் துணைக்கு மின் அதிர்ச்சி கொடுக்கும்போதும் தூண்டப்பட்டது. மேலும் இந்த விளைவு மிக மனமொத்து இருக்கும் தம்பதியரிடையே வலிமையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நன்றி - முத்து
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 03-08-2004, 01:43 PM
[No subject] - by Mathan - 03-09-2004, 11:00 PM
[No subject] - by vasisutha - 03-09-2004, 11:42 PM
[No subject] - by Chandravathanaa - 03-10-2004, 12:05 AM
[No subject] - by kaattu - 03-10-2004, 02:51 PM
[No subject] - by Mathan - 03-12-2004, 10:00 PM
[No subject] - by Mathan - 03-12-2004, 10:15 PM
[No subject] - by Mathan - 03-22-2004, 01:46 AM
[No subject] - by Mathan - 03-27-2004, 07:06 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:10 PM
[No subject] - by sOliyAn - 03-28-2004, 12:06 AM
[No subject] - by kuruvikal - 03-28-2004, 09:48 AM
[No subject] - by sOliyAn - 03-28-2004, 12:53 PM
[No subject] - by Mathan - 03-31-2004, 03:55 PM
[No subject] - by sOliyAn - 03-31-2004, 11:24 PM
[No subject] - by Mathan - 04-01-2004, 12:15 AM
[No subject] - by Paranee - 04-01-2004, 03:28 PM
[No subject] - by Mathan - 04-08-2004, 12:54 PM
[No subject] - by Paranee - 04-08-2004, 02:44 PM
[No subject] - by Mathan - 04-08-2004, 11:05 PM
[No subject] - by Mathan - 04-12-2004, 11:12 AM
[No subject] - by Mathan - 04-18-2004, 11:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)