03-31-2004, 05:47 AM
கொல்லப்பட்டுவிட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்ட திரு யோகரட்ணம்-யோகி எழுதிய கட்டுரை
Tuesday, 30 March 2004
சலசலப்பு விரைவில் நீங்கும்.தமிழீழப் போராட்டம் புதிய எழுச்சியுடன் தொடரும்...
Tuesday, 30 March 2004
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் ஆயுதப்போராட்டத்தால் இலங்கையில் தமிழ்த்தேசியம் பெருமெழுச்சி கண்டுள்ளது. சாதி.மத.பிரதேச வேறுபாடுகள் எல்லாம் பேரளவு மறக்கப்பட்டு எல்லோரும் நாம் தமிழர்கள், தமிழீழ மக்கள் எனப்பேசும் நிலை உருவாகியது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையைத் தமிழர்கள் என்றார்கள்.
இந்தச் சூழலில் கிழக்கில் ஏற்பட்ட சலசலப்பால் தமிழீழ விடுதலைப்போராட்டம் சிறு சலசலப்பை அடைந்துள்ளது. இந்தச் சலசலப்பு விரைவில் நீங்கும். தமிழீழப் போராட்டம் புதிய எழுச்சியுடன் தொடரும்.
விடுதலைப்புலிகளின் அரசியல் மதியுரைஞர் 'பிரபாகரன் வரலாற்றின் உருவாக்கம் அவரூடாகவே தமிழீழ விடுதலைக்காக போராட்டம் நகர்கின்றது.' என அடிக்கடி கூறுவதுண்டு.
தேசியத் தலைவர் பிரபாகரன் தனது நீண்ட போராட்ட வரலாற்றில் கைவிடுகை, துரோகம், இழப்பு ஆகியவற்றைப் பலமுறை சந்தித்துள்ளார். இங்கே கைவிடுகை என்பது நம்பிக்கையாகத் துணை நின்றோர் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றமையையும், துரோகம் என்பது துணையிருந்தோர் அவரையும், அவரால் கட்டிவளர்க்கப்பட்ட இயக்கத்தையும் அழிக்க முயன்றமையையும், இழப்பு என்பது போராளிகளின் இழப்புகள், படைக்கலம், கட்டுப்பாட்டுப் பகுதி போன்றவற்றின் இழப்புக்கைளக் குறிக்கிறது.
புலிகளின் வரலாறு முடிந்தது எனப் பலமுறை எதிர்வு கூறப்பட்டதுண்டு. ஆனால், புலிகள் மீண்டும் மீண்டும் எழுந்தார்கள். அதிக பலம் பெற்று எழுந்தார்கள். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் புலிகளின் ஒவ்வொரு வீழ்ச்சிக்கும் பின்பு அவர்கள் இருந்ததிலும் கூடியபலம் கொண்டு எழுந்ததைக் காண முடியும்.
இந்த எழுச்சிக்கும் பலத்திற்கும் மூலம் தேசியத் தலைவரே ஆகும்.
தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் நமது தேசியத் தலைவரைப் போன்று ஒழுக்கம், கட்டுப்பாடு, விடாமுயற்சி, இடுக்கணழியாமை ஆகியவற்றைக்கொண்ட ஒருவரைக்காண்பது அரிது. அதே போன்று கொண்ட இலட்சியத்திற்காகப் பெருமிடர்கள் இடையிலும் தொர்ந்து போராடிவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற அமைப்பையும் காண்பது அரிது.
பெருந்தலைவரும் அவரால் கட்டிவளர்க்கப்பட்ட இயக்கமும் உள்ளவரை தமிழர்கள் சலசலப்புகளுக்கு அஞ்சவேண்டியதில்லை.
