Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீதி நூல்கள் ஓளஔவையார் இயற்றிய ஆத்திசூடி
#17
[size=15]<b>ஒளவையார் அருளிச் செய்த

ஆத்திசுூடி</b>

1. அறம் செய விரும்பு

நற்காரியங்களைச் செய்வதற்கு ஆசைப்பட வேண்டும்

2. ஆறுவது சினம்

கோபத்தைத் தணியச் செய்ய வேண்டும்

3. இயல்வது கரவேல்

இயன்றதை ஒளிக்காமல் செய்ய வேண்டும்

4. ஈவது விலக்கேல்

பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கப்கூடாது

5. உடையது விளம்பேல்

உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் கூறாதே

6. ஊக்கமது கைவிடேல்

செயலில் ஈடுபடும்போது தடங்கல் ஏற்படுமானால் அதைக் கண்டு தைரியத்தைக் கைவிடக்கூடாது

7. எண் எழுத்து இகழேல்

கணிதம், இலக்கியம் இவற்றை இகழ்ந்து ஒதுக்கக்கூடாது

8. ஏற்பது இகழ்ச்சி

பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும்

9. ஐயம் இட்டு உண்

பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும்

10. ஒப்புரவு ஒழுகு

உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்

படிப்பதை விட்டுவிடக் கூடாது

12. ஒளவியம் பேசேல்

பொறாமைக் குணத்தோடு சொல்லக் கூடாது.

13. அஃகஞ் சுருக்கேல்

தானியங்களை எடை அளவு குறைத்து நிறுத்தக்கூடாது.

14. கண்டு ஒன்று சொல்லேல்

கண்ணால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் கூறாதே

15. நுப்போல் வளை

'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும்

16. சனி நீராடு

சனிக்கிழமை தோறும் எண்ணெய் தோய்த்துக் குளிப்பாயாக

17. ஞயம்பட உரை

கனிவான முறையில் எதையும் கூறுவாயாக

18. இடம்பட வீடு எடேல்

தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே

19. இணக்கம் அறிந்து இணங்கு

நட்பு கொள்ளுமுன் அவர் நல்லவரா என்பதைத் தீர அறிந்து, அதன் பிறகு தொடர்பு கொள்ள வேண்டும்

20. தந்தை தாய் பேண்

பெற்றோரைப் போற்றி ஆதரிக்க வேண்டும்

21. நன்றி மறவேல்

ஒருவர் செய்த உதவியை மறந்துவிடக் கூடாது

22. பருவத்தே பயிர் செய்

உரிய காலத்திலே உழுது பயிரிட முற்படவேண்டும்

23. மண் பறித்து உண்ணேல்

மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை உண்டு வாழக்கூடாது.

24. இயல்பு அலாதன வெயேல்

வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது.

25. அரவம் ஆடேல்

பாம்போடு விளையாடினால் ஆபத்து நேரிடும்

26. இலவம் பஞ்சில் துயில்

இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து நித்திரை செய்வது நன்மை தரும்

27. வஞ்சகம் பேசேல்

கபடமாகப் பேசக்கூடாது

28. அழகு அலாதன செயேல்

பிறர் இகழத்தக்கவற்றை செய்யக்கூடாது

29. இளமையில் கல்

சிறு பிராயத்திலே கல்வியைக் கற்பது சிறப்பாகும்

30. அரனை மறவேல்

இறைவனை மறவாமல் துதித்து வணங்க வேண்டும்

31. அனந்தல் ஆடேல்

கடலில் நீந்தி விளையாடினால் ஆபத்து நேரிடும்

32. கடிவது மற

பிறருக்கு கோபம் உண்டாகக் கூடிய சொற்களைக் கூறக்கூடாது.

33. காப்பது விரதம்

பிற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் காப்பது நோன்பு ஆகும்.

34. கிழமைப் பட வாழ்

தனக்கே அன்றி மற்றவர்களுக்கும் உதவியாக வாழ வேண்டும்.

35. கீழ்மை அகற்று

கீழ்த்தரமான செய்கைகளை செய்யாமல் நீக்கிவிட வேண்டும்

36. குணமது கைவிடேல்

நற்பண்புகளைக் கைவிடாமல் வாழவேண்டும்

37. கூடிப் பிரியேல்

நற்பண்புடையவர்களோடு தொடர்பு கொண்டு பிறகு அவர்களை விட்டுப் பிரியக்கூடாது.

38. கெடுப்பது ஒழி

ஒருவருக்கும் தீங்கு செய்யக்கூடாது.

39. கேள்வி முயல்

அறிவாளிகள் சொற்களை ஆவலோடு கேட்டுத் தெரிந்துகொள்.

40. கைவினை கரவேல்

கற்ற கைத்தொழில்;;களை மற்றவருக்கும் கற்றுக்கொடு.

