03-30-2004, 03:46 PM
<b>அமெரிக்க சன நாய் அகத்தின் கேலிக் கூத்துகளில் இதுவும் ஒன்று.....!</b>
<span style='color:red'>கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாக்குச்சாவடிகள் அமைக்காததால் 3 இலட்சம் தமிழர்கள் வாக்களிக்க முடியாத நிலை
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாக்குச் சாவடிகளை அமைப்பதற்கு சந்திரிகாவின் சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி., சிங்கள உருமய, ஈ.பி.டி.பி, ஆனந்தசங்கரி கட்சி போன்றன கொடுத்த கடுமையான அழுத்தம் காரணமாக, அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது.
கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாக்குச் சாவடிகளை அமைக்க முடியாததனால், கிட்டத்தட்ட 300,000 தமிழர்கள் வாக்களிக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகத் தெரியவருகிறது.
ஹிந்து பத்திரிகைக்கு செவ்வி வழங்கிய ஐனாதிபதி சந்திரிகா, கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தேர்தல் வாக்குச் சாவடிகள் அமைப்பதை தேர்தல் ஆணையாளர் அனுமதிக்க முடியாது என்ற கருத்தில் விளக்கமளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, இக்கருத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ் கூட்டமைப்பிற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும், தங்களது அழுத்தத்தை ஐனாதிபதியூடாகவும் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாக்குச் சாவடிகளை அமைக்கும் திட்டம் முற்றாகக் கைவிடப்பட்டது. இறுதியில், அரச கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லைகளில் வாக்குச் சாவடிகளை அமைக்கும் திட்டம் மட்டுமே அமுல்படுத்த இணக்கப்பாடு காணப்பட்டது.
இதன்மூலம், கிட்டத்தட்ட 3 இலட்சம் தமிழர்களின் வாக்குகள் கேள்விக் குறியாகியுள்ளன. ஒருநாள் காலையிலிருந்து மாலைக்குள், 7 அல்லது 8 இலட்சம் தமிழர்கள், வாகனங்களில் பயணித்து வாக்களித்துத் திரும்புவது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று தெரியவருகிறது. இதனால், குறைந்தது 3 இலட்சம் தமிழர்களாவது வாக்களிக்காது விடும் ஆபத்து நிலவுவதாகவும், இந்த வாக்குகளில் 99 வீதமானவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சார்பாக வழங்கப்படக்கூடிய வாக்குகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நோயாளர்கள், குழந்தையுடனுள்ள பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர், அடிப்படை வசதியற்று வறுமைக்கோட்டில் வாழ்வோர் என்று பல பகுதியினரின் வாக்கையும் இந்நிலை மழுங்கடிப்பதாகவும் தெரியவருகிறது.
வடக்கிலும் கிழக்கிலும் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் வாக்குச் சாவடிகள் அமைப்பதை தேர்தல் ஆணையாளர் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்று சோசலிஷக் கட்சி இப்போது குரலெழுப்பியுள்ளது.
ஐனநாயகம் என்ற பெயரில் இடம்பெறும் இத் தேர்தலில், 3 இலட்சம் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிப்பது அநாகரிகம் என்றும் அராஐகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ள சோசலிசக்கட்சி, ஐனாதிபதி சந்திரிகா, சிங்கள உருமய, ஜே.வி.பி., ஈ.பி.டி.பி., ஆனந்தசங்கரி உட்பட சிங்கள இனவாதத்திற்குத் துணைபோகும் அனைத்துக் கட்சிகளையும் கடுமையாகக் கண்டித்துள்ளது. </span>
நன்றி புதினம்...!
:twisted: :evil: :roll: :?:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>