03-31-2004, 11:56 AM
சகோதர யுத்தத்திற்கு புலிகளின் தலைமை தயாரில்லை போராளிகளுக்கு செய்தியை அனுப்பியுள்ளோம் தேர்தலின் பின்னர் கிழக்கு நிலைமை சுமுகமாகும் என்கிறார் கரிகாலன்
(கிளிநொச்சியிலிருந்து அ.நிக்ஸன்)
தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகின்ற இடைக்கால தன்னாட்சி அதிகாரத்தை வலியுறுத்துகின்ற வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் அந்த வகையான தமிழ்த் தேசிய கடமையிலிருந்து தவறிவிடக்கூடாது என விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான சி.கரிகாலன் கேசரிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
சகோதர யுத்தம் ஒன்றை நடத்தும் நோக்கம் புலிகளின் தலைமைக்கு இல்லை. ஆனால் கருணா தனது ஆட்களுடன் வாகரை பிரதேசத்தில் அவ்வாறான ஒரு யுத்தத்திற்கு தயாராகி வருகின்றார். தற்செயலாக யுத்தம் ஒன்று நடைபெற்று கருணாவுடன் நிற்கும் போராளிகள் இறந்தால் அவர்கள் புலி உறுப்பினர்களாக கருதப்பட மாட்டார்கள். ஆனால் அவர்கள் கருணாவிற்கு எதிராக போரிட்டு சாவு அடைந்தால் புலி உறுப்பினர்களாகவே கருதப்படுவர் என்றும் கரிகாலன் கூறினார்.
கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் ஊடக செயலகத்தில் வைத்து கேசரிக்கு கரிகாலன் வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
பிரதேசவாதத்திற்கு கிழக்கு மாகாண மக்கள் ஆதரவில்லை. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சில வேட்பாளர்கள் தங்கள் வெற்றிக்காக பிரதேசவாதத்தை தூண்டி மக்களின் ஆதரவைப் பெற முற்படுகின்றார்கள். மக்கள் தனக்கு ஆதரவு இல்லையென்பது கருணாவிற்கு புரிந்து விட்டது. இதனாலேதான் தனக்கு சார்பாக நிற்கின்ற குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கருணா கேட்டிருக்கின்றார். ஆனால் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டதாக இல்லை.
<b>மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் </b>
இதனால் வாக்களிப்பு நடைபெறுகின்ற போது மக்களை பலாத்காரம் பண்ணி வாக்களிக்க அல்லது கள்ள வாக்கு போட முனையலாம். படுவான்கரை பிரதேச மக்களின் வாக்காளர் அட்டைகளை தபால் நிலையத்திலிருந்து கருணாவின் ஆட்கள் எடுத்துச் சென்றதாக அறிகின்றோம். ஆகவே கள்ளவாக்குகள் போடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே மக்கள் விழிப்பாக இருந்து தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். அந்த நிலை உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகின்ற இடைக்கால தன்னாட்சி அதிகாரத்தை வலியுறுத்துகின்ற வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆகவேதான் தமிழ்த் தேசியத்தை உறுதிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மக்கள் வாக்களிக்க வேண்டும். அந்த நிலை உருவாகவேண்டும்.
<b>உண்மை நிலை போராளிகளுக்கு தெரியவில்லை </b>
சகோதர யுத்தம் ஒன்றிற்கு கருணா தன்னை தயார்படுத்தி வருகின்றார். அதற்கான சூழலை உருவாக்கியுள்ளார். வாகரையில் காவலரண்களை அமைத்து போராளிகளையும் நிறுத்தி வாகரையை ஒரு யுத்த சூழ்நிலைக்குள் கொண்டு வந்துள்ளார். தலைவர் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார். வன்னியில் இருந்து ஒரு தீர்வு வரும் அல்லது எங்கள் எல்லோரையும் அழித்து விடுவார்கள். அதற்காகவே நாங்கள் யுத்தத்திற்கு தயாராக இருக்கவேண்டும் என்று கருணா வாகரை மக்களுக்கும் போராளிகளுக்கும் சொல்லி வைத்திருக்கின்றார். உண்மையான நிலைமை அங்குள்ள போராளிகளுக்கு தெரியவில்லை.
உண்மையான நிலைமையை போராளிகளுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக நாங்கள் ஒரு செய்தியை அனுப்பியுள்ளோம். அங்குள்ள பெற்றோர்களும் கருணாவிடம் போய் தங்கள் பிள்ளைகளை மீள ஒப்படைக்குமாறு கேட்கிறார்கள். தேசியத் தலைவரின் கீழ் போராடவே பிள்ளைகளை அனுப்பினோம். தமிழ்த் தேசியத்திற்காகவே எமது பிள்ளைகள் போராட வேண்டும். உங்களின் தலைமையின் கீழ் போராட நாங்கள் பிள்ளைகளை அனுப்பவில்லை என பெற்றோர் கேட்கிறார்கள்.
ஆனால் கருணா பெற்றோரிடம் இது ஒரு சிறு பிரச்சினை. விரைவில் முடிவுக்கு வரும். அதன் பின்னர் நான் நல்ல பதில் கூறுகின்றேன். அல்லது தேர்தல் முடிந்த பின்னர் கூறுகின்றேன் என்று சொல்லி சமாளித்திருக்கின்றார். ஆகவே தேர்தல் முடிவு கருணாவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவரலாம்.
