06-17-2003, 06:50 PM
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வெளியே இடம்பெற்றுவரும் சகல கொலைகளுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
விடுதலைப்புலிகளின் கப்பல் தாக்கப்பட்டதன் எதிரொலியாக பாரிய விளைவுகளை எதிர் நோக்க நேரிடுமென விடுதலைப்புலிகள் விடுத்துள்ள அச்சுறுத்தலை பாரது}ரமாகக் கருதமுடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபட்ச பாராளுமன்றத்தில் இன்று கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் தமது நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் தெரிவு படுத்த வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். சபாநாயகரின் விசேட அனுமதியைப் பெற்று சபையில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வெளியே இடம்பெற்றுவரும் சகல கொலைச் சம்பவங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென புலிகள் கூறிவருவதாக சுட்டிக்காட்டிய அவர் இதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.