03-29-2004, 07:33 PM
Kanani Wrote:தற்ஸ்தமிழின் தமிழ்
ரணில் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 3 தமிழர்கள் கொலை
கொழும்பு:
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் கட்சி வேட்பாளர் உட்பட 3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் இந்து நலத் துறை அமைச்சரும், ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான மகேஸ்வரன், மட்டக்களப்பு அரசு அதிகாரி மௌனகுருசாமி ஆகியோர் கொழும்புவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வேறொரு சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மக்கள் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் சங்கரன் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த 3 கொலைகளையும் செய்தது யார் என்பது தெரியவில்லை. இது குறித்து இலங்கை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
நன்றி
அதுதமிழ்.com
செய்திகள் தீர விசாரிக்கப்பட்டடுத்தான் போடப்படுகின்றனவா??? :? :?
இலங்கை செய்தி: தவறுக்கு வருந்துகிறோம்
கொழும்பு:
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் கட்சி வேட்பாளர் உட்பட 3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக நேற்று வெளியான செய்தி தவறானது.
இருவர் சுடப்பட்டு காயமடைந்தார்கள் என்பதே சரியான செய்தி. யாரும் கொல்லப்படவில்லை.
இந்தத் தவறான செய்திக்கு வருந்துகிறோம்
ஆசிரியர்
தற்ஸ் தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

