03-27-2004, 09:47 PM
விடுதலைப் போராட்டங்களின் இறுதியில் ஆளுமை செலுத்தும் பிரதேசவாதம்
உ லகின் புரட்சிகர அமைப்புகளின் அல்லது ஆயுதப் போராட்டக் குழுக்களின் வரலாற்றை நோக்குவோமாயின், அப்புரட்சி அமைப்புகள் மற்றும் ஆயுதப் போராட்டக் குழுக்கள் மத்தியில் உள் முரண்பாடுகள் போர் நிறுத்தக் காலக்கட்டங்களில் அல்லது தீர்வுத்திட்டம் முன் வைக்கப்படுகையி லேயே முனைப் படைகின்றன.
இதேவேளை, அகிம்சா வழியைப் பின்பற்றி விடுதலைப் போராட்டத்தை முன் னெடுத்த அமைப்புகள் மத்தியிலும் காணப்படும் உள் முரண்பாடுகள் தீர்வினை அண்மிக்கும் வேளையிலேயே முனைப்படைந்துள்ளன. இவ்வாறு முனைப் படையும் முரண்பாடுகளில் அதிகாரம் அல்லது தம்மைத் தாமே ஆட்சி செய்யும் விடயமே அமைப்புகளும் இயக்கங்களும் பிளவுறுவதற்கு அடிப்படை காரணமாய் அமைந்துள்ளன. அதிகாரம் அல்லது தம்மைத் தாமே ஆளும் விடயம் பிராந்தியம், மதம், மொழி, கலாசாரம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டே எழுந்துள்ளன. எழுகின்றன. பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வேளையில் மேற்கூறப்பட்ட விடயங்கள் எழுவதுமில்லை. எழுப்பப்படுவதுமில்லை.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அகிம்சை போராட்டத்தை மகாத்மாகாந்தி முன்னெடுத்த வேளை அகண்ட இந்தியாவின் அனைத்து பிரிவினரும் மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் பிரித்தானியர் இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்க முன்வருகையில் பிராந்தியக் கோரிக்கை தலைத்தூக்கியது.
மகாத்மாகாந்தியுடன் ஒன்றிணைந்து போராடிய அலிஜின்னா முஸ்லிம்களுக்கு கிடைக்கப்போகும் சுதந்திரத்தில் சமஅந்தஸ்து கோரினார். இதனைத் தர மறுப்பின் தனிநாடு வேண்டுமெனக் கோரினார். ஜின்னா முஸ்லிம்கள் என்றதன் அடிப்படையில் தனிநாடு கோரிக்கையை முன்வைப்பதற்கு பிரதான உறுதுணையாக இருந்தது தனியான பிராந்திய ரீதியில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்தமையே. இந்தியாவில் முஸ்லிம்கள் மேற்கு பகுதியிலும், கிழக்கில் வங்காளப் பகுதியின் தொடர் நிலப்பரப்பில் வாழ்ந்தமையினால் ஜின்னாவின் கோரிக்கை வெற்றி பெற வாய்ப்பளித்தது. இவ்விரு பிராந்தியங்களிலும் பார்க்க முஸ்லிம்கள் இந்தியாவின் ஏனைய பிரதேசங்களில் அதிகமாக வாழ்ந்த போதிலும் அப்பிராந்தியங்களில் தனியாட்சியை ஜின்னாவினால் கோர முடியாது போய்விட்டது.
அதேபோல், 1970ல் மேற்குப் பாகிஸ்தானிலிருந் து கிழக்கு பாகிஸ்தான் அதாவது தற்போதைய பங்களாதேஷ் தனி நாடாக பிரிவதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாக பிராந்திய ரீதியான தொடர்ச்சியே உறுதுணையாக அமைந்தது. கிழக்கு பாகிஸ்தான் மக்களின் கலாசாரம் பிரதான காரணியாக இருந்தப் போதிலும் பிராந்தியமே தனிப் பிராந்தியமாக இருந்தமையினாலேயே பங்களாதேஷை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.
