03-28-2004, 08:05 AM
பிரபல ஊடகவியலாளர் றோகண குமார படுகொலையின் பின்னணியில் ஐனாதிபதி சந்திரிகா!
ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2004, 6:18 ஈழம் ஸ
தென்னிலங்கையின் பிரபல ஊடகவியலாளர் றோகண குமார படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சிறிலங்கா ஐனாதிபதி இயங்கியிருப்பதாக பிரான்சின் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரபல சிங்கள வார இதழான ~சற்றான| சஞ்சிகையின் செய்தி ஆசிரியர் ரோகண குமார படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலை உலகிற்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறிலங்கா ஐனாதிபதி தொடர்பான ஊழல் மோசடி விவகாரம் ஒன்றை அம்பலப்படுத்திய காரணத்தாலேயே றோகண குமார படுகொலை செய்யப்பட்டடதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் ஐனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் றோகண குமாரவை கொலை செய்யும்படி உத்தரவிட்;டிருந்ததாகவும் தெரிவித்திருக்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு ஐனாதிபதியின் சிறப்பு படைத்துறைப் பிரிவினரே றோகண குமாரவை கொலை செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இதேவேளை, உலகின் பலம் வாய்ந்த அமைப்பாக விளங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்று ஐனாதிபதியின் குரல் தரவல்ல அதிகாரி ஐனதாச பீரிஸ் மறுத்துள்ளார்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>