03-28-2004, 08:11 AM
மகேஸ்வரனின் உடல்நிலை தேறிவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிப்பு
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2004, 8:46 ஈழம் ஸ
கொழும்பு ஐpந்துப்பிட்டியில் வைத்து நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் சுடப்பட்ட இந்துக் கலாச்சார முன்னாள் அமைச்சர் தியாகராஐh மகேஸ்வரனின் உடல்நிலை தேறிவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
நேற்றிரவு கொழும்பு ஐpந்துப்பட்டிப் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைககளில் ஈடுபட்டிருந்த வேளையில் இனந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டதில் இவரின் கழுத்திலும், முதுகிலும், காலிலும் காயங்கள் ஏற்பட்டன.
முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், அவர் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை நேற்று மாலை மட்டக்களப்பு பிள்ளையாரடியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அரசாங்க அதிபர் மௌனகுருசாமி, நேற்றிரவு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலை தேறிவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில் நேற்று மாலை வெள்ளவத்தை மல்லிகா வீதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த ஈ.பி.டி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
இவர் காயங்கள் எதுவுமின்றி தப்பியிருப்பதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>