03-31-2004, 01:04 PM
BBC Wrote:BBC Wrote:மக்கள் சேவகனை மட்டு மண் இழந்து தவிக்கின்றது.
<span style='color:red'>*****தமிழலையின் செய்தி வந்த இடம்...மேலே செய்தி உள்ளது....! குறிப்பிட்ட நபரின் செய்தியாக...!******
</span>
நன்றி - தமிழ் அலை
யார் இந்தச் சத்தியமூர்த்தி?
நேற்று மட்டக்களப்பில் ராஜன் சத்தியமூர்த்தி எனும் வேட்பாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் நீண்ட காலமாகத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நின்ற ஒருவரல்ல.
நீண்டகாலமாகப் பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் அங்கத்தவராக இருந்து பின்னர் கருணா அம்மானின் உள்வட்டத்திற்குள் துரிதமாக வந்துசேர்ந்தவர்.
இவ்வளவு விரைவாகவும் ஆச்சரியம் தரத்தக்கவகையிலும் இவர் கருணாவின் நம்பிக்கைக்குரிய சகாவாக மாறியதையிட்டு, கருணா விவகாரம் எழுவதற்கு முன்னரேயே கதைகள் உலாவியதுண்டு.
ஆனாலும், கருணா மட்டத்திலான உயர் இரகசிய தொடர்புகளில் ஒன்றாகவே பலரும் இதனைக் கருதிவந்தனர்.
சமாதானக் காலத்தில் கருணாவின் வியாபாரத் தொடர்பாளராகவும் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்ட இவர் கருணாவின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிதிமோசடிகளில் சம்பந்தமுடையவர் என சில நாட்களுக்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன.
சமாதான காலங்களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்குப் பின்னணியில் நின்று செயற்பட்ட இவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து கருணா பெற்றுவந்த முதலீடுகளோடு சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகமும் இங்கு பரவலாக உள்ளது.
சத்தியமூர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது கையாட்களின் பேரில் செய்யப்பட்ட முதலீடுகள் கையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக கருணா குழுவினர் குறிப்பிட்ட நபர்களை கடுமையாக அவதானித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சத்தியமூர்த்தியைக் கொலைசெய்தவர்கள் அவரோடு சில தினங்களாக நெருங்கிப் பழகியவர்கள் என்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாகவே தோன்றியதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.
இவரது மரணத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண வர்த்தகர்களை 500 ரூபா பணத்துடன் வெளியேறுமாறு ஆணையிடுவதன்மூலம் சத்தியமூர்த்தியைச் சார்ந்தோரின் கோபத்தை யாழ்ப்பாண மக்கள் மீது திசைதிருப்பிவிட்டு பிரதேசவாதத்தை வளர்க்க முற்படுவதுபோலத் தெரிகிறது.
எது எப்படியாயினும் சத்தியமூர்த்தியின் மரணம் கருணா அம்மானுக்குப் பேரிடியாகவே அமையும் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.
நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு
<span style='font-size:23pt;line-height:100%'>இங்கு தடை செய்யப்பட்ட தமிழ் அலையின் செய்தி திட்டமிட்டு வேறொரு பரிமானத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது...! கள நிர்வாகம் இது தொடர்பில் கவனிக்க....!</span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

