03-29-2004, 12:33 AM
BBC Wrote:Eelavan Wrote:முன்பு புலி இப்போது தமிழ் மக்கள்
மக்களுக்கு அவர்கள் பயப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
மக்களுக்குப் பயப்படமாட்டார்கள் என்றால் புலிகள் ஆயுதமின்றி அரசியல் நடத்தும் யாழ்ப்பாணத்தில் இவர்கள் ஏன் இராணுவப்பாதுகாப்புடன் பிரச்சாரம் செய்கிறார்கள் வெறுமனே பாதுகாப்பிற்கு 2 காவல்துறையினர் போதுமே
நீங்கள் சொல்லலாம் புலிகள் மக்களைத் தூண்டிவிட்டு அவர்கள் மேல் தாக்கச் சொல்கிறார்கள் என்று அப்பிடியாயின் யாழ் குடாநாட்டின் சகல பகுதிகளிலும் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இவர்களுக்கு குடாநாடு முழுவதும் எதிர்ப்பா?இப்படிப்பட்ட எதிர்ப்பின் மத்தியில் தேர்தலில் வென்றாலும் மக்களுக்கு எதனை செய்துவிடுவார்கள்?
தமிழர்களுக்குப் பயப்படவில்லையெனில் டக்ள்ஸ் தேர்தல் கண்காணிப்புப் பணியில் தமிழர்களை நியமிப்பதற்கு ஏன் கண்டனம் தெரிவித்தார் எல்லாத் தமிழருமே புலிக்கு ஆதரவாகத் தான் செயற்படுவார்கள் என இவர் நினைக்கிறாரா?அல்லது யாழ் பல்கலைக் கழக மாணவர் முழுக்க புலி ஆதரவாளர்கள் என நினைக்கிறாரா?
இன்று இராணுவப் பாதுகாப்புடன் சொந்த மண்ணில் நடமாடவேண்டிய நிலமை என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் சங்கரி அதே இராணுவமும் சந்திரிகாவும் தாம் ஊர்காவற்துறையில் கடந்த தேதலில் தன் கட்சியினரை தாக்கிய கும்பலுக்குப் பாதுகாப்பு கொடுத்தனர் என்பதை ஏன் மறந்தார்
தேர்தலில் வெல்வதற்கும் பதவிகளை அனுபவிப்பதற்கும் வேண்டி பேய்களுடன் கூட கூட்டு வைக்கத் தயாராகவிருக்கும் ஆட்கள் இவர்கள்
\" \"

