03-31-2004, 03:35 PM
பிரபாகரன்-கருணா பிரச்சினை நீர்க்குமிழி போல மறையும்: வைகோ பேட்டி
ராமநாதபுரம், மார்ச் 31: இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், கருணாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை விரைவில் நீர்க்குமிழி போல மறைந்து விடும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
இந்தியக் கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குவது என்பது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் மத்திய அரசு நமது கடற்படையின் மூலம் இலங்கைக் கடற்படைக்கு எச்சரிக்கை விட வேண்டும்.
குறைந்தபட்சம் ராஜீய உறவுகளைத் துண்டிக்கப் போவதாக எச்சரிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது என்பது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இந்த விஷயத்தில் இலங்கை அரசுக்குத் திட்டவட்டமான எச்சரிக்கையை விடுப்பதன் மூலம் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.
போதைப் பொருள் கடத்தல் என்பது தடுக்கப்பட வேண்டிய குற்றம். அதேநேரத்தில் திருப்புல்லாணி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் மீது பொய் வழக்குப் போட்டு, போதைப் பொருள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது கண்டிக்கத் தக்கது என்றார் வைகோ.
நன்றி - தினமணி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>