03-31-2004, 11:48 AM
கருணாவுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிராகப் போர் தொடுக்க சோமவன்ஸ பொறுப்பற்ற முறையில் கூறும் ஆலோசனை நாட்டைச் சீரழித்துவிடுமென்று மாத்தறையில் பிரதமர் பேச்சு
கருணாவுடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர் நடவடிக்கையில் ஈடுபடவேண்டுமென்று ஆலோசனை வழங்கிவரும் ஜே.வி.பி.யின் தலைவர் சோவன்ஸ அமரசிங்கவின் பொறுப்பற்ற பேச்சுகள் நாட்டின் எதிர்காலத்தையே சீரழித்துவிடுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது:
எதிர்வரும் மே மாதம் நாங்கள் புலிகளுடன் உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்த நாட்டுக்கு நிரந்தர சமாதானத்தையும் நிரந்தர யுத்த நிறுத்தத்தையும் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே தேர்தலொன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய துரதிர்ர்;டம் எமக்கு ஏற்பட்டது.
நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டி அச்சமற்ற யுத்த சூ ழலற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்தத் தேர்தலில் ஐ.தே.கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
விடுதலைப் புலிகளுடன் பேசுவதாயின் அதற்கான அனுபவம், பக்குவம், ஆளுமைத் தனம் தேவை. அவையாவும் எம்மிடமிருக்கிறது. இதனால்தான் இன்று யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் நிம்மதிப் பெரு மூச்சு விடுகின்றனர். அந்த ஆற்றலும், அனுபவமும் ஜனாதிபதியிடமோ அல்லது ஜே.வி.பி.யினரிடமோ கிடையவே கிடையாது.
கடந்த இரண்டு வருட காலங்களாக இந்நாட்டைச் சகல துறைகளிலும் கட்டியெழுப்புவதற்கான பின்னணியை ஏற்படுத்தினோம். இதனைச் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டதால் தான் இந்த நாட்டின் அபிவிருத்திக்குப் பெருமளவு நிதி கிடைத்துள்ளது.
இம்முறை நடைபெறும் தேர்தலில் ஐக்கிய சுதந்திர முன்னணி படுதோல்வி அடையும். எமது வேலைத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அனைவரும் எமக்குப் ப10ரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
புது இலங்கையைக் கட்டியெழுப்புவதன் மூலம் மக்களின் வறுமையை அகற்றி அவர்களை செல்வமிக்க மக்களாக வாழ வைக்கவும் முடியும்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>