03-27-2004, 11:10 PM
நோபல் பரிசைப் பாருங்க .... !!!
<img src='http://homepage.rub.de/muthu.karuthadurai/weblog/nobelmedal-front.jpg' border='0' alt='user posted image'><img src='http://homepage.rub.de/muthu.karuthadurai/weblog/nobelmedal-back.jpg' border='0' alt='user posted image'>
படத்தில் இருப்பதுதான் நோபல் பரிசு.. அதாவது நோபல் பரிசினை வெல்லும் சாதனையாளர்களுக்குக் கொடுக்கப்படும் பதக்கம்...
இப்பதக்கத்தின் ஒரு பக்கம் இருப்பது இப்பரிசை உருவாக்கிய, வெடிமருந்து கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் என்ற விஞ்ஞானி.. இப்பக்கத்தில் அவர் பிறந்த வருடமும் , மறைந்த வருடமும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.
அதன் மறுபக்கத்தில் இயற்கைத் தேவதையும் .அதற்கு ஆடைபோர்த்தும் விஞ்ஞானியும் இரு உருவங்களாய்ச் சித்தரிக்கப்பட்டுள்ளனர் .. இப்பக்கத்தில் " Inventas vitam juvat excoluisse per artes " என்ற இலத்தீன் மொழி வாசகம் உள்ளது. இவ்வாக்கியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தால் " அறிவியல் வாழ்க்கையை மேம்படுத்துகிறது , கலை அதை அழகுபடுத்துகிறது " என்பதுபோல வரும் ..
அருகிலுள்ள "REG. ACAD. SCIENT. SUEC." என்ற வாசகம் ராயல் சுவீடிஸ் அகாடமி ஆ·ப் சயின்ஸஸ் என்பதின் சுருக்கத்தைக் குறிக்கிறது .அப்பக்கத்தின் கீழ் பகுதியில் பரிசு அறிஞரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது ..
இன்னும் துல்லியமாய்ச் சொன்னால் நாம் பார்க்கும் இந்தப் பதக்கம் லினஸ் பாலிங் என்ற வேதியியல் அறிஞருக்கு 1954-ல் கொடுக்கப்பட்ட பதக்கம்.. இவரே 1962 - ல் அமைதிக்கான நோபல் பரிசையும் வென்று பகிர்ந்தளிக்கப்படாத இரு நோபல் பரிசுகளைப் பெற்ற ஒரே நபர் என்ற பெருமையையும் பெற்றிருப்பவர். மூலக்கூறுகளில் அணுக்கள் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்று லினஸ் பாலிங் ஆராய்ந்தமைக்காக அவருக்கு இப்பரிசு அளிக்கப்பட்டது...
இவ்வாண்டு இயற்பியல் மற்றும் வேதியியலுக்குக் கொடுக்கப்படும் பதக்கங்களும் இதே மாதிரியில்தான் இருக்கும் ஆனால் இவ்வருடம் பரிசு பெரும் அந்தந்த அறிஞரின் பெயர் பொறிக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் இப்பதக்கத்துடன் இன்றைய மதிப்புப்படி அவர்களுக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் ( நம்மூர் பணத்துக்குத் தோராயமாய் 6 கோடி ரூபாய் ) பரிசாக வழங்கப்படுகிறது ..
நன்றி - முத்து

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>