03-30-2004, 12:51 AM
BBC Wrote:தமிழர் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வெளிநாடுகளில் உள்ள தமிழர் இயக்கங்கள் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள், இதேசமயம் ஈ மெயில் மூலமும் அப்படியான ஒரு பிரச்சாரம் நடைபெறுகின்றது, அதனை உங்கள் பார்வைக்காக ...........
<b>இணையத்தளத்தில் ஒரு வேண்டுகோள்</b>
பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் படி புலம்பெயர்ந்த தமிழர்கள் இணை யத்தளம் ஊடாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புலம்பெயர்ந்த உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள்!| என்ற தலைப் பில் வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இனி எமது ஈழம் ஜப்பானாக மாறப் போகிறதா? இல்லை சுடுகாட்டுச் சாம் பல்மேடாக மாறப்போகிறதா? என்ப தைத் தீர்மானிக்கும் வரலாற்றுக் காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம்.
அதன் முதற்படியாக நாம் எமது இன உறுதியினையும் நாட்டுப் பற் றையும் காட்டும் அரிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது வரும் பொதுத்தேர் தல். சில தேசவிரோத சக்திகள் அந் நிய மற்றும் சிங்களக் கைக்கூலிக ளாக மாறித் தமிழர் ஒற்றுமையைச் சிதைக்க கங்கணம்கட்டி நிற்கின்றன.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். ஈழத்தில் வாழ் கின்ற எம் உறவுகளைத் தொலைபேசியில் அழைத்து அவர்களைத் தமிழ்த் தேசி யக்கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் படி கூறுங்கள். நீங்கள் செய்யப் போகும் இந்த அளப்பரிய சேவை இனிவரும் எமது ஈழச்சந்ததிக்கு நீங் கள் அமைக்கப்போகும் ஏணிப்படி யாகும் என்றுள்ளது.
நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

