03-28-2004, 11:28 AM
மெய்ப்பாதுகாவலருக்குரிய சீருடையில் வந்தநபரே மகேஸ்வரனை சுட்டார்
(அ.கனகராஜா,கே.பி.மதன்,ப.தெய்வீகன்)
அமைச்சர்களுக்கான மெய்ப்பாதுகாவலர் சீருடையில் வந்த இனந்தெரியாத நபர் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு அங்கு திரண்டிருந்த ஜனத்திரள் ஊடாகத் தப்பி ஓடிவிட்டார் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விவரித்தனர்.
நேற்று மாலை ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்ற மகேஸ்வரன் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு அருகிலிருந்த அந்தோனியார் திருச்சொரூபத்துக்கு மாலை அணிவித்தார். மாலை அணிவித்துவிட்டுத்திரும்பும்போதே திடீரென இந்தத் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. 9 மில்லி மீற்றர் கைத்துப்பாக்கியாலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று கொழும்பு வடக்குக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் எச்.ஏ.நாணயக்கார தெரிவித்தார்.
துப்பாக்கிப் பிரயோகத்தின்போது மகேஸ்வரனின் வலது காதின் பின்புறமாக பாய்ந்த குண்டு வலது கன்னத்தின் வழியாக வெளியேறியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மகேஸ்வரன் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று நேற்றிரவு ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவத்தை கேள்வியுற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் செனரத் கப்புகொட்டுவ கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரனை பார்வையிட்டõர். வைத்தியர்கள் மகேஸ்வரனுக்கு தேவையான உதவிகளைத் செய்துவருவதுடன் அவர் தன்னுடன் வழமைபோலவே உரையாடினார் என்றும் கப்புகொட்டுவ தெரிவித்தார்.
மகேஸ்வரன் சுடப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்ற ஆதரவாளர்களும் பொதுமக்களும் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு நேற்றிரவு படையெடுத்தனர்.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கலகம் அடக்கும் பொலிஸாரும் ஆஸ்பத்திரியை சூழ பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
விபத்துச் சேவைப் பிரிவிற்கு செல்லும் பாதையினுள் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கின்ற மகேஸ்வரனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கட்டிலுக்கு அருகில் மேலும் இருவிசேட பாதுகாப்பு வீரர்கள் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை கேள்வியுற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு 11.20 மணியளவில் மகேஸ்வரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதி தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான கருஜயசூரிய நேற்று நள்ளிரவு ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பாக கேட்டறிந்ததுடன் மகேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>