03-28-2004, 09:34 PM
மக்களுக்கு சேவை செய்யவே மறு ஜென்மம் எடுத்துள்ளேன் "கேசரி'க்கு மகேஸ்வரன் பேட்டி
(எஸ்.சித்ராஞ்ஜன்)
<img src='http://www.virakesari.lk/20040329/PICS/vd29pg1.jpg' border='0' alt='user posted image'>
"எனது இறுதி மூச்சு இருக்கும் வரை எனது அன்புக்குரிய தமிழ் பேசும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வேன். எனது உயிரைக் கடவுள்தான் காப்பாற்றினார். எனது உயிர் இரு தடவைகள் என்னை விட்டு சென்று வந்ததை உணர்ந்தேன். மக்களுக்கு சேவை செய்யவே நான் மறு ஜென்மம் எடுத்து வந்துள்ளேன்''
இவ்வாறு கடந்த சனிக்கிழமை இரவு ஜிந்துப்பிட்டியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இந்து கலாசார அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க தமிழ் வேட்பாளருமான தி.மகேஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த மருத்துவமனையில் மகேஸ்வரனுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவரை பார்க்கச் செல்லும் முக்கியஸ்தர்களும், உறவினர்களும் கூட தீவிர உடற் சோதனையின் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
கழுத்தில் கட்டுப்போட்ட நிலையில், பேசுவதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கும்
மகேஸ்வரன் ஒவ்வொரு வார்த்தைகளாக கூறியவற்றை இங்கு தருகிறோம்.
""இனி என்னால் பிரசாரம் செய்ய இயலாது'' தலைநகர் வாழ் தமிழ் பேசும் மக்களை தனித்தனியாக சந்திக்க எண்ணியிருந்தேன் என்ன செய்வது என்னை மக்கள் மன்னிக்க வேண்டும். நான் மூன்று வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தில் இருந்து இனத்திற்கும் சமூகத்திற்கும் பணியாற்றினேன். அப்பணியைத் தொடர்ந்தும் செய்வேன். அதையாராலும் தடுக்க முடியாது. ஆண்டவன் என் உயிரைக் காப்பாற்றி விட்டார். ஆகவே எனது இறுதி மூச்சுள்ளவரை எனது பணி தொடரும்.
எல்லா தமிழ் பேசும் மக்களும் தேர்தல் தினத்தன்று உரிய வேளைக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகிறேன்.
தமிழ் மக்கள் அனைவரும் வாக்களித்தால் அதுவே எனக்கு போதும். நான் குணமாகி வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வேன். பல இலக்குகளை மையமாக வைத்தே தலைநகரில் நான் போட்டியிடுகிறேன்.
என் உயிரைக் காப்பாற்றிய பெரும் பங்கு தேசிய வைத்தியசாலையினரையே சாரும். தேசிய வைத்தியசாலையின் அதிகாரிகள், வைத்தியர்கள், ஊழியர்கள் அனைவரும் என்னை மிக நன்றாக கவனித்தனர் என நன்றி உணர்வுடன் கூறினார்.
<b>யாருடைய வேலையிது? </b>
உங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள் யார்? எவர் மீது நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள் எனக் கேட்டபோது, ""தனிப்பட்ட முறையில் என்னால் எவரையும் குற்றம்சாட்ட முடியாது. எனக்கு பெருகிவந்த மக்கள் ஆதரவையும், எனது அமோக வெற்றியையும் சகித்துக் கொள்ள முடியாதவர்களின் கோழைத்தனமான செயல் என்றே இதைக் கூறுவேன்''
எனது மக்களின் ஆதரவும் ஆண்டவனின் அருளும் இருக்கும் வரை எவராலும் என்னை எதுவும் செய்ய முடியாது என்பதைத் தான் இச்சம்பவம் வெளிக்காட்டுகிறது.
<b>புலிகள் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டார்கள்</b>
உங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள் புலிகள்தான் என சில ஆங்கில, சிங்கள பத்திரிகைகள் கூறியிருக்கின்றனவே எனக் கேட்டபோது, ""இந்த வேலையை விடுதலைப் புலிகள் நிச்சயம் செய்யவேமாட்டார்கள். நான் அவர்களுக்கு ஒரு சவால் அல்ல. அவர்களை நான் எப்போதும் அனுசரித்தே நடக்கிறேன். அவர்களின் இணக்கப்பாட்டோடுதான் நான் ஐ.தே.க.வில் போட்டியிடுகிறேன். எனவே அவர்களுக்கும் இதற்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது''
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>