03-28-2004, 09:40 PM
மகேஸ்வரனின் தலைக்கு வைத்த குறி அவர் மாலையை கழற்ற குனிந்ததால் தப்பியது விசேட பொலிஸ் குழு விசாரணை
(எஸ்.ஸ்ரீகஜன்)
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான தி.மகேஸ்வரன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக விஷேட பொலிஸ்குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஜிந்துப்பிட்டியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் துப்பாக்கி தாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் மகேஸ்வரன் படுகாயமடைந்திருந்தார்.
படுகாயமடைந்த அவர் உடனடியாக கொழும்பு விபத்து சேவைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அப்பலோ தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இவரது உடல்நிலை சற்று தேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு முன்னால் உள்ள தோட்டத்தில் பிரசார கூட்டமொன்றை நடத்தி விட்டு விவேகானந்தா மேடு பகுதியை நோக்கி வந்தபோது அச்சந்தியில் ஒருவர் மகேஸ்வரனுக்கு மாலை அணிவித்ததாகவும் அணிவித்த மாலையினை கழற்ற முயன்ற போதே துப்பாக்கிப் பிரயோகம் தலையின் பின்புறமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் தலைக்கு வைத்தகுறி, அவர் மாலையைக் கழற்றுவதற்காக சற்று குனிந்ததன் காரணமாக, துப்பாக்கிக் குண்டு அவரது வலப்பக்க கழுத்து வழியாகப் பாய்ந்து கன்னப் பகுதியால் வெளியேறியதாகவும், இதனால் அவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூட்டையடுத்து துப்பாக்கி நபரை மகேஸ்வரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிலர் கலைத்து சென்ற போதும் அந்த நபர் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டையடுத்து நிலத்தில் விழுந்த வேட்பாளர் மகேஸ்வரனை மெய்பாதுகாவலரும் நண்பர்களுமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து வேட்பாளர் மகேஸ்வரன் சிகிச்சை பெற்றுவரும் அப்பலோ தனியார் மருத்துவ மனையில் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பெருமளவிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரனின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபரைக் கேட்டுள்ளார்.
இதனைவிட ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியா, செயலாளர் சேனரத் கப்புக் கொட்டுவ, கொழும்பு மாநகர மேயர் பிரசன்ன குணவர்த்தன, பிரதி மேயர் அசாத்சாலி ஆகியோர் சனிக்கிழமை வைத்தியசாலைக்கு உடனடியாக விஜயம் செய்து மகேஸ்வரனைப் பார்வையிட்டனர். நேற்று முன்னாள் எம்.பி.க்களான லிலந்த பெரேரா, மஹ்ரூப் ஆகியோரும் மற்றும் பலரும் சந்தித்து பேசியுள்ளனர்.
இதேவேளை, ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சரை பார்வையிட்டுள்ளார்.
எரிக் சொல்ஹெய்ம் கவலை
கொழும்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான தி.மகேஸ்வரன் மீதான தாக்குதல் குறித்து தான் கவலையடைவதாக நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தனது கவலையினை மகேஸ்வரனிடமும் குடும்பத்தாரிடமும் தெரிவிக்குமாறும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>