03-29-2004, 02:49 PM
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும், ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கும் புதிய பணிப்பாளர் நியமனம்
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ திங்கட்கிழமை, 29 மார்ச் 2004, 20:00 ஈழம் ஸ
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும், இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கும் புதிய பணிப்பாளர் ஒருவரை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசநாயக்க நியமித்துள்ளார்.
இதன்படி உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினதும், இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்தினதும் பணிப்பாளராக டபிள்யு.டி.எல்.பெரெரா நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இவரது பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தல் முடிவடையும் வரையில் அமுலில் இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
17 ஆம் திருத்தத்தின் (27) 2 ஆம் பிரிவோடு இணைக்கப்பட்டுள்ள இலங்கை ஐனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104 (ஆ) 5 (இ) பிரிவால் தனக்குரித்தாக்கப்பட்ட தத்துவத்தின் பயனைக்கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>