கருணாவின் எதிர்பார்ப்பு தேர்தல் முடிவுதான். ஆகவே நாங்களும் தேர்தல் முடிந்த பின்னர் ஒரு மாற்றத்தை கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கின்றோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே போட்டியிடுகின்றது. தேர்தல் முடிவடைந்த பின்னர் ஒரு சில உறுப்பினர்கள் வேறுவிதமான கொள்கைகளை கடைப்பிடித்தால் அது குறித்து கட்சி நடவடிக்கை எடுக்கும். தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக எவரும் செயற்பட்டால் மக்கள் அதனை விரும்பமாட்டார்கள். நாங்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம். எவ்வாறாயினும் மக்கள் அவ்வாறானவர்களை இந்த தேர்தலில் நிராகரிக்க வேண்டும்.
<b>தனிப்பட்ட முறையில் தொடர்பு </b>
இராணுவம் கருணாவுடன் நட்பு ரீதியான ஒரு தொடர்பை மட்டுமே வைத்திருக்கின்றது. அரசாங்கத்தின் உதவியோடு இல்லாமல் தனிப்பட்ட முறையில்தான் இராணுவம் கருணாவோடு தொடர்பு கொண்டிருக்கின்றது. எமது போராட்டத்தை சிதைக்கின்ற நோக்கத்தில் தான் கருணாவை ஒரு உத்தியாக பயன்படுத்துகின்றது. கருணாவை வைத்துக் கொண்டு எமது போராட்டத்தை பலவீனப்படுத்த இராணும் முயற்சிக்கலாம். அவ்வாறு பயன்படுத்திவிட்டு கருணாவை கடைசியில் இராணுவம் கைவிடும் நிலையும் வரலாம். புளொட் மோகன் மாதிரி பயன்படுத்துவதற்கும் இராணுவம் நடவடிக்கை எடுக்கலாம்.
கருணாவினுடைய செயற்பாடுகளை பார்க்கும் போது அவ்வாறுதான் தெரிகின்றது. அப்படி ஒரு சூழ்நிலை வருமானால் அவ்வளவு போராளிகளும் பாதிக்கப்படுவார்கள். அதனால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்கள் அனைவருமே கருணாவை எதிர்க்கின்ற ஒரு நிலைதான் ஏற்படும்.
கிழக்கு மாகாணம் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டது. குறிப்பாக குடியேற்றத்திட்டம் தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. பதியதலாவ வரையும் தமிழ் மக்கள் குடியிருந்தவர்கள். மகா ஒயாவிலும் தமிழ் மக்கள் இருந்திருக்கிறார்கள். இவையெல்லாம் 1983ஆம் ஆண்டு கலவரத்தில் பேரினவாதிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள்; தமிழ் மக்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டார்கள். கிழக்கு மாகாணத்தில்தான் கூடுதலான பிரதேசம் பறி போயிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டம் கூடுதலாக ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டது.
<b>கருணா ஒளிந்திருக்க காடு கூட இருந்திருக்காது </b>
ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட மட்டக்களப்பு மக்கள் இன்று கரைகடந்திருப்பதற்கு காரணம் எமது தேசியத் தலைவரின் தலைமையிலான போராட்டம்தான். இந்த போராட்டம் இல்லையென்றால் இன்று கருணா இருக்கின்ற பிரதேசமே இருந்திருக்காது. கருணா ஒளிந்திருப்பதற்கு அங்கு காடு கூட இருந்திருக்காது. ஆனால் கருணா இன்று அதனை மறந்துவிட்டார். திட்டமிடப்பட்ட குடியேற்றத்தை விட அபிவிருத்தி பிரச்சினைதான் கருணாவிற்கு பெரிதாக படுகின்றது.
திட்டமிட்ட குடியேற்றம்தான் ஒரு இனத்தை அழிப்பதற்கான பிரதான காரணி. பிரதேசம் இல்லையென்றால் மக்கள் வாழ முடியாது. அதனைத் தடுப்பதற்குத்தான் விடுதலைப் போராட்டம். அதன் மூலமே எமது பிரதேசங்களை தக்கவைத்துக் கொள்ளலாம். கருணாவிற்கு சலுகைகள் எதனையும் தலைவர் கொடுக்கவில்லை. அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார். ஆற்றல் உள்ளவர் என்ற அடிப்படையிலும் இக்கட்டான கால கட்டங்களில் பக்கபலமாக நின்று செயற்பட்டவர் என்ற ரீதியிலும் 1987ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பை நிர்வகிப்பதற்கு அனுமதியளித்திருக்கின்றார். இடை இடையே அவரை அழைத்து தலைவர் ஆலோசனையும் வழங்கியிருந்தார். அந்தளவிற்கு நம்பிக்கையிருந்தது.
<b>தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை</b>
ஆனால் அவரைப்பற்றிய குற்றச்சாட்டுகளை ஏனைய பொறுப்பாளர்கள் சொன்னபோதுகூட தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைக்கும் அந்தப் பொறுப்பாளர்கள் சொல்லுவார்கள் கருணாவை பற்றி பேசுவது என்றால் எனக்குகிட்ட வராதே என்று தலைவர் கூறுவாராம். அந்தளவிற்கு கருணா மீது விசுவாசம் இருந்திருக்கின்றது. கடைசி நேரத்தில் கூட கருணா தலைவரை சந்தித்திருந்தால் மன்னித்துவிட்டு மீண்டும் அந்த பொறுப்புக்களை தலைவர் ஒப்படைத்திருப்பார். ஏன் இந்த முடிவை கருணா எடுத்தார் என்று தலைவரினால் ஜீரணிக்க முடியாமல உள்ளது. தான் செய்த தவறுகளை தலைவர் அறிந்து விட்டார். எப்படி அவரின் முகத்தை பார்ப்பது என்ற ஒரு கூச்ச உணர்வு கருணாவிற்கு ஏற்பட்டிருக்கலாம்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>