07-02-2003, 03:23 PM
இன்று வெளிவந்துள்ள வைகாசி ஆனி விடுதலைப்புலிகள் ஏட்டில் முதன்மையான விடயமாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அனேகமான மீறல் சம்பவங்கள் புலிகளை சீண்டி சண்டைக்கிழுக்கும் உள்நோக்கத்துடன் செய்யப்படுகின்றன. சமாதான சூழலைக் குலைத்து போர்ச்சூழலை உண்டுபண்ண சிங்களப் பேரினவாதிகள் விரும்புகின்றனர்.
ஒரு புறம் போர் நிறுத்த மீறல்களை சனாதிபதி சந்திரிகா அம்மையார் தூண்டியும், தானே முன்னின்று நடாத்தி;யும் வருகின்றார். மறுபுறம், இத்தகைய மீறல் நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வெறும் பார்வையாளனின் மனநிலையில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் உள்ளது. சிங்களத்தின் இந்த அரசியல் யதார்த்தம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை அர்த்தமற்றதொன்றாக மாற்றி வருகின்றது.
இதேவேளை போர் ஓய்வைக் கண்காணித்து சமாதான சூழலை வளர்த்தெடுக்கும் இலக்குடன் பணியாற்ற வந்த வெளிநாட்டுக் கண்காணிப்பாளர் குழுவினரும் படையினரின் போர்நிறுத்த மீறல்களை தடுத்து நிறுத்தும் திராணியற்றிருக்கின்றனர். எல்லாம் நடந்த பின்னர் பத்திரிகையாளர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து செய்தி கூறுவது போல, போர் நிறுத்த கண்காணிப்பாளர்களை, சிங்களப்படைகள் நடாத்துகின்றனர்.
கடலில் சிங்களப் படைகள் அடுத்தடுத்து நடாத்தி வரும் அடாவடித்தனங்கள் புலிகளது பொறுமையை அளவுக்கதிகமாகச் சோதித்து விட்டன. சர்வதேசக் கடல் வழியே பொருட்களை ஏற்றிச் செல்லும் புலிகளின் கப்பல்களை வழிமறித்துத் தாக்கி மூழ்கடித்துவிட்டு அவை ஆயுதங்களுடன் சிறிலங்கா கடற்பரப்புக்குள் நுழைந்தன என்று புலிகள் இயக்கம் மீது பழிசுமத்துகின்றன.
புலிகளின் கடற்கலங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் கண்காணிப்புக்குழுவினரை அழைத்து அவர்கள் கண்முன்னால் சிங்களக்; கடற்படை தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது. ஆயினும் சிங்களக் கடற்படை எதேச்சாதிகாரமாக தொடர்ந்தும் புலிகளின் கப்பல்களைத் தாக்கி வருகின்றது. சர்வதேச கடற்பரப்பில் இரண்டு கப்பல்களை அதன் மாலுமிகளுடனும், பொருட்களுடனும் தாக்கி மூழ்கடித்துள்ளது.
நெடுந்தீவுக் கடலில் கடற்படகொன்றின் அழிவிற்கும் மூன்று கடற்புலி வீரர்களதும் சாவுக்குக் காரணமாக இருந்துள்ளது. அத்துடன் வடக்கு - கிழக்கு கரையோர மக்களின் தொழிலிற்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டை போட்டு - அவர்களின் சொத்துக்களை அழித்தும் அப்பட்டமான போர்நிறுத்த மீறல்களை செய்து வருகின்றது.
இதுபோல சிங்கள இராணுவமும் தமிழர் தாயகப் பகுதியெங்கும் போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. உடன்பாட்டிற்கு முரணாக ரோந்துகளை, வீதிச் சோதனைகளை மேற்கொண்டும், காவல் அரண்களை, இராணுவ தங்ககங்களை புதிது புதிதாக அமைத்தும் போர்நிறுத்த உடன்படிக்கையை கேலிக்கிடமாக்கி வருகின்றன.
படையினரின் கட்டுபாட்டிலுள்ள புலிகளின் அரசியல் அலுவலகங்களை சுற்றி வளைப்பதும், உள்நுழைந்து சோதனையிட முயல்வதும் அப்பட்டமான போர்நிறுத்த மீறல்களாகும். அதேபோல, படையினரின் போர்நிறுத்த மீறல்களை அந்த அந்த இடங்களிலேயே கண்டித்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் மக்களை, சிங்கள இராணுவம் பயமுறுத்தியும், சில சமயங்களில் தாக்கியும் வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில், திருமலை மாவட்டத்தில் படையினர் செய்த படுகொலைகள் அனைவரும் அறிந்ததே. மட்டக்களப்பில் அரசியல் பணியில் ஈடுபட்;டிருந்த போராளி ஒருவரைக் கைது செய்து சிங்கள நீதிமன்றில் நிறுத்தி தடுத்து வைத்துள்ளனர். சிங்கள வான்படையின் வேவு விமானங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது பறந்து, வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஒப்பந்த மீறல்களைப் புரிந்து வருகின்றன.
இவ்விதம், சிங்கள அரசின் முப்படைகளும், பாரபட்சமின்றி போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு அமைதிப் பேச்சை சீர்குலைத்து வருகின்றன. இதைத் தடுத்து நிறுத்த முடியாமலும் விரும்பாமலும் சிங்கள அரசம் உள்ளது. இந்நிலையில், சமாதான முயற்சி என்பது சிங்கள தரப்பால் கைவிடப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. எனவும் விடுதலைப்புலிகள் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி புதினம்