41. கொள்ளை விரும்பேல்

ஒருவருடைய பொருளைக் கொள்ளை அடிக்க ஆசைப்படாதே.

42. கோதாட்டு ஒழி

ஆபத்தை உண்டாக்கக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடாதே.

43. சக்கர நெறி நில்

அரச ஆணைகளை மதித்து நடக்க வேண்டும்

44. சான்றோர் இனத்திரு

அறிஞர்களின் குழுவிலே சேர்ந்து இருப்பது மேன்மை அளிக்கும்.

45. சித்திரம் பேசேல்

பொய்யை அலங்காரமாக உண்மை போல பேசக்கூடாது.

46. சீர்மை மறவேல்

சிறப்பான செயல்களை மறந்துவிட வேண்டாம்.

47. சுளிக்கச் சொல்லேல்

மற்றவர் முகம் கோணும்படியான சொற்களைக் கூறக்கூடாது.

48. சுூது விரும்பேல்

சுூதாட்டங்களினால் பொருள் நஸ்டமும் மனக்கஸ்ரமும் உண்டாகும்

49. செய்வன திருந்தச் செய்

செய்யும் காரியங்களைச் செவ்வையாகச் செய்யவேண்டும்.

50. சேரிடம் அறிந்து சேர்

சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேரவேண்டும்.

51. சை எனத் திரியேல்

மற்றவர் இகழும்படி நடந்துகொள்ளக் கூடாது.

52. சொல் சோர்வு படேல்

மற்றவருடன் பேசும்பொழுது மனம் தளர்ந்து பேசக்கூடாது.

53. சோம்பித் திரியேல்

முயற்சி இன்றி சோம்பேறித்தனமாக ஊர் சுற்றக்கூடாது.

54. தக்கோன் எனத் திரி

கௌரவமானவன் என்று பிறர் கருதும்படி நடக்க வேண்டும்.

55. தானமது விரும்பு

ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

56. திருமாலுக்கு அடிமை செய்

மகாவிஸ்ணுவுக்கு சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும்

57. தீவினை அகற்று

பிறருக்குத் தீமை உண்டாகும் செயல்களைச் செய்யக்கூடாது.

58. துன்பத்திற்கு இடம் கொடேல்

மனம் வருந்தும்படி நடந்து கொள்ளக்கூடாது

59. தூக்கி வினைசெய்

எந்தக் காரியத்தையும் நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும்

60. தெய்வம் இகழேல்

கடவுளை இகழ்ச்சியாகப் பேசக்கூடாது.

61. தேசத்தோடு ஒத்து வாழ்

தன் நாட்டு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழவேண்டும்.

62. தையல் சொல் கேளேல்

மனைவியின் இழிந்த சொற்களைக் கேட்டு அதன்படி நடக்கக்கூடாது.

63. தொண்மை மறவேல்

பழமையான காரியங்களை மறந்து விடக்கூடாது.

64. தோற்பன தொடரேல்

தோல்வி உண்டாகும் எனத்தெரிந்தும் அதில் ஈடுபடக்கூடாது.

65. நன்மை கடைப்பிடி

நற்காரியங்களை உறுதியாகச் செய்து வரவேண்டும்.

66. நாடு ஒப்பன செய்

நாட்டு மக்கள் ஒப்புக்கொள்ளத்தக்க காரியங்களைச் செய்ய வேண்டும்

67.நிலையில் பிரியேல்

மதிப்போடு இருந்து விட்டுக் கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது.

68. நீர் விளையாடேல்

ஆபத்தான் வெள்ளத்தில் நீந்தி விளையாடக்கூடாது.

69. நுண்மை நுகரேல்

நோயைத் தரக்கூடிய ஆகாரங்களை உண்ணக் கூடாது.

70. நூல் பல கல்

அறிவு வளர்ச்சிக்கான நூல்களை அதிகமாகப் படிக்க வேண்டும்.

71. நெல் பயிர் விளை

நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

72. நேர்பட ஒழுகு

நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும்.

73. நைவினை நணுகேல்

இதழ்ச்சியான காரியங்களைச் செய்யக்கூடாது.

74. நொய்ய உரையேல்

பிறர் மனம் புண்படும் படியான வார்த்தைகளைக் கூறவேண்டாம்.

75. நோய்க்கு இடம் கொடேல்

நோய் உடலில் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

76. பழிப்பன பகரேல்

பிறர் பழிக்கும்படியான இழிவான சொற்களைக் கூற வேண்டாம்.

77. பாம்பொடு பழகேல்

பாம்போடு விளையாடுவது உயிருக்கு ஆபத்து.

78. பிழைபடச் சொல்லேல்

தவறான கருத்து ஏற்படும் சொற்களைச் சொல்ல வேண்டாம்.

