03-28-2004, 09:47 PM
ஆலய வளாகத்தில் மகேஸ்வரனுக்கு ஏற்பட்ட அபசகுனம்
முன்னாள் இந்துகலாசார அமைச்சரும் ஐக்கியதேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான தி.மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் கடந்த சனிக்கிழமை இரவு சுடப்படும் முன்னர் அபசகுனமான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவதினமான சனிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் நாவலர் மணி மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தில் மகேஸ்வரன் கலந்துவிட்டு பின்னர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யாகுருகுல கலாசாலைக்கு ஸ்ரீ வித்யாபீட செயலாளர் ஆர்.பாபுசர்மாவின் அழைப்பை ஏற்று அங்கு விஜயம் செய்து அங்கிருந்து திரும்பும்போது அவருக்கு குறுக்காக பூனையொன்று பாய்ந்தது.
சமயப்பற்றுமிக்க வேட்பாளர் மகேஸ்வரன் இந்நிகழ்வைக் கண்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்து அருகிலிருந்த கதிரையொன்றில் மெய்மறந்து அமர்ந்து கொண்டார்.
இதனைக் கண்ணுற்ற ஏனையோரும் அவரின் அருகில் ஓடோடி வந்து கால்களைக் கழுவுமாறும், தண்ணீர் அருந்துமாறும் பணித்ததோடு சமய நெறிப்படி தண்ணீரை தலையில் தெளிக்கும்படியும் அறிவுறுத்தினர்.
அவ்விடத்தில் சற்றுநேரம் அமர்ந்து தன்னை சுதாரித்துக் கொண்டு தனது பணிகளை செய்யவேட்பாளர் மகேஸ்வரன் ஆயத்தமாகிச் சென்றார்.
இச்சம்பவத்தையடுத்து அன்றிரவு 8 மணியளவில் மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் சுடப்பட்டு தற்போது ஆபத்தான நிலையினைக் கடந்துள்ளமை தெரிந்ததே.
முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனுக்கு சம்பவதினத்தன்று பூனை பாய்ந்ததானது அபசகுனத்தை முன்கூட்டியே சமிக்ஞையாக காட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.
நன்றி - வீரகேசரி
உங்கள் கருத்து ?

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>