03-27-2004, 10:30 PM
BBC Wrote:பிரிந்து நின்றால் 1, 2, 3, 4 இணைந்து நின்றால் 1234 பகிரங்கக் கடிதம்-வாசகன் இரட்ணதுரை-
உடன்பிறப்புகளே!
முல்லாவின் கதை ஒன்று!
முல்லாவிற்கு திருமணம் நடைபெற்று தேனிலவுக்கு மனைவியுடன் செல்கின்றார். படகு ஒன்றில் இருவரும் சல்லாபம் செய்தபடி மகிழ்ச்சியாகச் செல்கின்றனர். திடிரென்று கடும் காற்றும் புயலும் மழையும் வருகின்றது. படகு ஆடுகின்றது. புயலின் அறிகுறி தெரிகின்றது. புதுப்பெண் பயந்துவிட்டார். உடனே கணவனைக் கட்டிக்கொண்டால். அவளின் உடல் நடுங்குவதை கணவனால் உணரமுடிந்தது.
ஆனால் கணவனோ சிரிக்கின்றான். வாய்விட்டுச் சிரிக்கின்றான்.
மனைவி அவனை உற்றுப்பார்க்கிறாள். அவளுக்குச் சந்தேகம் பிடித்துக்கொண்டது. எதற்கும் துணிந்து கேட்டுவிட்டாள். ~ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?\" படகு கவிழப்போகின்றதே என்ற பயமில்லையா? புயல் வரும்போல் தெரிகிறதே? உங்களுக்கு உயிர் மேல் ஆசையில்லையா?\" என்று நடுங்கியபடியே கேட்டாள்.
உடனே அந்தக் கணவன் - தன்னிடமிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து அவளின் முகத்துக்கு நேரே சுடுவதைப் போல் காட்டினான். அதனை மனைவியின் நெற்றிப் பொட்டில் வைத்தான்.
இப்போது அவள் சிரித்தாள். ஆனால் அவன் அவளைப் புரிந்துகொண்டாலும் கேட்கிறான். ~ஏன் உனக்கு துப்பாக்கியைக் கண்டால் பயமில்லையா? உனக்கு உயிரின் மீது ஆசையில்லையா?\" அவன் கேட்கிறான். ~அதெப்படி நான் பயப்படமுடியும்?|
~ஏன்?|
~என்னை அன்பு செய்பவரிடத்திலல்லவா இந்தத் துப்பாக்கி இருக்கின்றது. என்னை அதிகம் நேசிப்பவரின் கையிலல்லவா இந்தத் துப்பாக்கி இருக்கின்றதுஇ நான் கடவுள் போல் நேசிக்கும் உங்கள் கையிலல்லவா இந்தத் துப்பாக்கி இருக்கின்றதுஇ நான் ஏன் பயப்படப் போகிறேன்.?| என்றாள் மனைவி.
உடனே முல்லா 'அதேபோல்தான் இந்தப் புயலும்இ காற்றும்இ மழையும் என்னை அன்பு செய்பவரின் கையில்தான் இருக்கின்றது. எனவே நான் ஏன் பயப்படவேண்டும்\" என்று கேட்டார்.
ஒரு கணவனின் மீது மனைவி வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தவும்இ கடவுள் மீது ஒருவர் எத்துணை நம்பிக்கை வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவும் இந்தக் கதை சொல்லப்படுவதுண்டு. இது 'நான் கடவுள் போல் மதிக்கும்\" ஒருவர் மீது எத்துணை நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்பதற்கும் பொருந்தும்.
கப்பல் ஒன்று கடல் வழியே போய்க்கொண்டிருக்கின்றது. அதிலே பயணம் செய்கின்றவர்கள் அனைவரும் கப்பல் தலைவனின் மீது நம்பிக்கை வைத்து செல்கின்றனர். வழியில் புயல் அடிக்கின்றது. தலைவனின் மீது பயணிகள் சந்தேகம் கொள்கின்றனர். தலைவனின் கட்டளையை பயணிகள் ஏற்க மறுக்கின்றனர். தலைவன் எவ்வளவோ புத்திமதிகள் சொல்லிப் பார்க்கிறான். பயணிகள் கப்பற் தலைவனை து}க்கி எறிகின்றனர். கடைசியில் அவர்கள் தாம் செய்வதறியாது தவிக்கின்றனர். இறுதியில் கப்பலுடன் அவர்களும் சேர்ந்து மூழ்கிப் போகின்றனர்.
வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று நம்பிக்கை. கணவன் - மனைவிஇ பெற்றோர் - பிள்ளைகள்இ அரசியல்வாதிகள் - மக்கள்இ தலைவர்கள் - தொண்டர்கள் என்று ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்கவேண்டிய இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மீது நம்பிக்கை வைக்கவேண்டிய வரலாற்று கட்டாயத்தில் சகல தமி;ழ் மக்களும் உள்ளனர். அதனை மக்கள் ஏற்றுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. தாம் நம்பிக்கைக்கு உரியவர் என்பதை அவர் பல தடவைகளில் எடுத்துக் காட்டியிருக்கின்றார்.
அமெரிக்காவாக இருந்தாலும்இ இந்தியாவாக இருந்தாலும்இ இலங்கை அரசாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர்களிடம் உதவிகளை பெற்றாலும் - அவர்களின் சொல்லுக்கு கட்டுப்படாத நிலையில் இலட்சியம் ஒன்றையே குறி;க்கோளாகஇ மக்களின் விடுதலைக்கான பயணத்தை விட்டுக்கொடுக்காது தனக்கு உதவியவர்களை உதறித்தள்ளவும் - ஏன் அவர்களை எதிர்க்கவும்இ துணிந்து பல தடவைகளில் தாம் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதை எடுத்துக்காட்டியிருக்கின்றார்.
புலிகளுடன் முரண்பட்டு நின்ற பல தமி;ழ் இயக்கங்களும்இ அரசியல் கட்சிகளும் கூட அதனை இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேசினால் போதுமானது. எங்களுடன் பேசத் தேவையில்லை என்று சகல தமிழ் கட்சிகளும் அரசிடமும்இ இனப்பிரச்சினை விடயத்தில் தலையிடும் வெளிநாட்டு மத்தியஸ்தர்களிடமும் தெரிவித்துள்ளனர். ஏன் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் - அமைச்சர் அஸ்ரப் அவர்கள் கூட ~விடுதலைப் புலிகள் பேச்சுக்களுக்கு வந்தால் நான் என்னுடைய முஸ்லிம்களுக்கான தனி அலகு கோரிக்கையை கைவிடத்தயார்\" என்று எரிக்சொல்ஹெய்மிடம் தெரிவித்திருந்தார். இது விடுதலைப் புலிகளின் மீது அனைவரும் கொண்டுள்ள நம்பிக்கையையே காட்டுகின்றது.
இன்று புலிகளுக்குள் ஒரு பிரச்சினை வராதா என்று எதிர்பார்த்திருந்த உள்ளுர் எதிரிகள் கூட ஏங்கிப்போய் நின்கிறார்கள். இது முதலுக்கே மோசம் என்பதுபோல். வரலாறு சில விடயங்களை எங்களுக்குக் கற்றுக்கொடுக்கும். சீனப் புரட்சியில் சீனப் போராளிகள் மாவோ சேதுங் மீது சந்தேகப்பட்டிருந்தால்இ ரசியப் புரட்சியின் போது லெனினின் மீது ரசியப் போராளிகள் சந்தேகப்பட்டிருந்தால்இ கியுபா புரட்சியின்போது பிடல் காஸ்ரேயை போராளிகள் சந்தேகித்திருந்தால்இ வியட்நாம் யுத்தத்தில் கோசிம்மை போராளிகள் சந்தேகித்திருந்தால். இன்றைக்கு அந்த நாடுகளுக்கு சரித்திரமே இல்லாமல் இருந்திருக்கும்.
~நீ எல்லாரையும் சந்தேகப்படு. அப்போதுதான் நீ உண்மையான போராளியாக இருக்கலாம்\" என்று தலைவர் சொல்லிக்கொடுத்ததை தவறாக புரிந்துகொண்டிர்களே?
~சாதி ஒழிப்புஇ சமபந்தி\" என்ற சொல்லே பயன்படுத்தக் கூடாது. அப்படி அந்தச் சொல்லைச் சொல்லும்போது சாதி என்பது இருக்கிறது என்பது ஞாபகப்படுத்தப்படுகின்றது - என்று சொன்ன தலைவருக்கு இப்படியொரு சோதனை.
எப்படி? இப்படி? இந்தப் பிரச்சினை உருவானதுஇ எப்படி முன்னர் ஆதிகால சமுதாயம் பிராந்தியங்களாகப் பிரிவுபட்டிருந்தது என்று தமது அரிப்பைத் தீர்த்துக்கொள்ள - குட்டையைக் குழப்ப பல எழுத்தாள எருமைகள் புறப்படப் போகின்றனர் என்பதை நினைக்கவே பயமாக இருக்கின்றது.
எவருக்கு எங்கள் பிரச்சினை அவரின் பிரச்சினைக்குத் தீர்வாகின்றதோஇ - அவர் எங்கள் பிரச்சினையின் தீர்;வு குறித்து எழுதப்போகின்றார் என்று நினைக்கவே நடுங்கிறது.
