03-31-2004, 10:17 AM
<img src='http://www.rsf.org/rsf/img_une/nimalrajan.gif' border='0' alt='user posted image'>
தேசவிரோதக் கும்பலினால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் நிமலராஜன்...!
<span style='color:red'>பத்திரிகையாளர் நிமலராஐனைக் கொலைசெய்த பிரதான சந்தேகநபர் கைது
பிரபல பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஐனை, யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட போதும், அவர்கள் பிணையில் செல்ல நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வழக்கின்போதும், குறிப்பிட்ட கால இடைவெளிக்கிடையிலும், நீதிமன்றத்தில் ஆஐராகி கைச்சாத்திடுமாறு பணிக்கப்பட்டே, பிணை வழங்கப்பட்டது.
இருந்தபோதும், இதன் பிரதான சந்தேக நபரான கந்தசாமி ஜெகதீஸ்வரன் எலியாஸ் ஜெகன் என்ற ஈ.பி.டி.பி. உறுப்பினர், பிணையில் வெளியேறியதும், தலைமறைவாகியதுடன், வழக்கில் ஆஐராகாது மறைந்திருந்தார்.
இவரைக் கைது செய்யும்படி யாழ். நீதவான் திரு.ஆர்.ரி.விக்னராஜா பிடியாணை வழங்கியிருந்தாலும், பொலிசாரின் பிடியில் சிக்காது, ஜெகன் மறைந்திருந்தார்.
இந்நிலையில், ஊர்காவற்றுறை பொலிசார் ஜெகனை, செவ்வாய்க்கிழமை கைதுசெய்து, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிபதி திரு.ஏ.பிரேம்சங்கர் முன்னிலையில் ஆஐர் செய்தனர்.
வழக்கைச் செவிமடுத்த ஊர்காவற்றுறை நீதிபதி, சந்தேகநபரை, யாழ் நீதிமன்றில், நீதிபதி திரு.விக்னராஜாவிடம் கொண்டுசெல்லுமாறு பணித்துள்ளார்.
சந்தேக நபரான ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஜெகனுக்கெதிராக காணுமிடத்தில் கைதுசெய்வதற்கான பிடியாணை வழங்கப்பட்டிருந்தது.
2000ம் ஆண்டு ஒக்ரோபர் 19ம் திகதி, அவரது வீட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட நிமலராஐன், அப்போதைய கொடூரமான போரின் நிலைமைகளை பிபிசி உட்பட சர்வதேச ஊடகங்கள் பலவற்றும் வழங்குகின்ற ஒரேயொரு நடுநிலைப் பத்திரிகையாளராக விளங்கினார். இவரைப் படுகொலை செய்ததோடு, இவரது தந்தையை வாளால் வெட்டிப் படுகாயப் படுத்தியதோடு, தாயாரை நோக்கி கிரனைட்டும் வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இவரது மனைவியும் 3 குழந்தைகளும் இன்னுமொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது இது நிகழ்ந்ததால், அவர்கள் உயிராபத்தின்றித் தப்பிக்க வாய்ப்பு உருவானது.
அப்போது ஐனாதிபதி சந்திரிகாவின் ஆசீர்வாதத்துடன் துணிகர கொலைச்சம்பவங்கள் பலவற்றிலும் ஈடுபட்டு வந்த ஈ.பி.டி.பி. குழுவினர் இந்தக் கொலையைச் செய்ததும் உறுதிசெய்யப்பட்டது. கொலைகாரர்கள் தப்பியோடியபோது விட்டுச் சென்ற துவிச்சக்கர வண்டிகள், டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்குச் சொந்தமானவை என்பதும் பொலிசாரால் அப்போது ஊர்ஜிதம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>