03-31-2004, 01:03 PM
வடக்கு கிழக்கு பிரதேச மக்களுக்கு பொதுத் தேர்தல் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என பவ்ரல் அமைப்பு தெரிவிப்பு
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ புதன்கிழமை, 31 மார்ச் 2004, 10:13 ஈழம் ஸ
எதிர்வரும் பொதுத் தேர்தலானது குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (பவ்ரல்) தெரிவிக்கின்றது.
அப்பிரதேசத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கானோர் 15 வருடங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக இம்முறை தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
எனினும் கடந்த சில தினங்களாக அந்த பிரதேசங்களில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு இடையூறு ஏற்படலாம் என அந்த நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.
கடந்த சில தினங்களாக இடம்பெற்ற சம்பவங்களில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். அத்துடன் மட்டக்களப்பு தெரிவத்தாட்சி அதிகாரியும் தாக்குதலுக்கு இலக்கானார்.
இதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு சகல தரப்பினரும் உதவ வேண்டும் என நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டிருப்பதாக கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நெவில் விஐயசிங்க கூறினார்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>