மட்டக்களப்பு ஆயர் சொன்னதுபோல் இப்படியொன்று நடந்ததே மறக்கப்படவேண்டும்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு 'அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது\" என்பது அது. உண்மையில் அதுவல்ல அந்தப் பழமொழி. 'அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது\" என்பதே சரி. அதாவது ஊரில் சோற்றுப் பானையில் கஞ்சி வடிக்கையில் சில பருக்கைககள் கஞ்சிக்குள் விழவே செய்யும். ஒரு பானை சோற்றுக்காக ஒரு சில சோறு கஞ்சிக்குள் கல்லறை காணும். அது தவிர்க்க முடியாது. விடுதலைப் போராட்டப் பாதையும் அப்படித்தான்.
அதற்காக தவறுகளை எல்லாம் நியாயப்படுத்தவேண்டும் என்பதோ அல்லது கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்பதோ எனது வாதமல்ல.
ஆனால் நாம் இன்று ஒரு வரலாற்றுக் கடமையின் முன் நிற்கிறோம். நாம் விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத் தமிழர்கள் புலிகளின் தலைமையை அதன் தலைவரை ஏற்கவும் நம்பவும் வேண்டியது வரலாற்றுக் கடமை. இது தவிர்க்கப்பட்டால் தமிழன் என்றொரு இனம் இலங்கையில் இருந்தது என்பதை வருங்காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சியில்தான் கண்டுபிடிக்கமுடியும்.
விடுதலை அமைப்புக்கள் ஆயிரம் தமிழீழத்தில் உருவானபோதும்இ அவை யாவும் அவற்றின் தலைமைகள் யாழ்ப்பாணத்தில் உருவானபோதும் - தமிழீழத்தின் தலைநகர் திருமலைதான் என்று எந்தவொரு அமைப்பும் சொல்லாமல் இருந்ததில்லை. தமக்கிடையில் என்ன வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் அனைத்து தமிழ் அமைப்புக்களும் கட்சிகளும் தமிழீழத்தின் தலைநகர் திருமலையென்றே கூறினர். அனைத்து அமைப்புகளும் தமிழர்களுக்குத் தீர்வு புலிகளால்தான் முடியும் என்பதை இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. அது காலத்தின் கட்டாயம்.
அதனால்தான் மெல்ல ஒரு தீர்;வு வந்தது. அட அதையும் மெல்ல வருகின்றனரே?
ஆடுகள் அடிபட்டால் ஒழுகும் இரத்தத்தைக் குடிக்க ஓநாய்கள் காத்திருக்கின்றனவே?
எவருக்கு எங்கள் பிரச்சினை அவரின் பிரச்சினைக்குத் தீர்வாகின்றதோஇ - அவர் எங்களுக்குள் பிரச்சினையைத் து}ண்டிக்கொண்டே இருப்பார் - அவரின் பிரச்சினை தீரும்வரை.
'தலைக்கு மட்டும் தயைணையா? வாய்க்கு மட்டும் உணவா? வேலை செய்வது கைகால்கள்இ தலைக்கு மட்டும் கிரீடமா?\" என்று உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் கேள்வி கேட்கத் தொடங்கினால் என்ன நடக்கும். வேலைசெய்ய வேண்டிய உறுப்புகள் வேலைநிறுத்தம் செய்தால் என்ன நடக்கும்? வீரத்தைக் காட்ட வேண்டியவை விறைத்துப் போய்விடும். உடம்பு உடலமாகிவிடும். சாதனை படைக்க வேண்டியது சடலமாகிவிடும். தமிழர்களும் அப்படித்தான்.
தமிழர் சரித்திரம் படைக்க முடியாது. தரித்திரம்தான் படைக்கலாம் என்றாகிவிடும்.
இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது - மட்டக்களப்பு கவிஞன் வாமதேவனை.
அவனின் கவிதைகளை யாழ்ப்பாணத்தில்; தொகுத்து வெளியிட்டது டொமினிக் ஐPவாவின் மல்லிகைப் (பந்தல்) வெளியீடு.
அதில் ஒரு கவிதை.
அந்த மட்டக்களப்புக் கவிஞனின் கவிதை.
தனித்து நின்றால்
1, 2, 3, 4
இணைந்து நின்றால்
1234
புரிந்து கொண்டால்
அதுபோதும் எமக்கு
நன்றி!
வாசகன் ரட்ணதுரை
(கனடா)
நன்றி: ஈழமுரசு / வெப் தமிழன்
பீபீசி இந்தக்கட்டுரைக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது தமிழ்நாதத்துக்கு. தாறதகவலை நீங்கள் எங்கையிருந்து எடுத்ததெண்டதையும் ஒழுங்காத்தாங்கோவன்.
http://www.tamilnaatham.com/special/openle...ter20040326.htm :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