ஜின்னாவைப் போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலைமையளித்த டாக்டர் அம்பேத்காரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி நாடு கோரினார். ஆனால் இக்கோரிக்கை வெற்றி பெறவில்லை. இதற்கான பிரதான காரணம் தாழ்த்தப்பட்ட மக்கள் ஓரிடத்தில் செறிந்து வாழாமல் நாடு முழுவதும் பரவியிருந்தமையே. அதாவது பிரதேச ஒருமைப்பாடு அல்லது நிலத் தொடர்ச்சி இன்மையேயாகும். இதனாலேயே இதற்கு மாற்றீடாக தனியான தேர்தல் தொகுதிகளை ஒதுக்கும்படி டாக்டர் அம்பேத்கார் கேட்டமை குறிப்படத்தக்கது.
இவற்றுடன் மிக அண்மைய வரலாறு ஒன்றினை நோக்குவோமாயின் நீண்ட காலமாக இன ஒடுக்கு முறைக்கு உட்பட்டிருந்த தென்னாபிரிக்கா பல கறுப்பின மக்களை கொண் டிருந்ததுடன், கறுப்பினர் என்ற ரீதியில் நாட்டின் அனைத்து கறுப் பின மக்களும் வெள் ளையரின் இன ஒடுக்கு முறைக்கு உட்பட்டிருந்தனர்.
கறுப்பினர் என்ற ரீதியில், நெல்சன் மண்டேலாவின் தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து போராடினர். ஆனால், சுதந்திரத்தை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கபட்ட வேளையில், தென்னாபிரிக்காவின் இன்னுமொரு தனித்துவமான இனக்குழுவின் தலைவராக இருந்த மென்கிஸ்டோ புத்தலேசி தமது மக்களுக்கு தனியான நாடுவேண்டுமெனும் கோரிக்கையை 1979ல் முன்வைத்தார். நில ரீதியாக ஒரு தொடர்ச்சியான பிரதேசத்தில் வாழ்ந்தமையினால் இவர்களால் இக்கோரிக்கையை முன்னெடுக்க முடிந்தது.
ஆரம்பத்தில் இக்கோரிக்கையை நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்கா தேசிய காங்கிரஸ் அசட்டை செய்தது. நாளடைவில் சிவில் யுத்தம் ஒன்று உருவாகியதுடன் நெல்சன் மண்டேலாவினரது இனத்தவர்களுக்கும், புத்தலேசியின் இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையில் யுத்தம் ஒன்று தோன்றி பேரழிவுகள் ஏற்பட்டன. இவ்விரு பிரிவினருக்கும் இடையில் காணப்பட்ட பிரதான வேறுபாடு கலாசாரரமும், பேச்சு மொழியுமே. இதன் பின்னர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் புத்தலேசியின் இனத்தலைவர்களுக்கும் சம அந்தஸ்து கிடைக்கும் வகையில் புதிய அரசின், அரசியலமைப்பை அதற்கேற்ற வகையில் வடிவமைத்தது. புத்தலேசி தமது இனத்தின் கலாசார பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்காகவே தாம் தனி நாட்டை கோருவதாகக் கூறியமை குறிப்பிடத்தக்கது.
இவற்றுடன் அண்மைய இந்திய வரலாற்றை பார்த்தோமானால் கடந்த மூன்று வருடங்களுக் குள் மூன்று புதிய யூனியன் அந்தஸ்து மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அம்மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தல் அவைகளுக்கு கடந்த வருட இறுதியில் தேர்தலும் நடாத்தப்பட்டது. இம்மாநிலங்கள் வெறுமனே கலாசாரத்தையும் பேச்சு மொழியையும் அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டன.உத்திராஞ்சல்,ஜார்கன்ட், சட்டிஸ்கர், எனும் மூன்று மாநிலங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. முறையே உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார் முதலிய மாநிலங்களில் பேச்சு மொழியினையும் கலாசார வித்தியாசத்தையும் அடிப்படையாகக் கொண்ட மக்கள் கடந்த 50 வருடங்களாக மாநில சுயாட்சி கோரி வந்தனர். இப்பிரிவினர் மேற்கூறிப்பிட்ட மாநிலங்களின் தொடர்நிலப்பரப்பினை தமது வாழ்விடமாகக் கொண்டமையினால் அவர்களால் இக்கோரிக்கையை வெல்ல முடிந்தது.
