03-31-2004, 11:51 AM
எதிரியின் எதிரி நண்பன் என்ற முறையில் கருணாவை அணுகும் சில சக்திகள்
கருணாவின் செயற்பாடுகள் பற்றிய முழுவிபரங்களையும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விபரமாக எடுத்துக் கூறிவிட்டது. இவருடைய தமிழர் விரோதச் செயல்கள் தமிழர் வரலாற்றில் அதிமுக்கிய கறைபடிந்த சருக்கமாக வெளிவரும்.
இவர் செய்த மிக மோசமான மன்னிக்க முடியாத குற்றம் யாதெனில், பிரபாகரன் இவருக்குக் காட்டிய 'பெருந்தன்மையை" இவர் உதாசீனம் செய்து அவருடைய படத்தை எரிக்க உத்தரவு கொடுத்தது. இந்தக் கொடூரச் செயலை தன்மானமுள்ள எந்தத் தமிழ் இளைஞனும், யுவதியும் மன்னிக்க மாட்டார்கள். தமிழர் சரித்திரத்தில் அமரத்துவமடைந்த ஆனந்தகுமாரசாமி கலையுலகில் புகழைப் பெற்றார். ஆறுமுகநாவலர் சைவ உலகில் புகழைப் பெற்றார். ஆனால், பிரபாகரன் இராணுவ விய10கங்களை அமைப்பதிலும், விடுதலைத் தியாகத்தையும் இராஜதந்திரத்திலும் இவருடைய புகழ் முழு உலகத்திலும் பரவிவிட்டது.
கருணா அநேக வருடங்களாகத் தனது கொடுமையான தமிழ் விரோத சக்தியை வளர்த்திருக்கின்றாரென்பது இப்பொழுது தெரிய வந்துவிட்டது. அவர் செய்த தமிழ் விரோத செயற்பாடுகளை மறைப்பதற்கு ஒரு மாயையை உருவாக்கிவிட்டார். அதுதான் 'பிரதேசவாதம்". மட்டக்களப்பு மாவட்டம் ஒரு பின்தங்கிய மாவட்டமென்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அண்மையில்தான் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்கள், மாணவிகள் தங்கள் பிரதேசம் பின்தங்கிய பிரதேசமென்ற காரணத்துக்காகக் கல்வி விடயங்களில் அதற்கு உகந்தவாறு அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விட்டனர். கருணா தான் உண்டாக்கிய போலி மாயையில் வடக்கு வளர்கின்றது, கிழக்கு தேய்கின்றது என்று உண்மைக்கு முரண்பாடான கொள்கையை உருவாக்கிவிட்டார்.
இருபது வருடகால யுத்தத்தில் ஆரம்பத்தில் வடக்கில் தான் துப்பாக்கி ஏந்தி சிங்கள இராணுவத்தை எதிர்த்தனர். வடக்கு முற்றாக அழிக்கப்பட வேண்டுமென்பதுதான் சிங்கள இராணுவத்தின் முதல் இலக்கு. இதில் சிங்கள இராணுவம் வெற்றியடைந்தது. தெற்காசியாவில் மிகவும் புகழ்பெற்ற நூல் நிலையம் யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்டது. கடந்த ஐம்பது வருடகாலமாக யாழ்ப்பாணத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கிய சாவகச்சேரி சுடுகாடானது போல் தெற்காசியாவில் ஒரு இடத்திலும் நடைபெறவில்லை. வட பிராந்தியத்தில் இன்று புகையிரதப் போக்குவரத்து இல்லை. யாழ். மாவட்டத்தில் மாத்திரம் சனத்தொகையில் ஐம்பது வீதம் பேர் வேறு இடங்களுக்கு அகதிகளாகப் போய்விட்டார்கள். வடக்கில் 85 வீதத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டன.
இத்தருணத்தில் உலக வங்கி சேகரித்த புள்ளிவிபரங்களை நாம் அவதானிப்பது மிகவும் அவசியம். வட கிழக்கில் மூன்று இலட்சத்து இருபத்தையாயிரம் வீடுகள் சேதமாக்கப்பட்டன. யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டன. ஏனைய மாவட்டங்களைச் சேர்த்தால் இரண்டு இலட்சத்துக்கு மேல் அதிகாமாக இருக்கும். வடக்கிற்கு தரைமார்க்கமாகவே பயணம் செய்தால் இந்தச் சேதங்களைப் பற்றி நன்கு அறியமுடியும்.