79. பீடு பெற நில்

பெருமைப்படத்தக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும்

80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

புகழ்மிக்க பெரியார்களை வணங்கி, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும்.

81. புூமி திருத்தி உண்

நிலத்தைப் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும்.

82. பெரியாரைத் துணைக் கொள்

அறிவு மிகுந்த ஒழுக்க சீலர்களை அணுகி, அவர்களின் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும்.

83. பேதைமை அகற்று

மூடத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது.

84. பையலோடு இணங்கேல்

அறிவற்ற சிறுவனோடு பழகக் கூடாது.

85. பொருள் தனைப் போற்றி வாழ்.

பொருள்களையும், செல்வத்தையும் கவனமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டு வாழ வேண்டும்.

86. போர்த் தொழில் புரியேல்.

வீணாக சண்டை சச்சரவுகளில் தலையிட வேண்டாம்.

87. மனம் தடுமாறேல்.

மனம் கலங்கி, செய்வது அறியாது தடுமாற வேண்டாம்.

89. மிகை படச் சொல்லேல்

அளவுக்கு மீறிய சொற்களைச் சொல்லக் கூடாது.

90. மீதூண் விரும்பேல்

அளவுக்கு அதிகமான உணவை உண்ண வேண்டாம்.

91. முனை முகத்து நில்லேல்.

போர் முனையில் ஆயுதம் இல்லாமல் நிற்கக்கூடாது.

92. மூர்க்கரோடு இணங்கேல்.

அறிவு இல்லாத மூடர்களோடு சேரக்கூடாது.

93. மெல்லி நல்லாள்தோள் சேர்

வீட்டிலே நல்ல மனைவியோடு இணைந்து வாழவேண்டும்

94. மேன் மக்கள் சொல் கேள்.

உயர் குணமிக்க பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் நன்மை உண்டாகும்.

95. மைவிழியார் மனை அகல்.

மயக்கும் விலை மாதர் வீட்டுக்குப் போக வேண்டாம்.

96. மொழிவது அற மொழி

சொல்லக் கூடியதை சந்தேகமின்றி தெளிவாகக் கூற வேண்டும்.

97. மோகத்தை முனி

ஆசையை வெறுத்து அடக்க வேண்டும்.

98. வல்லமை பேசேல்

உன்னுடைய திறமையை நீயே புகழ்ந்து கொள்ளக் கூடாது.

99. வாது முற்கூறேல்

வலியச் சென்று யாரையும் விவாதங்களுக்குக் கூப்பிடக் கூடாது.

100. வித்தை விரும்பு

கல்வி முதலான கலைகளை ஆசையோடு கற்றுக் கொள்ள வேண்டும்.

101. வீடு பெற நில்

முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

102. உத்தமனாய் இரு

நற்குணம் உள்ளவனாக வாழ வேண்டும்.

103. ஊருடன் கூடிவாழ்

ஊர் மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும்.

104. வெட்டெனப் பேசேல்

யாரிடமும் கடுமையான சொற்களைக் கூறக்கூடாது.

105. வேண்டி வினை செயேல்

வேண்டும் என்றே எவருக்கும் தீமை செய்யக் கூடாது.

106. வைகறைத் துயில் எழு

அதிகாலையில் விழித்து எழுவது சிறப்புடையதாகும்.

107. ஒன்னாரைத் தேறேல்.

எதிரிகளிடம் நம்பிக்கை கொள்ளக் கூடாது.

108. ஓரம் சொல்லேல்

ஒருதலைப் பட்சமாகக் கூறக் கூடாது :roll: :roll:
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 03-28-2004, 12:02 AM
[No subject] - by Eelavan - 03-28-2004, 02:47 AM
[No subject] - by Paranee - 03-28-2004, 05:03 AM
[No subject] - by Kanani - 03-28-2004, 01:22 PM
[No subject] - by sWEEtmICHe - 03-29-2004, 08:28 AM
[No subject] - by sWEEtmICHe - 03-29-2004, 09:07 AM
[No subject] - by sOliyAn - 03-29-2004, 12:58 PM
[No subject] - by Eelavan - 03-29-2004, 01:58 PM
[No subject] - by Mathan - 03-29-2004, 01:59 PM
[No subject] - by sWEEtmICHe - 03-31-2004, 11:56 AM
[No subject] - by Mathan - 03-31-2004, 12:23 PM
[No subject] - by sWEEtmICHe - 03-31-2004, 12:40 PM
[No subject] - by sWEEtmICHe - 03-31-2004, 12:44 PM
[No subject] - by Paranee - 03-31-2004, 01:18 PM
[No subject] - by sWEEtmICHe - 03-31-2004, 03:07 PM
[No subject] - by sWEEtmICHe - 03-31-2004, 03:08 PM
[No subject] - by vallai - 03-31-2004, 03:48 PM
[No subject] - by sWEEtmICHe - 06-02-2004, 06:47 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)