03-31-2004, 12:46 PM
நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடமைகள் பறிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக வெளியேற்றம்
கருணா குழுவினரின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பரிதாபகரமாக வெளியேறும் பிரதேசவாதக் கறை படிந்த நிகழ்வு எம் கண்முன்னால் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பல நகரங்கள் சோபை இழந்து பதற்றநிலையிலுள்ளன.
வர்த்தகர்கள் வெளியேறிய வீடுகளில் கொள்ளைகள் இடம் பெறுகிறது.
செங்கலடியிலிருந்து வெளியேற்றப்பட்ட வர்த்தகர்களின் கடைகள் முழுவதும் சூறையாடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பலர் தம்மோடு ஒன்றாக வாழ்ந்தவர்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியாது கலங்கி நிற்பதுடன் கருணா குழுவைச் சேர்ந்தவர்களுடன் வாக்கு வாதங்களிலும் ஈடு;பட்டுவருகின்றனர்.
இசுலாமியர்களின் கடைகள் மட்டுமே இன்று மட்டுநகரில் திறந்து காணப்படுகின்றன.
இந்த நிகழ்வுகண்டு இசுலாமியர்கள் வாழும் பகுதிகள் பரபரப்பாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து இசுலாமியர்கள் வெளியேற்றப்பட்டதைப் பற்றி இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். மட்டக்களப்பு வர்த்தகத்தில் இசுலாமியர்களின் கைகள் மேலும் பலப்படும் என்றும் இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். எதிர்வரும் தேர்தலிலும் தமிழர்களின் குறைவான வாக்களிப்பு வீதம் இசுலாமியர்களுக்கே சாதகமாக அமையும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.
சிறிலங்கா காவல்துறை எதுவும் செய்யாதிருக்க இந்த மக்கள் வெளியேற்றம் நடைபெறுகிறது.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காவல்துறையினரைக் கட்டுப்படுத்திவருவது கண்கூடாகத் தெரிகிறது.
இது புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிட்டுக் கொடுக்கப்பட்டது போலவே தோன்றுகிறது என்று ஒரு பிரமுகர் தெரிவித்தார்.
நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>