03-31-2004, 01:17 PM
[quote=kuruvikal]நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடமைகள் பறிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக வெளியேற்றம்
கருணா குழுவினரின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பரிதாபகரமாக வெளியேறும் பிரதேசவாதக் கறை படிந்த நிகழ்வு எம் கண்முன்னால் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பல நகரங்கள் சோபை இழந்து பதற்றநிலையிலுள்ளன.
வர்த்தகர்கள் வெளியேறிய வீடுகளில் கொள்ளைகள் இடம் பெறுகிறது.
செங்கலடியிலிருந்து வெளியேற்றப்பட்ட வர்த்தகர்களின் கடைகள் முழுவதும் சூறையாடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பலர் தம்மோடு ஒன்றாக வாழ்ந்தவர்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியாது கலங்கி நிற்பதுடன் கருணா குழுவைச் சேர்ந்தவர்களுடன் வாக்கு வாதங்களிலும் ஈடு;பட்டுவருகின்றனர்.
இசுலாமியர்களின் கடைகள் மட்டுமே இன்று மட்டுநகரில் திறந்து காணப்படுகின்றன.
இந்த நிகழ்வுகண்டு இசுலாமியர்கள் வாழும் பகுதிகள் பரபரப்பாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து இசுலாமியர்கள் வெளியேற்றப்பட்டதைப் பற்றி இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். மட்டக்களப்பு வர்த்தகத்தில் இசுலாமியர்களின் கைகள் மேலும் பலப்படும் என்றும் இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். எதிர்வரும் தேர்தலிலும் தமிழர்களின் குறைவான வாக்களிப்பு வீதம் இசுலாமியர்களுக்கே சாதகமாக அமையும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.
சிறிலங்கா காவல்துறை எதுவும் செய்யாதிருக்க இந்த மக்கள் வெளியேற்றம் நடைபெறுகிறது.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காவல்துறையினரைக் கட்டுப்படுத்திவருவது கண்கூடாகத் தெரிகிறது.
இது புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிட்டுக் கொடுக்கப்பட்டது போலவே தோன்றுகிறது என்று ஒரு பிரமுகர் தெரிவித்தார்.
31.03.2004
யார் இந்தச் சத்தியமூர்த்தி?
நேற்று மட்டக்களப்பில் ராஜன் சத்தியமூர்த்தி எனும் வேட்பாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் நீண்ட காலமாகத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நின்ற ஒருவரல்ல.
நீண்டகாலமாகப் பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் அங்கத்தவராக இருந்து பின்னர் கருணா அம்மானின் உள்வட்டத்திற்குள் துரிதமாக வந்துசேர்ந்தவர்.
இவ்வளவு விரைவாகவும் ஆச்சரியம் தரத்தக்கவகையிலும் இவர் கருணாவின் நம்பிக்கைக்குரிய சகாவாக மாறியதையிட்டு, கருணா விவகாரம் எழுவதற்கு முன்னரேயே கதைகள் உலாவியதுண்டு.
ஆனாலும், கருணா மட்டத்திலான உயர் இரகசிய தொடர்புகளில் ஒன்றாகவே பலரும் இதனைக் கருதிவந்தனர்.
சமாதானக் காலத்தில் கருணாவின் வியாபாரத் தொடர்பாளராகவும் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்ட இவர் கருணாவின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிதிமோசடிகளில் சம்பந்தமுடையவர் என சில நாட்களுக்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன.
சமாதான காலங்களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்குப் பின்னணியில் நின்று செயற்பட்ட இவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து கருணா பெற்றுவந்த முதலீடுகளோடு சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகமும் இங்கு பரவலாக உள்ளது.
சத்தியமூர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது கையாட்களின் பேரில் செய்யப்பட்ட முதலீடுகள் கையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக கருணா குழுவினர் குறிப்பிட்ட நபர்களை கடுமையாக அவதானித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சத்தியமூர்த்தியைக் கொலைசெய்தவர்கள் அவரோடு சில தினங்களாக நெருங்கிப் பழகியவர்கள் என்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாகவே தோன்றியதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.
இவரது மரணத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண வர்த்தகர்களை 500 ரூபா பணத்துடன் வெளியேறுமாறு ஆணையிடுவதன்மூலம் சத்தியமூர்த்தியைச் சார்ந்தோரின் கோபத்தை யாழ்ப்பாண மக்கள் மீது திசைதிருப்பிவிட்டு பிரதேசவாதத்தை வளர்க்க முற்படுவதுபோலத் தெரிகிறது.
எது எப்படியாயினும் சத்தியமூர்த்தியின் மரணம் கருணா அம்மானுக்குப் பேரிடியாகவே அமையும் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.
31.03.2004
திட்டமிட்ட ஒழுக்கு?
தமிழர்களின் பலம் அவர்கள் ஒரு தேசிய அணியாக ஒன்றி நிற்பதே. இதை உடைக்கவேண்டும் என்ற ஆர்வமும், அதைச்செய்யவல்ல சக்தியும் சந்திரிகா அம்மையார் போன்ற அரசியல்வாதிகளையும் விட ஆபத்தான எதிரிகளான புலனாய்வுத் துறைகளிடமும் இராணுவ சூழ்ச்சிதாரிகளிடமும் பேரினவாத ஊடகவியலாளர்களிடமும் உள்ளது. இவர்கள் படிப்பது எதிர்ப்போராட்ட வழிகாட்டி நு}ல்களையாகும்.
