03-28-2004, 08:16 PM
வெருகல் ஆறு ரத்த ஆறாய் மாறிவிடக்கூடிய பதற்ற நிலை
ஈழத்தில்இ பிரபாகரனுக்கும் கருணாவுக்குமிடையே ஏற்பட்ட மோதல் இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. கருணாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை வாபஸ் வாங்கிவிட்டார் புலிகளின் தலைவர் பிரபாகரன். இதனால்கூடிய விரைவில் கருணா நிச்சயம் கொல்லப்படலாம் என்கிற பேச்சு கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது.
கருணாவின் எல்லைக்குள் நுழைவதற்காகஇ புலிப்படையினர் வெருகல் ஆற்றங்கரையில் காத்துக் கிடக்கின்றனர். எந்த நேரமும் வெருகல் ஆறுஇ ரத்த ஆறாய் மாறிவிடக்கூடிய பதற்ற நிலை. சுமார் அரைகிலோ மீட்டர் அகலம்கொண்ட இந்த ஆறுதான் மட்டக்களப்பு மாவட்டத்தையும்இ திருகோணமலை மாவட்டத்தையும் பிரிக்கிறது. மட்டக்களப்பு மாவட்டம் முழுக்க கருணாவின் வசம் இருப்பதால்இ புலிப்படையினர் ஆற்றைக் கடந்துவர முடியாதபடிக்கு தடுப்பு அமைத்திருக்கின்றனர். இந்த முக்கியமான வேலையை தன்னுடைய தம்பியிடமே ஒப்படைத்திருக்கிறார் கருணா.
கருணாவுக்கு வாழ்வாஇ சாவா என்கிற நிலை ஏற்பட்டுவிட்டதால்இ தன்னுடைய மனைவியையும்இ இரண்டு குழந்தைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டார். ‘இக்கட்டான நேரத்தில் குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவது ஈழப் போராட்டத்தில் உள்ள நடைமுறைதான்’ என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். ‘1987_ம் ஆண்டில் இந்திய அமைதிப்படையினரோடு மோதல் ஏற்பட்டபோதுஇ தன்னுடைய மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். அதைத்தான் இப்போது கருணா செய்திருக்கிறார்’ என்கிறார்கள் கருணாவின் விசுவாசிகள்.
பிரபாகரனைஇ கருணா எதிர்ப்பதன் காரணம் என்ன என்கிற தகவல்இ இதுவரை ரகசியமாகவே இருந்துவந்தது. இப்போது அந்தக் காரணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள்இ கருணாவின் ஆதரவாளர்கள்.
‘புலித்தலைமைக்கு எதிராக கருணா போர்க்குரல் கொடுக்க முக்கிய காரணம்இ பொட்டு அம்மான்தான்’ என்கிறது கருணா தரப்பு.
ராஜீவ்காந்தி கொலையில் மிக முக்கியமான குற்றவாளியான பொட்டு அம்மானுக்கும்இ கருணாவுக்குமிடையே எப்போதும் பகைதான். இரண்டு பேருமே கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகஇ புலிகள் அமைப்பில் கோலோச்சி வருபவர்கள். மிகவும் சீனியர்கள் என்பதால்தான் அவர்களுக்கு ‘அம்மான்’ என்கிற சிறப்புப் பெயரும் கொடுக்கப்பட்டது. அம்மான் என்றால்இ தாயுடன் பிறந்த தம்பிஇ அதாவது தாய்மாமன் என்று அர்த்தம். ப்ளாட் இயக்கத்தில் சீனியர் போராளிகளை ‘மாமா’ என்கிற அடைமொழியோடு அழைப்பது வழக்கம். இந்த வழக்கத்தை புலிகள் அமைப்பிலும் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தார்கள். ‘மாமா’ என்று அழைப்பதை விடுத்துஇ ‘அம்மான்’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள் புலிகள். பொட்டுவிற்கும்இ கருணாவுக்கும் இந்த ‘அம்மான்’ பட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்துவிட்டது.
கருணா பற்றி புலிகள் தரப்பில் என்ன பேச்சு? விடுதலைப்புலிகளின் ரகசிய உளவுப்பிரிவான டோசிஸ் (ஜிவீரீமீக்ஷீ ளிக்ஷீரீணீஸீவீளணீவவீஷீஸீ ஷிமீநீரக்ஷீவீவஹ் மிஸீவமீறீறீவீரீமீஸீநீமீ ஷிமீக்ஷீஸ்வீநீமீ) என்கிற அமைப்பில் பொட்டு அம்மானுக்கு நல்ல செல்வாக்குண்டு. இந்த அமைப்பின் உதவியோடு கிழக்குப்பகுதியில் கருணா மேற்கொண்ட அத்தனை ‘அத்துமீறல்’களையும் பட்டியல் போட்டு புலித்தலைமைக்குக் கொடுத்தார் பொட்டுஅம்மான்.
வெளிநாட்டிலிருந்து புலிகள் அமைப்புக்கு வந்த பணத்தை ஊழல் செய்ததுஇ தனக்குச் சொந்தமாக ஒரு மாளிகையைக் கட்டிக்கொண்டதுஇ கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியதுஇ சின்னஞ்சிறுவர்களை புலிப்படையில் சேர்த்தது என்று கருணா மீது பொட்டு அம்மான் கொடுத்த குற்றச்சாட்டுப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
டோசிஸ் அமைப்பு மூலம் தனக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்படுவதை உணர்ந்த கருணாஇ ‘இன்டலிஜென்ஸ் பி.ஏ.’ என்கிற ரகசிய உளவுப் பிரிவைத் தொடங்கினார். மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களில் தன்னுடைய எதிரிகள்இ தனக்கு எதிராக எப்படியெல்லாம் காய் நகர்த்துகிறார்கள் என்பதை இந்த அமைப்பின் மூலம் துப்பறிந்து தெரிந்துகொண்டார். தன் உயிருக்கு ஆபத்து என்பதை கருணா புரிந்துகொண்டதால்தான் மீடியாக்களுக்கு அவர் பேட்டி தந்ததாக புலிகள் தரப்பு சொல்கிறது.
கூடிய விரைவில் இலங்கை முழுக்கத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கிழக்குப்பகுதியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள்இ கருணாவை பகைத்துக் கொண்டால் தேர்தலில் வெற்றிபெற முடியாது. கருணாவை அனுசரித்துப் போனால்இ பிரபாகரன் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். ‘என்ன செய்வது’ என்று புரியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் மௌனசாட்சியாகக் கண்டு தவிக்கும் இலங்கைத் தமிழர்கள்இ ‘இப்போதைக்கு நமக்கு நிம்மதி கிடைக்காது. இன்னும் எத்தனை காலம் நாம் கஷ்டப்பட வேண்டுமோ?’ என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் நிலைமை பாவம்தான்!
_ கொழும்புவிலிருந்து பாலசேகரன்.
--------------------------------------------------------------------------------
kumudam.com