இப்படியான சேதங்களை மட்டக்களப்பு எதிர்கொண்டதா என நாம் கருணாவை கேட்கவிரும்புகின்றோம். பள்ளிக்கூடங்கள், ஐந்நூறுக்கு மேற்பட்ட பாடசாலைகள் சேதமாக்கப்பட்டன. ஆகவே புள்ளிவிபர அடிப்படையில் வடக்கு எதிர்கொண்ட சேதங்கள் கிழக்கிலும் பார்க்க மிகவும் மோசமானவை.
கருணா, மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களை விடுதலைப்புலிகள் ஓரங்கட்டுவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் சொல்லுகின்றார். அதற்கு ஆதாரமாக புள்ளிவிபரங்களை எடுத்துக் கூறமுடியுமா? விடுதலைப் புலிகள் இயக்கம் தங்களுடைய அபிலாiர்களை இன்னும் நிறைவேற்றவில்லை. அபிலாiர்கள் முழுமையாக நிறைவேற்றிய பின்பு நிரந்தர சமாதானம் ஏற்பட்ட பின்பு விடுதலைப் புலிகளுடைய சகல அமைப்புகளும் அரசியல், பொருளாதாரம், சமூக துறைகளில் மட்டக்களப்பு, அம்பாறையில் பாரபட்சம் காட்டப்பட்டால் அது கண்டனத்துக்குரிய விடயமாகும். ஆனால், பிரபாகரன் நேர்மை, நீதி, திறமை என்ற அடிப்படை அமைப்பில்தான் அவருடைய இராணுவ அமைப்புகளை செயல்படுத்துகின்றார். கருணாவினுடைய திறமை அடிப்படையில் தான் அவருக்கு இராணுவ உயர்ச்சி ஏற்பட்டது. ஆனால், அவர் இப்பொழுது அவருடைய திறமையையும் மறந்து, பொதுநலத்தையும் மறந்து தனது சொந்த சுயநலத்துக்காக பாடுபடுகின்றார். ஆகவே தமிழினம் இவரது சுயநலத்தை மன்னிக்க முடியாது.
வடக்கில்தான் யுத்தம் நடந்தபடியினால் விடுதலைப் புலிகளுடைய இராணுவத் தேவைகளுக்கு மட்டக்களப்பு, அம்பாறையிலுள்ள விடுதலைப் புலி வீரர்கள் வடக்குக்கு அழைக்கப்பட்டனர். இந்த நிகழ்வை கருணா தம்பட்டமடிப்பது நியாயமற்றது. நேர்மையற்றது. மட்டக்களப்பில் பெருமெடுப்பில் யுத்தம் நடந்திருந்தால் நிச்சயம் பிரபாகரன் அதற்குத் தேவையான புலி வீரர்களை வடக்கிலிருந்து அனுப்பியிருப்பார்.
கிழக்கில் ஏன் யுத்தம் நடைபெறவில்லை என்பதை கருணா அறிவாரா? என்ற கேள்வி நிச்சயம் எழுகின்றது. இதற்குக் காரணம் யாதெனில், வடக்கிலுள்ள தமிழர்களையும், வடக்கிலுள்ள விடுதலைப் புலிகளையும் முழுமையாக அழித்த பின்புதான் கிழக்கிலுள்ள தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் அழிக்கவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள இராணுவத்துக்குண்டு. இன்னொரு காரணமும் கிழக்கில் யுத்தம் நடைபெறாததற்கு உண்டு. கிழக்கில் சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் அறுபது வீதத்துக்கும் மேல் வாழ்கின்றனர். கிழக்கில் யுத்தம் நடந்தால் இந்த இரு சமூகத்தினரும் பாதிக்கப்பட்டு தெற்கு இலங்கையில் அரசியல் பிரச்சினை உருவாகுமென்ற ஒரு பீதி இருந்தது. இதை உணராத கருணா அவருடைய செயல்பாடுகளினால் தியாக சிந்தனையுள்ள மட்டக்களப்பு, அம்பாறை விடுதலைப் புலி இளைஞர்களை கூலிப்படையாக மாற்றுவதற்கு கருணா முயற்சிக்கிறார்.
