03-28-2004, 09:50 PM
கிழக்கு மாகாண நிலைவரம் குறித்து தற்போது மக்கள் தெளிவு கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் கூறுகிறார்
(யாழ்ப்பாணத்திலிருந்து அ.நிக்ஸன்)
கிழக்கு மாகாண நிலைவரம் தொடர்பாக மக்கள் இன்று தெளிவு பெற்று விட்டார்கள் என கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும் தமிழீழ சர்வதேச மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
கடந்த முறை பொதுத்தேர்தலைவிட இம்முறை மக்கள் கூடுதலாக வாக்களிப்பார்கள். எனவே ஒன்பது ஆசனங்களையும் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையிருப்பதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து கேசரிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே கஜேந்திரன் இவ்வாறு கூறினார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோரின் தமிழ்த்தேசிய ஈடுபாடுகள் குறித்து விளக்கம் அளித்த அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
கிழக்கு மாகாண நிலைமை தொடர்பாக மக்கள் தற்போது தெளிவடைந்திருக்கின்றார்கள். ஆனாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஓரணியில் நின்று வாக்களிக்க வேண்டும். கடந்த முறையை விட இம்முறை மக்கள் கூடுதலாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுண்டு.
கடந்த முறை போன்று 20,000 வாக்குகளைப் பெற்று ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக வரமுடியாது. இம்முறை ஒருவர் 35,000 அல்லது 40,000 விருப்பு வாக்குகளை பெறவேண்டிய நிலையிலுள்ளது. இந் நிலையில் ஆனந்தசங்கரியோ டக்ளஸ் தேவானந்தாவோ இலகுவில் வெற்றி பெற்றுவிட முடியாது. இவர்கள் ஐந்து வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே ஈட்டுவர்.
தமிழ் மக்கள் எமது போராட்டத்தின் பின்னால் நிற்கின்றார்கள் என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூற வேண்டிய தேவையுள்ளது. அதனாலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுகின்றது.
விடுதலைப் புலிகளின் போராட்டம் தான் தமிழ் மக்களின் விடுதலையை தீர்மானிக்கப்போகின்றது. ஆகவே அதற்கு மாறான செயற்பாடுகளை எங்களினால் ஏற்றுக்கொள்ள முடியாது. தென்னிலங்கை சக்திகள் கண்ணை மூடிக்கொண்டு யுத்தத்தை இனிமேல் ஆரம்பிக்க முடியாது.தமிழ்மக்களை புலிகளிடமிருந்து மீட்கப்போகின்றோம். சமாதானத்திற்காக யுத்தம் என்றும் கூறமுடியாது.
சர்வதேச சமூகமும் அவ்வாறானதொரு யுத்தத்திற்கு ஆதரவு வழங்காது.20 ஆண்டு காலமாக இடம் பெற்ற போரை தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கான போராகவே சர்வதேச சமூகத்திற்கு தென்னிலங்கை அரசியல் சக்திகள் சித்திரித்தன.
அதற்கு ஆதரவாக அப்போது சில தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள்.ஆனால் இனிமேல் அது நடக்காது.
கிழக்கு மாகாண மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகமாட்டார்கள். கருணாவின் தனிப்பட்ட சுயநலனுக்கும் அவர்கள் பலியாகிவிடமாட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து புலிகளின் போராட்டத்திற்கு அனைத்துத் தமிழரும் மெருகூட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>