03-28-2004, 11:30 AM
சங்கரியின் ஆதரவாளர்கள் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல்
(ப.தெய்வீகனும், ஜோ. வோஷிங்கரனும்)
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான சுயேச்சைக் குழு வேட்பாளர் ஒருவரும், ஆதரவாளர்களும் நேற்றுக்காலை கைதடியில் கடுமையாகத் தாக்கப்பட்டதாக ஆனந்தசங்கரி கேசரிக்குத் தெரிவித்தார்.
காலை 10 மணியளவில் கைதடிச் சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றது.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
தேர்தல் பிரசாரத்திற்கென யாழ்.செயலகத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோதே கைதடியில் வழிமறிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அரவிந்தன், பத்மநாதன் ஆகிய இருவரும் தாக்குதலில் காயமடைந்தனர் என்றும் இவர்கள் பயணித்த வாகனங்களில் மூன்று சேதமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் தலைமையிலான குழுவினரே இவர்களைத் தாக்கியதாகவும் வேட்பாளர்கள் பயணித்த ஐந்து வாகனங்களில் மூன்று வாகனங்கள் மீது பொல்லுகள், கொட்டன்கள் சகிதம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து தமது வேட்பாளர்கள் திரும்பிவரும் போதும் கூட கலைத்து கலைத்து தாக்கப்பட்டனர் என்றும் கூறிய ஆனந்தசங்கரி, இச் சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>