இப்பின்புலத்துடன் நம்நாட்டு அரசியல் வரலாற்றை மீட்டுப் பார்ப்போமாயின் பிரித்தானியர் இலங்கையருக்கு நிர்வாகத்தினை பங்களிப்பதற் காக முயற்சிகளை மேற்கொள்ளும் போது சிங் களவர் பிராந்திய ரீதியில் கரையோரச் சிங்களவர் மேல் நாட்டுச் சிங்களவர் (கண்டிய) என்பதன் அடிப்படையில் தமது கோரிக்கைளை முன்வைத் ததுடன் தமிழர் வடகிழக்கு வாழ் தமிழர் என்ற ரீதியில் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் எழுபதுகளின் பின்னர் பிராந்திய ரீதியாக தோன்றிய அரசியல் வளர்ச்சியின் காரணமாக கிழக்கு மாகாண நாடாளுமன்றம் தமிழ் அரசியல்வாதிகள் தனக்கு உரிய இடம் அளிக்கப்படுவதில்லை எனும் கருத்ø அவ்வப்போது முன்வைத்தனர். 1977ன் பின்னர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இரா சதுரை இதனை வெளிப்படையாக முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி ஐக் கிய தேசிய கட்சியில் இணைந்தமை குறிப் பிடத் தக்கது. இக்காலக்கட்டத்தில் ஆயுதப் போராட்டம் வடகிழக்கில் வலுப்பெற ஆரம்பத்தமையினால் மேலெழுந்த இப்பிரதேசவாதம் கீழே தள்ளப்பட்டது. ஆயினும் இது நீருபூத்த நெருப்பாக அனைத்து ஆயுதக்குழுக்கள் மத்தியில் காணப்பட்டமையை மறுப்பதற்கில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சூழல் எழும்போது பிரதேசவாதம் மறைமுகமாக தலைதூக்கியமையையும் மறுப்பதற்கில்லை.
தனிமனிதனுக்கு பல்வேறு அடையாளங்கள் இருப்பது போல் இனமொன்றிற்கும் பல்வேறு அடையாளம் இருக்கின்றன. ஒரு மொழியை பேசுவதனால் முதல் அடையாளம் மொழியின் அடிப்படையில் உருவாகின்றது. அதாவது தமிழ் பேசுவதனால் தமிழன் எனும் அடையாளம் அதன் பின்னர் மத ரீதியான அடையாளம், அதனைத் தொடர்ந்து பிரதேச ரீதியான அடையாளம் எனப் பல அடையாளங்கள் இருக்கின்றன. இவ் அடையாளங்கள் தேவையின் அடிப்படையில் முதன்மைப் பெறலாம்.
எனவே, பிரதேசவாதம் என்பது, வரலாற்று ரீதியில் தோன்றுவது மறுக்க முடியாததொன்று. மேலும் இது கலாசாரத்தை அல்லது மொழியை அதற்கான துணை காரணியாகக் கொண்டிருக்கலாம். சில வேளைகளில் இவை இரண்டுமே இல்லாமல் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை அதற்கான காரணியாக கொண்டிருக்கலாம். மறுவகையில் கூறுவதாயின் அதிகாரப்பரவலே பிரதேசவாதத்திற்கான மூலகாரணம்.
இதனடிப்படையில் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பில் தோன்றியுள்ள பிரச்சினையை நோக்குவோமாயின் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தளபதி கருணா, தமது பிரதேசத்திற்கு உரிய அதிகாரம் கிடைக்கவில்லையெனக் கூறி விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி தனித்து செயற்படுவதாக பிரகடனப்படுத்தியுள்ளார். கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகியுள்ளமை தனிப்பட்ட நலனே என அறிக்கைகள் வெளிவருகின்ற போதிலும் கருணா பிரதேசத்திற்குரிய அதிகாரம் கிடைக்கவில்லையென்ற காரணத்தையே முதன்மைப்படுத்தியுள்ளார். அதற்கான காரணிகளாக 30 பேர் கொண்ட நிர்வாக குழுவில் மட்டக்களப்பிற்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லையென்பதுடன் உட்பட பல பிரதேசசார் காரணிகளை முன்வைத்துள்ளார். இக்காரணிகள் மட்டக்களப்பு மக்களது முழுமையான அபிலாசைகள் அல்ல என வாதிட்டாலும் இவை மட்டக்களப்பு மக்களின் எதிர்கால அபிலாசைகளாக உருவாகலாம் என்பதனை மறுப்பதற்கில்லை. இனம் என்ற ரீதியில் ஒற்றுமைப்பட்டாலும், அதிகாரம் என வரும் போது பிரதேசவாதம் தலைதூக்குவதை தடுக்க முடியாது.