கருணாவுக்கும், வன்னிக்கும் இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ சமரசத்துக்கு இடமில்லை. ஆகவே கருணாவுக்கு வேறு வழியில்லாமல் சிங்கள அரசையும், சிங்கள இராணுவத்தையும் நம்பி வன்னிக்கு எதிராகச் செயல்பட வாய்ப்புகள் அதிகம். இந்த விடயத்தில் அயல்நாட்டுப் புலனாய்வுத்துறையினரும் பண உதவி செய்யக்கூடும்.
சிங்கள அரசைப் பொறுத்தவரை அல்லது சிங்கள இராணுவத்தைப் பொறுத்தவரை அல்லது அயல் நாட்டு புலனாய்வுத் துறையினைப் பொறுத்தவரை எதிரியின் எதிரி நம்முடைய நண்பன். இந்த உண்மையை வடஇந்திய அரசியல் சாஸ்திரம் நன்கு விபரித்து இருக்கிறது.
ஆகவே சிங்கள இராணுவமும், சிங்கள அரசாங்கமும், கருணாவை தங்களுடைய நலன்களுக்கு மறைமுகமாக பாவிப்பது நிச்சயம். கருணாவுக்கு மறைமுக இராணுவ உதவியும், மறைமுக நிதியுதவியும் கொடுக்கப்படலாம். பகிரங்கமாக இதைச் செய்தால் வன்னி சிங்கள அரசாங்கத்துடன் சகல இராஜதந்திர உறவுகளையும் துண்டி த்து சமாதானப் பேச்சுகளும் இல்லாமல் போய், யுத்தமும் மூளலாம். சிங்கள அரசாங்கம் மறைந்த ஜனாதிபதி ஜயவர்தன இந்தியப் படையை தமிழர்களை அழிப்பதற்குப் பயன்படுத்தியதுபோல் புலிகளை அழிப்பதற்கு கருணாவைப் பயன்படுத்தக்கூடும். இந்தச் சூழ்நிலையில்தான் மட்டக்களப்பு, அம்பாறை விடுதலைப்புலி இளைஞர்களை சிங்கள இராணுவத்தின் கூலிப்படையாகச் செயல்பட வைக்க கருணா முயற்சிக்கிறார்.
கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள் கூலிப்படையாக மாற்றப்படுவதை கிழக்கு மாகாண தமிழ் மக்களும், தமிழ் சமுதாயமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்தக் கொடிய மாற்றத்தைத் தவிர்ப்பதற்கு தன்மானமுள்ள மட்டக்களப்பு அம்பாறைத் தமிழர்கள் சாத்வீக முறையில் தங்கள் எதிர்ப்பைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தமுண்டு. தங்கள் பிள்ளைகளை கருணாவின் பிடியிலிருந்து விலகுவதற்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டும். கூலிப்படையாக மாறவேண்டாம், சகோதர யுத்தம் வேண்டாமென்ற கோர்ங்கள் எட்டுத் திக்கிலும் ஒலிக்க வேண்டும்.
பிரதேசவாதம் வேண்டாமென்றும் குரல் கொடுக்க வேண்டும். மட்டக்களப்பு- அம்பாறை வர்த்தகர்கள் கருணாவுக்கு நிதியுதவி செய்யக்கூடாது.
அரசியல் ரீதியாக அல்லது இராணுவ ரீதியாக குறுகிய காலநேர அட்டவணையில் கருணாவை தங்களுடைய நலன்களுக்காகப் பாவித்து சிங்கள அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழித்தபின்பு கருணாவும் அழிக்கப்படுவார். இதுதான் அரசியலுண்மை. இப்படியான விபரீதம் நடந்தால் கிழக்கு மாகாணம் நூற்றுக்கு நூறு சிங்கள ஆதிக்கத்துக்கு வருவது தவிர்க்க முடியாதது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>