07-03-2003, 11:48 AM
தெஹிவளை பொலீஸ் நிலையக் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரி தாப்ரூ கொலைச் சம்பவத் துக்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சமாதான முயற்சிகளைச் சீர்குலைக்கும் சக்திகளே இதற்குக் காரணம் என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-சுனில் தாப்ரூ கொலைசெய்யப்பட்டது அவரது உளவாளியால் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். அவரைக் கொலை செய்தவர் எனக் கூறப்படும் நபர் அவருடன் நீண்டகாலமாக உறவுகளைக் கொண்டுள்ளார். அந்த கொலையின் மர்மங்கள் துலங்கிவருகின்றன. காலப்போக்கில் உண்மை விடயம் தெரியவரும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் சமாதான முயற்சிகளில் குந்தகம் விளைவிக்கக்கூடாது என்று அதன் உறுப்பினர்களுக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.அண்மைக்காலங்களில் இடம் பெற்றுவரும் கொலைகள் தொடர்பான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிப்பதில் எமது புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.சமாதான முயற்சிகளுக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாகவிருக்கிறோம். கொலைகளின் பின்னணி குறித்து காலப்போக்கில் தெரியவரும். எம் மீது வீண் பழிசுமத்தப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் - என்று கூறினார் அவர். நண்றி உதயன்