03-31-2004, 06:14 AM
இலங்கைத்தேர்தல் குறித்து விகடனில் மாலன்
"உலக வரைபடத்தில் இலங்கையைப் பார்க்கும் போதெல்லாம் அது ஒரு கண்ணீர்துளியைப் போல எனக்குத் தோன்றும்" என்று கவிதை வாசனை கொண்ட ஒரு நண்பர் சொல்வதுண்டு.
"கண்ணீர்துளி என்று ஏன் சொல்ல வேண்டும்? ஒரு தீக் கொழுந்தினைப் போல் அல்லவா அது இருக்கிறது?" என்று இன்னொருவர் சொல்வார்.
"எனக்கென்னவோ அது விளிம்பைப் பூச்சி அரித்துவிட்ட ஓர் உலர்ந்த அரச இலை போல் தோன்றுகிறது" என்பார் எனது சிங்கள நண்பர். அவர்களுக்கு அரச மரம் ஒரு முக்கியமான குறியீடு. புத்தர் ஞானம் பெற்றது அரச மரத்தினடியில்தான்.
கடந்த வாரம் இலங்கையில் போய் இறங்கினபோது எனக்கு இது எதுவுமே நினைவுக்கு வரவில்லை. இலங்கையைப் பற்றி சிங்கப்பூர் பிரதமராக இருந்த லீ\குவான்-\யூ சொன்ன ஒரு கருத்து அடிமனதில் வந்து போனது.எழுபதுகளில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர் அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தனேயிடம், "இல்லாத வளங்களை, சுழற்சி முறையில் ஏலம் போடுவதுதான் உங்கள் ஜனநாயகம்" என்று சொன்னதாகப் படித்திருக்கிறேன். அது ஞாபகத்துக்கு வந்தது.
அதற்குக் காரணம்? நான் அங்கு போயிருந்த நேரத்தில் இலங்கை இன்னொரு தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. ஏப்ரல் இரண்டாம் தேதி, அதாவது இந்த வெள்ளிக்கிழமை \ அங்கு நடைபெற உள்ள தேர்தல் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தேர்தல். ஏனென்றால் எந்த அரசு அமைய இருக்கிறது என்பதில்தான் அங்கு அமைதி நீடிக்குமா என்பதற்கான விடை இருக்கிறது.
அங்கீகாரம் பெற்ற 24 அரசியல் கட்சிகள் களமிறங்கி இருந்தாலும் நிஜமான போட்டி என்பது ஜனாதிபதியாக உள்ள சந்திரிகா குமரதுங்கேவின் தலைமையில் அமைந் துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய முன்னணிக்கும்தான். தெற்குப்பகுதிகளில் செல்வாக்குக் கொண்ட தீவிர சிங்களக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா (J.V.P) சந்திரிகாவின் அணியில் இருக்கிறது.
வடக்கு \ கிழக்குப் பகுதிகளில் செல்வாக்குக் கொண்ட, தமிழ் தேசிய விடுதலை அமைப்பு (TNA), விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தனிக் கூட்டணியாக களத்தில் இருக்கிறது.
ரணில் கட்சி, கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதையும், அதன் காரணமாக நாட்டில் அமைதி நிலவுவதையும் முன்னிறுத்திப் பிரசாரம் செய்கிறது.
சந்திரிகாவோ, "அமைதிக்கான விதைகளை ஊன்றியதே நான்தான். 1994\லிலேயே சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டேன். நான் மட்டும் என்ன, யுத்தம் நீடிக்க வேண்டும் என்றா விரும்புகிறேன்? இன்று நாட்டினுடைய தேவை அமைதி மட்டுமல்ல, பொருளாதார முன்னேற்றமும்தான். அதற்கு என்ன செய்திருக்கிறது ரணில் அரசு?" என்று கேள்விகள் எழுப்புகிறார்.
ÔÔஆறாண்டு காலம் ஆட்சி செய்யுமாறு நாங்கள் 2001 டிசம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஆனால், இரண்டாண்டுகளிலேயே சந்திரிகா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களைப் பதவி நீக்கம் செய்துவிட்டார். நாங்கள் எங்கள் பதவிக்காலம் முழுவதும் தொடர்ந்து நீடித் திருந்தால் பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கும் என்று பதிலடி கொடுக்கிறது ரணில் அணி.
சுருக்கமாகச் சொன்னால் தொண்டு தொடர என்று ரணில் கட்சி வாக்குக் கேட்கிறது. நாட்டைக் காப்பாற்ற என்று சொல்லி வாக்குக் கேட்கிறது சந்திரிகா அணி.
சிகப்புக்குப் போட்டா நீலமாகும் என்று சொல்லி தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறது ரணில் கட்சி. அதாவது சந்திரிகா கட்சியின் நிறம் | சிவப்பு. தீவிரவாத சிங்கள இனவாத கட்சியான ஜே.வி.பி\யின் நிறம்.. நீலம். அதனால் சந்திரிகா அணிக்கு வாக்களித்தால் சிங்கள தீவிரவாதம் தலை தூக்கும் என்று அது பயம் காட்டுகிறது. அந்த அச்சம் அடிப்படை அற்றதல்ல.