இன்று தமிழீழமெங்கும் எதிரியை அஞ்சச் செய்யும் நவீன படைக்கலங்களுக்காகச் செலவிடப்பட்ட பணத்தின் பெறுமதி பல நூறு கோடிகளுக்கு மேலாகும். இதனிலும் மேலாக அவற்றை இந்த மண்ணில் கொண்டு வந்து சேர்க்கப் பல பேராளிகள் உயிர் தந்தனர். இதேபோன்றே எதிரியிடமிருந்து படைக்கலன்களைக் கைப்பற்ற ஆயிரக்கணக்கில் போராளிகள் உயிர் தந்தனர். இப்படியாகப் பல ஆயிரம் போராளிகளின் உயிரக் கொடையால் பெறப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதியில் நின்று பிரதேசவாதம் பேசுவதோடு நிற்காமல் அவர்களால் பெறப்பட்ட படைக் கலங்கள் குறித்த இரகசியங்களை வெளிப்படுத்தும் ஒரு சோக நாடகம் கிழக்கில் இடம் பெறுகின்றது.
போராளிகளின் உயிரக் கொடை நவீன படைக்கலங்களின் வருகை ஆகியவற்றால் ஏற்பட்ட எழுச்சி இன்றேல் இன்று முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கணிசமான பகுதிகளையும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் பெரும்பகுதிகளையும் நாம் இழந்திருந்தபோதும், தொடரும் காலங்களில் எல்லா மாவட்டங்களையும் இழக்கும் நிலைக்காளாக்கப்பட்டிருந்தோம்.
ஒழுக்கமற்ற, விலை போகும் தலைமைகளால், தன்னையும், தன்படையையும், ஈற்றில் தன்னைச் சார்ந்த மக்களையும் காக்கமுடியாது இவர்களின் கீழ் ஒழுக்கக்கேடும், துரோகமும் உயர்விழுமியங்களாகிவிடும்.
இவர்கள் தங்கள் சிறு நலனுக்காக வெளிச்சக்திகளின் நலனுக்கு இசைவார்கள். வெளிச் சக்திகள் தமது நலன் நிறைவேறும் வரை இவர்களைப் பயன்படுத்தும் பின்பு இவர்களைக் கைகழுவிவிடும்.
வெளிச்சக்திகள் இவ்வாறான நிலையில் குறிப்பாக இரண்டு மூன்று விடயங்களில் கவனம் செலுத்தும். அவை தமக்கு இசைந்து தமது மக்களைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுப்போரை ஓரளவுக்கு மேல் வளரவிடாது. இவர்களைப் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்திற்கு தொல்லை தந்து அதனைப் பலம்குன்றச்செய்து அதனை அழிப்பதில் குறியாக இருக்கும். இறுதியில் அவை விரும்பிய தீர்வைக் திணிப்பதில் கவனமாயிருக்கும். வெளிச் சக்திகளுக்கு இசைய மறுப்பதும் அவற்றின் ஆசை வார்த்தைகள் கண்டு மயங்க மறுப்பதும் விடுதலைப்புலிகளின் சிறப்பியல்புகளில் ஒன்றாகும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தேசியத் தலைவர் ஏற்றிருந்தால் வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக வளத்தோடு வாழ்ந்திருக்க முடியும். அவருக்குக் குறுகிய காலத்திற்கு எல்லாவித வசதிகளையும் செய்துதர இந்திய, இலங்கை, உலக அரசுகள் தயாராகவே இருத்தன.
ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் அதற்கென ஒரு காப்பான தளத்தைக் கொண்டிராது வளரமுடியாது. அதனை எதிர்க்கும் ஒடுக்குமுறை அரசு அதன் தலைமையையும், இயக்கத்தின் படைக்கல வளர்ச்சிக்கான தொடர்பு வழிகளையும் அழிக்க முயலும், இவ்வாறே ஒரு விடுதலைப்போராட்டத்தில் இடம்பெறும்.
