03-30-2004, 02:48 AM
Mathivathanan Wrote:சார்பான பத்திரிகை என்பதையும் கருத்தில்கொண்டு பார்க்கையில்
போராளிகளை வற்புறுத்தி வைத்திருக்கிறார்.. ஆயுத்தால்அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார் என்ற செய்திகளுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக இன்றைய தினக்குரல் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறதே..?
அவர்கள் விட்ட அறிக்கையை ஊர்ஜிதம் செய்யும்வகையில் வெளியேற விருப்பமானவர்களை வெளியேற அனுமதித்ததாயும் செய்தி தெரிவிக்கின்றது..
<span style='font-size:25pt;line-height:100%'>ஒரு வார காலத்தில் கருணா தரப்பிலிருந்து 1600க்கும் மேற்பட்ட போராளிகள் வெளியேற்றம்</span>
மட்டக்களப்பில் கருணா குழுவின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்குள் 1 600க்கும் மேற்பட்ட போராளிகள் விலகிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிடத் தயாராகுமாறு கருணா விடுத்த உத்தரவை ஏற்க மறுத்த 800 போராளிகள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, தங்கள் சொந்த பாதுகாப்பு காரணமாக 800க்கும் மேற்பட்ட பெண் போராளிகளும் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளுடன் போரிட மறுத்தவர்களில் 800க்கும் மேற்பட்ட போராளிகள் விலகிச் சென்றுள்ளதை கருணா தரப்பும் ஒப்புக் கொண்ட அதேநேரம், புலிகள் தரப்புடன் மோதலொன்று வரும் போது இவர்களது செயற்பாடுகள் தங்களைப் பாதிக்குமென்பதாலேயே அவர்களை விலகிச் செல்ல அனுமதித்ததாகவும் கருணா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இராணுவத்தினருடன் மோதலென்று ஒன்று வரும்போது இவர்களை மீளவும் அழைக்க முடியுமெனவும் கருணா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும், கருணா தரப்பு இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதால் படையினருடன் மோதலொன்றுக்கு இனிச் சாத்தியமில்லை என்றும், சகோதர மோதலை தங்களால் நினைத்துப் பார்க்க முடியாதெனக் கூறியே இவர்கள் விலகிச் சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தங்கள் சொந்தப் பாதுகாப்புப்க் காரணங்களுக்காக 800க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
எனினும், போராளிகளை பராமரிப்பதில் பெரும் செலவு ஏற்படுவதாகவும் தற்போது வன்னியிலிருந்து நிதியுதவி முற்றாகவும் நிறுத்தப்பட்டுள்ளதால், உள்@ரில் போதிய பணம் திரட்ட முடியாத நிலையில் இந்த 800 பெண் போராளிகளையும் அங்கிருந்து வெளியேற அனுமதித்ததாகவும் கருணா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.thinakural.com/2004/March/29/ImpNews.htm#5
கருணா குழுவினுள் கருத்து வேறுபாடுகள்
செஞ்சுடரின் வீரச்சாவைத் தொடர்ந்து தமது குழுவினுள் இருந்து விலகிச் செல்ல முற்படுபவர்கள் மீது தாக்குதல் நடாத்துவது சரியா பிழையா என்ற காரசாரமான விவாதம் கருணா அம்மான் குழுவினுள் தலையெடுத்துள்ளது.
தப்பிச் செல்பவர்கள் மீது தாக்குதல் நடாத்துவது பிழை என்ற கருத்தை முன்வைத்தவர்கள் சிலரின் தனிப்பட்ட ஆயுதங்கள் (பிஸ்டல்) களையப்பட்டதாகவும் பின்னர் மீளக் கையளிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
பிரிந்து சென்ற போராளிகள் குழுக்களாக திக்குத் திக்காகத் தங்கியிருக்கின்றனர். எவரின் கட்டுப்பாட்டிலும் நிலைமைகள் இல்லாததுபோன்ற ஓர் உணர்வே பல இடங்களிலும் நேற்று மாலை தென்பட்டது.
விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் அண்மையில் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து பெரும்பான்மையான போராளிகள் பிரிந்து செல்வதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.
போராளிகளின் தாய் தந்தையர் முகாம்களில் தமது பிள்ளைகளைத் தேடி
ஏக்கத்துடன் சென்று வருவதையும் பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது.
நேற்று வியாபார நிறுவனங்களில் கருணா அம்மானின் குழுவைச் சேர்ந்த சிலர் மிரட்டிப் பணம் சேகரிக்கும் முயற்சிகளில்
thamilalai.net
\" \"

