03-28-2004, 08:08 AM
மட்டு-அம்பாறை இன்றைய நிலை தொடர்பாக மட்டு-அம்பாறை அரசியல்துறை விடுத்த அறிக்கை
ஜ வன்னியிலிருந்து சுகுணன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2004, 6:22 ஈழம் ஸ
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மக்களுக்கு, இன்றைய நிலை தொடர்பாக மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் அவர்கள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அவர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இன்று எமது பகுதியில் எழுந்துள்ள நிலைமை தொடர்பாக தெளிவை ஏற்படுத்த விரும்புகின்றேன். வீரம் செறிந்த மறப்போரிற்கும், தியாகம் நிறைந்த வரலாற்றிக்கும் உரியது நமது மண். இதுவரை மண்மீட்பிற்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்ட 17,000க்கும் மேற்பட்ட மாவீரர்களில் 4000 பேர் வரையான மாவீரர்களைத் தந்தது நமது மண். தமிழீழம் எனும் தனியாட்சிக்கு தமிழ்த் தேசியம் எனும் உலகப்;பொது உணர்விற்கும் எம் மக்களும், மறவர்களும் செய்துள்ள பங்களிப்பு என்றும் மறக்கப்பட முடியாதது.
இன்று அந்தப் பெருமைக்கு பங்கம் விளைவிக்கும் காரியங்கள் நிகழ்வதைக் கண்ணீருடன் பார்க்கவேண்டிய நிலை வந்துவிட்டது. எங்கள் எல்லைக்கிராமங்கள் பறிபோன போதும், எங்கள் வயல் வெளிகளும், வாழ்விடங்களும் நெருக்குதல்களுக்கு உள்ளாகிய போதும், போராட்ட காலங்களில் எங்கள் மக்களை ஆக்கிரப்புப் படைகள் மிதித்து அழித்துக்கொண்டிருந்த போதும் தமிழீழத்தின் அனைத்துத் தமிழர்களும்தான் குரல் கொடுத்தார்கள்.
83 ஆம் ஆண்டு இனக்கலவரங்களின்போது எல்லாத் தமிழர்களும்தான் வெட்டப்பட்டார்கள். நீ எந்த ஊர் தமிழச்சி என்று கேட்டுவிட்டா கெடுத்தார்கள் காடையர்கள். தமிழர்கள் என்ற ஒரே அடையாளத்திற்காகவே வதைபட்டோம். அந்த ஒரே அடையாளத்தை வைத்தே எமது மூத்த அரசியல்வாதிகளும் அதன்பின் எழுந்த எமது போராட்டமும் முன் நகர்ந்தது. மீண்டும் ஒரு இனக்கலவரம் வராது என்றோ அந்த நேரத்தில் தமிழர்களின் ஊர்களைக் கேட்டுவிட்டுத்தான் காடையர்கள் தாக்குவார்கள் என்றோ கருணாவால் உறுதி கூறமுடியுமா? அப்படி நடந்தாலும் அது எவ்வளவு ஈனம்? அத்துமீறிய குடியேற்றங்கள் என்று ஓரளாவது நிறுத்தப்பட்டிருப்பது தலைவர் பிரபாகரனின் தலைமையிலான போர் வலுவின் தாக்கமேயன்றி தனிமனிதனான கருணாவினால் அல்ல என்பதை யாவரும் அறிந்திருக்கிறோம்.
தனது கட்டளையில் இயங்கிய பல போராளிகளைக் கொன்று குவித்த புளொட் மோகனுடன் கருணா கூட்டு வைத்திருக்கிறார். அன்று மோகனால் கொல்லப்பட்ட அத்தனை போராளிகளின் பெற்றோருக்கும் முன் கருணாவால் தலைநிமிர்ந்து நிற்க முடியுமா? அந்தப் போராளிகளின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும், துரோகியின் காலடியில் விற்று தன் குடும்பத்தின் சுகவாழ்வைத் தேடி நிற்கும் கருணாவின் கயமையைப் பெற்ற வயிறுகளிலிருந்து புறப்படும் எரிநெருப்பே பொசுக்கிவிட வேண்டும்.
கருணாவின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வரும் எமது மண்ணின் போராளிகள் மீது எமது வீரர்களையே ஏவிவிட்டு இனவாதிகளோடும், துரோகிகளோடும் நின்று வேடிக்கை பார்க்க நினைக்கிறார் கருணா. இதற்காகவா எங்களின் பிள்ளைகளை ஒப்படைத்தோம். தலைவர் பிரபாகரனின் காலத்திலேயே தமிழீழம் அமைய வேண்டும் என்று கேட்டு தலைவரின் படத்தின் முன்பு அல்லவா எங்கள் பிள்ளைகளைக் கொடுத்தோம், சகோதரச் சண்டை செய்யவா அவர்களை அனுப்பி வைத்தோம்.