போராட்ட வளர்ச்சிக்கான காப்பான தளத்தையும் அங்கிருக்கும் தலைமைப் பீடத்தையும் காப்பதே போராளிகளின் முதற்கடமை, அதனைக் காப்பாக்கிய பின்பு படிப்படியாக மற்றைய பகுதிகளைக் காப்பாக்குதலே ஒரு விடுதலைப் போராட்டத்தில் நடைபெறும். சூரியக் கதிர், ஜெசிக்குறு, செக்மேற் போன்ற நடவடிக்கைகள் எல்லாமே தலைமைப்பீடத்தையும், இயக்கத்தின் படை, படைக்கல வளர்ச்சிக்கான தளத்தை அழிப்பதையே இலக்காகக் கொண்டவை.
ஒரு போராட்டத்தின் நரம்புகளின் மையத்தைக் காப்பது எனது கடமையல்ல என எந்நவொரு போராளியும் கூறமாட்டான்.
தமிழீழப் போராட்டம் ஓரளவு வளர்ச்சிகண்ட பின்பு வடக்கிற்குச் சுயாட்சி தரச்சிங்களத் தலைமைகளும், உலக அரசுகளும் தயாராகவே இருந்தன.
புலிகள் பிரேமதாசாவோடு பேசிய காலத்தில் பிரேமதாசா பலமுறை 'வடக்கைப் பிரபாகரன் ஆள்வதில் எமக்குச் சிக்கல் இல்லை. கிழக்குத்தான் சிக்கல். அங்கு சிங்களவர், முஸ்லிம்கள் உள்ளனர்' எனக் குறிப்பிட்டதுண்டு.
இதை நான் இங்கு குறிப்பிட்டமைக்குக் காரணம் புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்திலோ அல்லது வன்னியிலோ நடத்தப்படும் தாக்குதல் புலிகளைப் பலம்குன்றச் செய்தல் என்பதோடு நிற்காமால் கிழக்கை முழுமையாக வெல்லல் என்ற நிலைப்பாடோடு இணைந்ததாகும்.
அரசுக்கு ஒன்று தெரியும். போராட்டத்தின் மூலத்தைப் பலமிழக்கச் செய்தால் கிழக்கைத் தன் கட்டுப்பாட்டுள் கொண்டுவர நீண்ட காலம் ஆகாது என்பதே.
கிழக்கைப் புலிகள் வென்றால் தமிழர்களுக்கு விடிவு விரைவில் கிட்டும். கிழக்கைச் சிங்கள பேரினவாதம் வென்றால் அது கிழக்கு வாழ்தமிழ் மக்களின் அழிவோடு தொடங்கி ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களின் அழிவாக முடியும்.
ஜெயசிக்குறு, அக்கினிச்சுவாலை போன்ற நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியும் கிழக்கில் நவீன படைக்கலன்களுடனான புலிகளின் வளர்ச்சியுமே அரசைச் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவழைத்தது.
சமாதான காலம் விடுதலைப் போராட்டத்திற்குப் பெரிதும் அச்சுறுத்தலான காலமாகும். இந்தக் காலத்தில் பிறசக்திகளின் ஊடுருவலாலும், சமாதான காலம் தரும் பொய்யான அமைதியால் மக்களிடையே ஏற்படும் போராட்ட உணர்வின் தளம்பலாலும் ஒரு விடுதலை இயக்கம் பலமிழக்கச் செய்யப்படும். இதற்கான எளிமையான வழிகளை இந்தக் காலம் திறக்கும். இப்படியான செயல்வகையின் ஒரு விளைவே கிழக்கில் ஏற்பட்ட சலசலப்பு.
தமிழீழத் தேசியத் தலைவரின் காலத்தில் தமிழினம் ஒருபோதும் ஏமாறவோ, தோற்கவோ தயாராக இல்லை என்பதைப் பலமுறை நிரூபித்துள்ளது.
விரைவில் சலசலப்புக்கள் நீங்கும். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழீழத் தேசியத்தலைவரின் கீழ் புதிய மேலதிக பலத்தோடு மீண்டும் உலாவரும்.
'நம்புக்கள் தமிழீழம் நாளை பிறக்கும்' என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் வரிகளை இங்கு மனதில் நிறுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.
யோ.செ.யோகி ஈழநாதம்.

\" \"