03-30-2004, 01:00 AM
பொலீஸ் விசாரணைகளில் திருப்பம்
மகேஸ்வரனைக் கொலை செய்வதற்கு
முன்கூட்டியே கூட்டங்களில் ஒத்திகை!
சுட்டவர் பற்றி நேரில் கண்டவர்கள் தகவல்
கொழும்பில் மிகக் குறுகிய காலத்தில் மக்களின் பேரபிமானத்தைப் பெற்று தேர்தலில் வெற்றி விளிம்பில் நிற்கும் முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வர னைக் கொலை செய்வதற்கு முன்கூட்டியே பல கூட்டங்களில் ஒத்திகை நடைபெற்றிருக்கிறது. தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுவரும் பொலீஸாருக்கு இந்தத் திடுக்கிடும் தகவல் கிடைத்திருக்கிறது.
கொழும்பு ஜிந்துப்பிட்டியில் வைத்து கடந்த சனிக்கிழமை இரவு மகேஸ்வரன் சுடப்பட்டதை நேரில் கண்டவர்கள் பலர் பொலீஸாருக்கு முக்கியமான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்கள். சுட்டவர் இனி எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என்று பொலீஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, சம்பவம் இடம்பெற்றதினத்தன்று அவருடன் இருந்த ஆதர வாளர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. இத்தகவல் களை கொழும்பு வடக்குப் பகுதி குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரியான பொலீஸ் அதிபர் எஸ்.பி. லு}கொட கூறினார்.
இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது அதை நேரில் கண்ட சாட்சிகள் எனக் கருதப்படும் இருபதுக்கும் மேற்பட்டவர்களிடம் இது வரை வாக்குமூலங்கள் பெறப்பட்டுள் ளன. துப்பாக்கிதாரியை நேரில் கண்ட நபர்கள் வழங்கியுள்ள தக வல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் மேலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விசாரணைகளில் திருப் பங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் துப் பாக்கிதாரி இனித் தப்பமுடியாது; அவர் விரைவில் கைதுசெய்யப்ப டலாம் என்றும் பொலீஸ் அதிகாரி லு}கொட நம்பிக்கை தெரிவித்தார்.
வேட்பாளர் மகேஸ்வரனைக் கொலைசெய்வதற்கு அவர் பங்குபற்றிய பல கூட்டங்களில் முன்னேற் பாடாக ஒத்திகை பார்க்கப்பட்டதாக வும் பொலீஸாருக்குத் தெரியவந்தி ருக்கிறது. அதையடுத்து வீடியோ பதிவுகள், புகைப்படப் பதிவுகள் போன்றவற்றைக் கொண்டு இரகசிப் பொலீஸார் விசாரணை செய்துவரு கின்றனா
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>