03-27-2004, 09:43 PM
சிங்கள தேசத்தின் சில்லறைத் தேவைக்கு
கறிவேப்பிலையாகியுள்ள கருணா
வி டுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கிழக்குத் தளபதியாக இருந்த கருணா நீக்கப்பட்ட பின்னர், கிழக்கு தொடர்பான நிலைமைகளைப் புலிகள் மிகக் கவனமாகவே கையாண்டுவருகின்றனர். தமது போராட்ட இலட்சியத்துக்கும் அமைப்புக்கும் தலைமைத்துவத்துக்கும் விரோதமாகச் செயற்படுபவர்கள் விடயத்தில் புலிகள் மிக கடுமையாகவே நடவடிக்கை எடுப்பது வழக்கம்.
கருணாவின் விவகாரத்தில் புலிகள் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காததுடன் அவர் மீதான நடவடிக்கையும் நிதானமாகவே எடுத்து வருகின்றது. இத்தகையதொரு நெருக்கடியான தருணத்தில் கருணாவின் மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுப்பது பொருத்தமானதல்ல எனக்கருதியே புலிகளின் தலைமைப்பீடம் நிதானமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இத்தகையதொரு நிலையில் கருணாவிடம் உள்ள படைபலம் மற்றும் எதிர்காலம் குறித்து சற்று ஆராய்வது சற்றுப் பொருத்தமானதாக அமையும். தன்னிச்சையாகப் பிரிந்து செயற்பட கருணா முடிவு எடுத்த போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் சுமார் ஆறாயிரம் போராளிகள் புலிகள் இயக்கத்தில் இருந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
இவர்களில் சுமார் 600 பேர் கொண்ட ஜெயந்தன் படையணி வடக்கில் நிலைகொண்டிருக்கின்றது. இதைவிட கருணா தனித்துச்செயற்பட முடிவெடுத்த பின்னர் அதிருப்பதியுற்று மட்டக்களப்பு அம்பாறைப் பகுதிகளில் இருந்து உடனடியாகவே சுமார் 500இற்கும் அதிகமான போராளிகள் வன்னிக்குச் சென்று விட்டனர்.
பிரிந்து சென்று தனித்து இயங்கப்போவதாக கருணா முடிவெடுத்த பின்னர் ஊடகங்களில் தலைகாட்ட ஆரம்பித்தபோது அவர் தன்னிடம் மொத்தமாக ஐயாயிரம் போராளிகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தமது மொத்த படைபலம் 5 ஆயிரம் என்றும், இதில் 40 சதவீதமானவர்கள் அதாவது 2 ஆயிரம் பேர் பெண் போராளிகள் என்றும் கருணா ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார்.
இங்கேதான் கருணா தனது இராணுவ ரீதியான தவறுகளை வெளிப்படையாக இழைக்க ஆரம்பித்தார். எந்தவொரு படைத்தளபதியுமே தன்னிடம் உள்ள ஆளணி குறித்தான, தகவல்களை வெளியிட முன்வரமாட்டான். இது இராணுவ விஞ்ஞானத்தில் உள்ள ஒரு பிரகடனப்படுத்தப்படாத தத்துவம்.
எப்போது ஒரு இராணுவ அமைப்பில் படைபலம், வெளிப்படுத்தப்படுகிறதோ அப்போதே எதிர்த்தரப்பின் படைபலம் மட்டுமின்றி மனோபலமும் அதிகரிக்கும், புலிகள் இயக்கத்தின் மொத்த ஆளணி வலு என்ன? ஆயுதபலம் என்ன என்பது குறித்து இதுவரை எவருமே சரியாக மதிப்பிட்டது கிடையாது. 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை இருக்கலாம் என்ற மதிப்பீடு இருக்கிறதே தவிர சரியான படைபல மதிப்பீடு இல்லை. இதுதான் புலிகளை எதிர்த்த இந்திய, இலங்கை இராணுவங்கள் பின்னடைவுகளை எதிர்நோக்க காரணமாக இருந்தது.
எதிரியின் சரியான படைபலத்தை மதிப்பிட முடியு மாக இருந்தால் அவனது படையை இலகுவாகத்தோற்றகடிக்க முடியும் என்பது போரியல் விதிகளில் ஒன்று. 700சாரம் கட்டிய பையன்கள் என்று இந்தியப்படையும், ஐயாயிரம் கெரில்லாக்கள்'' என்று இலங்கை இராணுவமும் தவறாக மதிப்பிட்டதால் இன்று புலிகள் தெற்காசியாவில் குறிப்பிடத்தக்கதொரு இராணுவ அமைப்பாக வளர்ந்திருக்கிறார்கள்.
மேற்படி சந்தர்ப்பங்களில் சரியான தகவல்கள், மதிப்பீடுகளை இந்திய, இலங்கை படைகளால் செய்ய முடிந்திருக்குமாயின், புலிகள் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தை அடைந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.
இதையெல்லாம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தளபதியாக இருந்து அறிந்து கொண்ட கருணா பொறுப்பற்ற விதத்தில் தன்னிடம் உள்ள படைபலத்தை வெளிக்காட்டினார். கருணா எப்போது இத்தகைய இரகசியத் தகவல்களை வெளியிட ஆரம்பித்தாரோ அப்போதே ஒரு தளபதியõக இருக்கத் தகுதியற்றவர் என்பதை நிரூபித்து விட்டார்.