இந்த நிலமை தொடர்ந்தால், எம்மண்ணின் கதி எடுப்பார் கைபிள்ளையின் கதையாகிவிடும். பேரினவாத சக்திகளை நாடும் கருணா அவர்களுக்காக எல்லாவற்றையுமே வி;ட்டுக்கொடுத்து விடுவார். தட்டிக்கேட்க ஆளில்லாத துணிவில் பேரினவாதம் தன் சூழ்ச்சிவலையை விரிக்கும். எல்லைக்கிராமங்களில் நெருக்கடிகள் அதிகரிக்கும். அப்படி ஒரு நிலைக்காகத்தானா இவ்வளவு காலமும் பாடுபட்டோம்.
வடக்கின் மேல் இன்று துவேசம் கக்கிக்கொண்டிருக்கும் கருணாவின் குடும்பம் அன்று ஒருநாள் கடற்பயணம் செய்தபோது காவலிற்கு வந்த கரும்புலிப்படகில் இருந்தவர்களில் ஒருவர் கண்ணாளன் வாழைச்சேனையைச் சேர்ந்தவர். மற்றவரின் பெயர் நகுலன் வடபகுதியைச் சேர்ந்தவர். அன்று அவர்கள் இருவரும் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்திராவிடின் இன்று கருணா இல்லை. குடும்பம் இல்லை. பிரதேசம் பார்த்தா அவர்கள் தங்கள் பணியைச் செய்தார்கள். கருணாவின் துரோகத்தைப் பார்த்து இன்று நகுலனைவிட கண்ணாளனே அதிகம் தலைகுனிவான். அவன் தலைவர் மீதும் தமிழ்த்தேசியம் மீதும் கொண்டுள்ள பற்றை அவனின் உறவினர்களும் நன்கறிவர்.
இன்று வெளிமாவட்டங்களில் மடிந்த வீரர்களைக் கொச்சைப்படுத்திக் குறுகியவாதம் செய்கிறார்கள். சண்டை எங்கு நடந்தாலும் அது தமிழீழத்திற்குரியது. சண்டைக்களங்கள் அமையும் இடங்களிற்கு வீரர்கள் போவதே அன்றி வீரர்களைத் தேடி சண்டை வரும்வரை இருப்பதுதானே கோழைத்தனம். அப்புகாமியும், சுதுபண்டாவும் காலியில் மட்டும்தான் சண்டை பிடிப்போம் என்றால் அங்கு யாரோடு சண்டை பிடிப்பது? இந்தியாவில் கார்கிலில் மலையில் நிகழ்ந்த சமர்களில், மெட்ராஸ் ரெஐpமென்ட் சண்டை இட்டதை அனைவரும் அறிவோம்.
தமிழ் நாட்டில் மட்டும்தான் சண்டை பிடிப்போம் என்று அவர்கள் சொன்னால் அது எவ்வளவு கேலிக்கூத்தாகியிருக்கும். nஐயசிக்குறு சண்டைகளில் கருணாவின் கீழ் இருந்து சண்டையிட்டு வீரச்சாவடைந்தவர்களில் மட்டக்களப்பு-அம்பாறை போராளிகளைவிட வேறு மாவட்டப் போராளிகளே அதிகம். மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மணலாறு, திருகோணமலை, என்று மட்டுமல்லாது தமிழீழத்திற்கு வெளியேயிருந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உயிர்க்கொடை தந்திருக்கிறார்கள்.
கருணாவைப்போல் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தயாராவது இந்த விடயங்களைக் கொச்சைப்படுத்திக் கேட்கவில்லையே? எமது மாவட்டத்தில் மட்டும் இருந்து இந்த அசிங்க ஓலம் வருவது உலகளாவிய தலைகுனிவை அல்லவா கொண்டு வந்திருக்கிறது. எவருக்கும் தலைகுனியாது உழைத்து வாழந்த ஓர்மமுடைய நமது மக்களை இது எவ்வளவு தூரம் அவமதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
உங்களை அச்சுறுத்தி செயற்படவைக்க விளையும் கருணாவின் சுயநலத்திற்கும் தேசத்துரோகத்திற்கும் ஒத்துழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்பாவிப் போராளிகளும், பொதுமக்களும் பங்கமடையா வண்ணம் தேசிய நலன்கருதி கருணாவின்மேல் அவரின் அடிவருடிகள். மற்றும் ஒத்துழைப்பு வழங்குவோர் மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவீரர்களின் கனவின் பெயரில் விரைவில் நீதி நிலை நாட்டப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>