இதற்கு எதிர்ப்பாய்ச்சலாக, விழிப்பாக இருங்கள், யானையும் புலியும் சேர்ந்து வருகின்றன என்று சிங்கள மக்களை எச்சரிப்பதின் மூலம் சிங்களவர்களின் வாக்குகளுக்குக் குறி வைக்கிறது சந்திரிகாவின் அணி. ரணில் விக்ரமசிங்கே கட்சியின் தேர்தல் சின்னம் | யானை.
சிங்கள மக்களிடையே இந்த இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளைப் பற்றிய அபிப்பிராயங்கள் பலவாறாக இருக்கின்றன. ரணில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்தது உண்மைதான். ஆனால், அவர் நீடித்தால் நாடு பிளவுபடுவதற்கு வழி கோலிவிடுவார் என்ற அச்சம் சிங்கள மக்களுக்கு இருக்கிறது.
பிரிந்து போவதால் ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்றால் பிரித்துத்தான் கொடுத்து விடலாமே? இப்போது மட்டும் தமிழர் பகுதிகளில் நம் அதிகாரமா எடுபடுகிறது? பிரித்துக் கொடுத்துவிட்டு நமது பகுதியில் கவனம் செலுத்தி நாம் முன்னேறிக்கொண்டு போகலாம். இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிய வேண்டியது தவிர்க்க முடியாதது என்ற நிலைமை ஏற்பட்ட போது பிரிந்து விடவில்லையா? அந்தப் பிரச்னையை அப்படியே வைத்துக் கொண்டிருந் தால் இந்தியா முன்னேறியிருக்குமா? என்று சில சிங்கள வர்த்தகர்கள் வாதிடுகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. நாடாளுமன்றத்தில் தமிழர்கள் பெறும் இடங்களின் ஆதரவைக் கொண்டுதான் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். அமிர்தலிங்கத்தின் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியில் இருந்தவர்கள்தான், தமிழ் தேசிய விடுதலை அமைப்பு என்ற பெயரில் போட்டியிடுகிறார்கள். பிரபாகரன் \ கருணா மோதல் இந்த அமைப்புக்கு கிழக்குப் பகுதியில் சில சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. .
ஈழமக்கள் ஜனநாயக முன்னணி, ரணில் ஆட்சியில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது உண்மைதான். ஆனால், அது விடுதலைப் புலிகளுடன் மட்டுமே நடை பெற்றது. எங்களை அவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று குமுறுகிறது
தமிழ் முஸ்லிம்கள் இடையேயும் நிறைய பிளவுகள். எங்களைத் தனித் தரப்பாகப் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ரணிலின் கட்சியை ஆதரிக்கிறது முஸ்லிம் காங்கிரஸ். வடக்கு கிழக்குப் பகுதிகளில் ரணிலின் கூட்டணியிலும், அதற்கு வெளியே தனித்தும் போட்டியிடுகிறது முஸ்லிம் காங்கிரஸ். இது பலவிதமான கிண்டல்களுக்கு பிரசாரத்தில் இடமளித்துள்ளது. மலையகத் தமிழ் கட்சிகளிடையேயும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. தொண்டைமான் மறைவுக்குப் பிறகு, அவரது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டது. தொண்டைமானின் பேரன் ஆறுமுகன் தொண்டைமான் நுவரேலியாவில் ரணில் கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இன்னொரு தலைவரும் அமைச்சராக இருந்தவருமான சந்திர சேகரன், சொந்தச் சின்னத்தில் போட்டியிடும் தைரியம் மலையகத் தில் வேறு யாருக்கும் இல்லை. நாங்கள் மட்டும்தான் சொந்த சின்னத் தில் போட்டியிடுகிறோம் என்று பெரிய கட்சிகளின் சின்னத்தை இரவல் வாங்காமல் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தேர்தலுக்குப் பிறகு சிறிதும் பெரிதுமான பல தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் இடம் பெறக்கூடும். அது மேலும் குழப்பத்தை அதிகரிக்குமே தவிர, பிரச்னையைத் தீர்க்க உதவாது. இதைத் தவிரவும் தமிழர் பிரச்னைகள் தீர்வதில் வேறு சில முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று.. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஜனாதிபதி சந்திரிகாவே பாதுகாப்பு அமைச்சராகவும் இருப்பார். எனவே ரணில் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சந்திரிகாவை ஒதுக்கி வைத்துவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது.
இரண்டாவது பிரச்னை தங்களை தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக ஏற்றுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள் நிபந்தனை விதித்திருக்கிறார்கள். அதை, கருணா, முஸ்லிம்கள், வேறு சில தமிழ் கட்சிகள் ஏற்க மாட்டார்கள்.
மூன்றாவதாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அது எந்தக் கட்சிக்கும் இந்தத் தேர்தலில் கிடைக்காது.
இன்றைய சூழ்நிலையில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அது இலங்கை மேலும் குழப்பத்தை நோக்கி நகர்கிறது!

\" \"