03-31-2004, 03:15 PM
BBC Wrote:பிற மாவட்டத்தவரை வெளியேற்றி பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன
ஜ எழிலோன் ஸ ஜ புதன்கிழமை, 31 மார்ச் 2004, 20:33 ஈழம் ஸ
கருணா குழுவால் விடுக்கப்பட்ட கொலைப் பயமுறுத்தல், அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் வேறு பிரதேசங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.
பிற மாவட்டத்தைச் சேர்ந்தோரை வெளியேற்றி, அவர்களின் சொத்துக்களை கொள்ளையிடும் செயலில் இறங்கியுள்ள கருணா குழுவின் செயற்பாடுகள் கருணா குழு மீதான நடவடிக்கையொன்றிற்கான தேவையை முதனிலைப்படுத்தியுள்ளதாக கொழும்பைச் சேர்ந்த பிரபல்ய விமர்சகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் ஒன்றைக் கடைப்பிடித்து வரும் கால கட்டத்தில் சமாதான முயற்சிகளை குழப்பும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை தொடர்பாக சர்வதேச சமூகம் உன்னிப்பான அவதானிப்பை நிச்சயமாக மேற்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏனெனில் கருணா குழுவினரின் பிரிவு விடுதலைப்புலிகளின் உள்ளகப் பிரச்சினை என்பதனை ஐப்பான், நோர்வே உள்ளிட்ட பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என்றும், குறிப்பாக சிறீலங்காவின் தலைவர்கள் கூட கருணாவின் பிரச்சினையை விடுதலைப்புலிகளின் உள்ளகப் பிரச்சினையே என்று கூறிவருவதையும் நாம் நோக்க வேண்டும் எனவும் மேற்படி விமர்சகர் தெரிவித்தார்.
குறிப்பாக சமாதான காலத்தில் பெருந்தொகையானோரை அகதிகளாக்கிய செயலானது அவர்கள் மீதான தாக்குதலொன்று மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதனை நியாயப்படுத்துவதாகவே அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி - புதினம்
எரியுற வீட்டிலை புடுங்கிறது லாபமோ பாபமோ அதைச்சொல்லுங்கோ முதலிலை