பலவீனங்கள் இல்லாத ஒருவரை வெல்ல வேறு வழியில்லாதவிடத்து ஒருவரின் பலத்தையே அவரின் பலவீனமாக்கி, அந்தப் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாக்குவதே போரியல் வெற்றிகளைத் தீர்மானிப்பதாக அமையும் என்ற ஆலோசனையை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தும் எதிர்ப்போராட்ட கையேடு ஒன்றில் காணமுடிகிறது.
சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டில் கருணா அம்மானும் பிரசன்னமாகியிருந்ததைக் கண்ட சிங்களப் பேரினவாத ஊடகவியலாளனான பந்துல ஜெயசேகர என்பவன் இரண்டுவருடங்களுக்கு முன்பே குறுக்குத்தனமாகச் சிந்தித்து கருணா அம்மான ஒரு நாள் கிழக்கைப் பிரிக்க முயற்சிசெய்வார் என்பதாக எழுதியிருந்தான். இதை 2002ம் ஆண்டு ஜூலை 5ம் திகதியன்று ப்ரான்ட் லைன் எனப்படும் ஆங்கில சஞ்சிகையில் எழுதியிருந்தான். இந்தக் கட்டுரையில் கருணா அம்மான் தன்னை முதன்மைப்படுத்தப்போகிறார் என்பதற்கான பலவிதமான சமிக்ஞைகளையும் தெரிவித்திருந்தான். இந்தக் கட்டுரை இப்போதும் இணையத்தில் காணப்படுகிறது.
தனது எதிர்வு கூறல் பலித்துவிட்டதை இவன் அண்மையில் மீண்டும் எடுத்துக்காட்டி மார்தட்டிக் கொண்டதை ஆங்கில ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசித்துவரும் பலரும் அறிந்திருப்பர்.
கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.
பந்துல ஜெயசேகர தனது ஊகத்தில் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கலாம் என்று உங்களுக்கு நம்பத்தோன்றுகிறதா?
சிலவேளை இருக்கக்கூடும்!
அல்லது புலனாய்வுச் சக்திகளின் சிந்தனைப்போக்கை கிரகித்துக்கொண்டு அந்த ஊடகவியலாளன் அதை அன்றே எழுதியிருத்தல்கூடுமா? இதற்கான சந்தர்ப்பமும் அதிகம்!
ஏன்? அவ்வாறு எழுதியது புலனாய்வுச் சக்திகளின் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூட இருந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றவில்லையா?
நாம் இதுபோன்ற செய்திகளை வாசித்துவிட்டு, "யாரோ விசரன் எழுதுகிறான்" என்றுவிட்டுப் போய்விடுகிறோம். எதிரிகளின் இவ்வாறான உத்திகள் வேலைசெய்யாது என்று விடுதலையை நேசிக்கின்ற நாம் எளிதாகக் கருதிவிடுகிறோம்.
ஏன் எதிரிகள் கூட இவ்வாறான உத்திகள் வேலை செய்யும் என்று நம்புவதில்லையாம்! இதை அவர்களின் கையேடு எச்சரிக்கிறது.
நம்பாத போதிலும் ஏன் இப்படி எழுதினார்கள்?
இராணுவ, மனோவியல் வல்லுநர்களால் நூற்றுக்கணக்கான போர்களையும் பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களையும் ஆராய்ந்து, படித்து வகுக்கப்பட்ட எதிர்ப்போராட்ட பாடம் "நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வாறான உத்திகளைத் தொடர்ந்து கையாளவேண்டும்" என்கிறது.
இதைத் "தூண்டில் போடும்" செய்கையுடன் இந்த இரகசியக் கையேடு ஒப்பிடுகிறது.
"மீன் பிடிபடாது என்று சொல்லப்படுகிற இடங்களிலும் தூண்டில் போட்டு வைக்கவேண்டும்" என்று அதை மேலும் விளக்குகிறது.
ஏனெனில், "சிக்காது என்கிற இடத்தில் தான் சிக்காத மீன் சிக்கும் வாய்ப்பு அதிகம்" என்கிறது அந்தக் கைநூல்.
மனோதத்துவ ரீதியாக மனித மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும், அதிலும் குறிப்பாக ஒரு இராணுவ மனிதனின் மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும் இந்த மனோதத்துவ இராணுவக் கையேடு; ஆராய்கிறது.
சில எண்ணங்களை புலனாய்வுத்துறை திட்டமிட்டு ஊடகங்களுக்கூடாகத் திட்டமிட்ட ஒழுக்குகளாக விதைக்கவேண்டும் என்றும் இந்தக் கையேடு அறிவுறுத்துகிறது. எனவே பந்துலவின் கடடுரை இவ்வாறான ஒரு திட்டமிடப்பட்ட ஒழுக்கு என அனுமானிக்க இடமுண்டு.
இவைதான் இன்று தமிழலை நிழற்பதிப்பில் வந்த செய்திகள்....!
இங்கு மேலே போட்டப்பட்டது எப்போ தமிழலை நிழற்பதிப்பில் வந்ததென்பதை குறிப்பிட்ட செய்தியை இங்கு ஒட்டியவர் குறிப்பிடுவாரா.
தமிழ் அலை நிழற்பதிப்பில் வந்தவை <b>நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு</b> என்றும் <b>மற்றயவை நன்றி - தமிழ் அலை</b> என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன,

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>