07-03-2003, 11:52 AM
தாத்தா உங்களின் ஆக்கள் பெரிய தொல்லை.வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) கடல் பிரதேசத்தில் மீண்டும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளின் ஆக்கிரமிப்பு, தொல்லைகள் அதிகரித்துள்ளன. நேற்றுமுன்தினமிரவு மட்டும் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான வலைகள் இந்திய ரோலர் களின் அடாவடித்தனத்தால் காணாமற்போய்விட்டன.கடந்த இரண்டு மாதங்களாக இந்திய மீனவர்களின் இழு வைப்படகுகளின் ஆக்கிரமிப்பு, தொல்லைகள் வடமராட்சி வடக்கு கடல் பிரதேசத்தில் மிகக்குறைவாக இருந்துவந்தன.
ஆனால், கடந்த சில தினங்களாக இரவுவேளை இந்திய மீன வர்களின் ஆயிரக்கணக்கான இழுவைப்படகுகள் (றோலர்கள்) வடமராட்சி வடக்கு கடல் பிரதேசத்தை ஆக்கிரமித்து வருகின்றன.இக் கடல் பிரதேசத்தில் இரவுவேளை மீன் பிடிப்பதற்காக வலைகளை வீசிவிட்டு காத்திருந்த சுப்பர் மடம், இன்பருட்டி, சக்கோட்டை ஆகிய இடங்களைச் சேர்ந்த மூன்று மீனவர்களின் வலைகள் காணாமற்போயுள்ளன. இவ் வலைகளை இந்திய மீனவர்களின் இழுவைப் படகு கள் அறுத்துச்சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அறு பட்ட வலைகளின் பெறுமதி 30 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு, தொல்லைகள் தொடர்பாக ஏற்கனவே பல தரப்பினருக்கும் முறையிட்டும் எவ்வித பலனும் கிட்டவில்லை என சமாசத்தின் செயலாளர் எஸ். சூரியகுமாரன் ஆதங்கம் தெரிவித்தார். இது தொடர்பாக ஆக்க புூர்வமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டால்தான் மீனவர் சமூகம் தொல்லைகள் இன்றி தொழில் புரிய முடியும் என அவர் தெரிவித்தார். உதயன்