03-30-2004, 06:59 PM
வடக்கைச் சேர்ந்தவர்களை மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு பணிப்பு.
ஜ எழிலோன் ஸ ஜ புதன்கிழமை, 31 மார்ச் 2004, 0:13 ஈழம் ஸ
கருணாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரெங்கும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு அம்பாறைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பிற மாவட்டத்தவர்கள் அரச, தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருவதும், வியாபாரங்களை வைத்திருப்பதும் வாசகர்கள் அறிந்ததே.
கருணாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் வடக்கைச் சேர்ந்தவர்கள் இரவு 12 மணிக்குள் வெளியேற வேண்டுமென ஒலிபெருக்கிகள் மூலம் மட்டக்களப்பில் அறிவித்தபோது, சிறீலங்கா காவல்துறையினர் அதனை வெறுமனே பார்த்தவண்ணம் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே கிழக்கின் நிலைக்குக் காரணம் என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரமொன்றும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமனே நபருக்கு 500 ரூபாய்களை மாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கருணாவின் குழுவினர் அறிவித்துள்ளனர்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>