03-31-2004, 10:08 AM
<span style='color:red'>மகேஸ்வரன் மீதான கொலை முயற்சியில் புலிகளுக்கு தொடர்பில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மகேஸ்வரன் மீதான கொலை முயற்சிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதுவிதத் தொடர்பும் இல்லையென சிறிலங்காவின் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை மகேஸ்வரன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருப்பதாக சந்தேகிப்பதில் அர்த்தமில்லை எனத் தெரிவித்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் சிறிசேன ஹேரத், விடுதலைப் புலிகளினால் நடாத்தப்படும் கொலை முயற்சிகள் நன்கு திட்டமிட்ட முறையில் இதுவரை வெற்றிகரமாகவே நடாத்தி முடிக்கப்பட்டு வந்தமை இதனை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் விடுதலைப் புலிகள் அல்லாத வேறு ஒரு சக்தியே மகேஸ்வரன் மீதான கொலை முயற்சியின் பின்னணியில் இருப்பதை தாம் உறுதியாக நம்புவதாகவும் சிறிசேன ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இச்சம்பவம் கொழும்பில் போட்டியிடும் தமிழ் வாக்காளர்களிடையேயான தேர்தல் போட்டியின் காரணமாகவே நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர், இதுவரை 25க்கும் மேற்பட்டவர்களிடம் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>