எனவே இவ் அடிப்படை யதார்த்தத்தை கருத்திற் கொண்டு, இப்பிரச்சினைக்கு அரசியல்ரீதியானத் தீர்வு காணுதல் அவசியம். இராணுவ ரீதியாக தீர்வு காண முனைவது மென்மேலும் பிரதேசவாதத்தை வளர்க்குமே ஒழிய, அதனை வேருடன் கலைவதற்கு வித்திடாது. கருணா தனிமனிதனாக இப்பிரச்சினையை முன்வைத்தாலும் அதுவே கீழ்மட்ட யதார்த்தம்.
நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், மென்கிஸ்டோ புத்தலேசியின் பிரதேச வாதத்தை ஆயுத மூலமே கட்டுப்படுத்த முனைந்தது. எனினும் அதனால் வெற்றி காண முடியாது போய்விட்டது. ஆனால், ஜனநாயகவாதியான நெல்சன் மண்டேலா ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை பகிர்வதற்கான கட்டமைப்பை முன்வைத்தமை மூலம் தென்னாபிரிக்கா இரு நாடாக பிளவுறாது தொடர்ந்தும் தனிநாடாக இருக்கும் நிலைமையைத் தக்க வைத்துக் கொண்டார். புத்தலேசி இன ரீதியான பிரதேசவாத்தை முன்வைக்கையில் பல வெளிச்சக்திகளும் உள்நாட்டின் ஆளும் சக்திகளும் இதனை ஊக்குவிக்க முனைந்தன. ஆயினும் அவற்றின் முயற்சிகள் நெல்சன் மண்டேலாவின் ஜனநாயக ரீதியான அணுகுமுறையின் மூலம் தோற்கடிக்கப்பட்டன.
ஆகவே, கருணாவின் கோரிக்கையை வெறுமனே தனிமனிதனின் கோரிக்கையென நிராகரிப்பது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. கருணாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஆயுதம் மற்றும் மனித பலம் என்பன ஒரு புறமிருக்க, சிவில் யுத்தம் ஒன்று ஏற்படின் நடுநிலைவகிக்கும் சக்திகளுக்கும் பிரதேசவாதத்திற்கு பலியாகலாம்.
சாதாரண வாழ்வில் கிராமங்களுக்கிடையில் நடைபெறும் கைகலப்பின் போது கிராமத்துடன் ஒன்றிணையாதவரை கிராமத்தவர் ஒதுக்கி வைப்பார். அவ்வாறான ஒரு சூழலே பிரதேசத்திற்கிடையிலான மோதல்களிலும் ஏற்படும். அதாவது பக்கத்து கிராமத்தவன் நேர்மையாக இருந்தாலும் அவன் தமது கிராமத்திற்குள் புகுந்து பிழை செய்த ஒருவனை அடிக்கும்““ போது அதனை கிராமத்தவன் நியாயம் என ஏற்றுக் கொள்ளமாட்டான்.
எனவே, விடுதலைப் புலிகளும் இப்பிரச்சினையை ஜனநாயகரீதியில் அணுகினாலேயே நிரந்தர வெற்றியைக் காண முடியும். இராணுவ ரீதியாக இப்பிரச்சினையை அணுகுவது புத்திசாலித்தனமாக அமையாது. பிரதேசவாதம் இனப்பற்றினைப் போல் பலம் வாய்ந்தது. அதனை பலாத்காரமாக கட்டுப்படுத்த முனைகையில் அது பலமாக வளர்ச்சியுறும். மறுபுறம் புலிகளுக்கு எதிரான வெளியுலகச் சக்திகளும் உள்ளகச் சக்திகளும் இச் சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களின் ஒட்டு மொத்த போராட்டத்தினை பலவீனப்படுத்தலாம்.
பெ. முத்துலிங்கம்
நன்றி -வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>