ஆனால், கருணா தனது பலம் அதிகமாக இருக்கிறதென்பதை வெளிப்படுத்த இவ்வாறு இராணுவ இரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கிறது என்பதே உண்மை.
இதுவரை காலமும் கிழக்கில் புலிகளின் பிரதான தளங்களுக்கு எவரும் அனுமதிக்கப்பட்டதில்லை; இரகசியங்கள் மிக இறுக்கமாகப் பேணப்பட்டன. குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறையில் பிரதான தளமான மீனகம் இராணுவத் தளத்தொகுதிக்குள் எவருமே உள் நுழைந்தது கிடையாது.
ஆனால் கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போவதாக அறிவித்த பின்னர், அவர் மீனகம் இராணுவத்தளத்தை ஊடகங்களின் கமெராக்களுக்காகத் திறந்துவிட்டார். தளத்தின் முக்கிய பகுதிகள், அங்குள்ள ஆயுதங்களை அணிவகுக்க வைத்து தன் படைபலத்தை வெளிக்காட்டினார்.
தான் இனிமேல் சண்டையை விரும்பப்போவதில்லை என்றும் மாவட்ட அபிவிருத்தியே முக்கியம் என்றும்கூறும் கருணா இதுவரை நடத்திக் கொண்டிருப்பது ஆயுதங்களின் அணிவகுப்பைத் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
"ஐயாயிரம் போராளிகள்' கருணாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர் என்று செய்திகள் வெளிவந்தால்தான் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதும், மக்களின் ஆதரவைப் பெறமுடியும் என்றும், அரசாங்கத்துடன் பேரம் பேச முடியும் என்றும் கருதியதால் கருணா இராணுவ இரகசியங்களை வெளிவிடவும் தயாராகிவிட்டார். தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக விடுதலைப் புலிகளின் இராணுவ இரகசியங்களை, விற்பனை செய்யக் கூடத்தயாராகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருணாவின் இந்த ஆளணி வளத்தில் கணிசமானவர்கள் இப்போது விலகிக் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த போராளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து கொண்டிருக்கிறது.
அதேவேளை, கருணாவின் கட்டுப்பாட்டில் உள்ள படையணிகளி லும் கணிசமான ஆயுதபலம் இருப்பது முக்கியமானது. கருணா தன்னிடம் ஆட்டிலறிகள் இருப்பதாக கூறினார் என்று அரச ஊடகங்கள் செய்திவெளியிட்ட போதிலும் ஆட்டிலறிகள் அவரிடம் இல்லையென்றே நம்பகமாகத் தெரியவருகிறது.
கருணாவின் வசம் ஆகக்கூடிய வலுமிக்க ஆயுதங்களாக பல்குழல் பீரங்கிகள் மற்றும் 120 மி.மீ மோட்டார்கள் தான் இருப்பதாகக் கருதப்படுகிறது. சுமார் 8 கி.மீ. தூரவீச்செல்லை கொண்ட பத்து 120 மி.மீ. மோட்டார்கள், ஏனைய மோட்டார்கள் சுமார் 50, எல்.எம்.ஜி.துப்பாக்கிகள் 500, தன்னியக்கத் துப்பாக்கிகள் சுமார் 3,000, 50 கலிபர் மற்றும் வேறுவகை துப்பாக்கிகள் சுமார் 50, மேலும் சில ஆயுதங்களும் கருணா வசம் இருப்பதாக கருதப்படுகிறது. இந்தப் படைபலம் மற்றும் ஆயுதபலத்தை வைத்துக் கொண்டு கருணா என்ன செய்யப்போகிறார் என்பதே அடுத்த கேள்வி. கருணõவின் தன்னிச்சையான முடிவுகளை தொடர்ச்சியாக போராளிகளும், கிழக்குப் பகுதி மக்களும் ஆதரிப்பார்கள் என்று எவராலும் நம்ப முடியாது.
இராணுவ பல ரீதியாக கருணா எதைச் செய்யக் கூடியவராக இருந்தாலும் அவரால் தொடர்ந்து நின்று நிலைத்துச் செயற்பட முடியாது என்பதே யதார்த்தம்.
ஜனாதிபதி சந்திரிகாவுடன் கருணா தொடர்பை ஏற்படுத்துவதற்கு முயற்சித்ததாகவும் அவர் அதற்கு மறுத்துவிட்டதாகவும் சந்திரிகாவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் இருவருக்கும் இடையில் திரைமறைவில் தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இரகசியமான இடமொன்றிலிருந்து கருணா ஹெலி மூலம் கொழும்புக்குச் சென்று ஜனாதிபதி சந்திரிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த ஒட்டும் உறவும் எத்தனை நாட்கள் நீடிக்கும்?
சந்திரிகா ஜே.வி.பி. கூட்டணியைப் பொறுத்தவரையில் அது சமாதான முயற்சிகளுக்கு அதிக ஆர்வம் காட்டப்போவதில்லை. இந்தக் கூட்டணி புலிகளை அழிப்பதில்தான் அதிக நாட்டம் கொள்ளும் என்று கருதப்படுகிறது.
இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புலிகளுடன் மீண்டும் சண்டையைத் தொடங்குவதற்கான வாய்ப்புக்களும் இருக்கலாம். சமாதானப் பேச்சுக்களும் நடக்கலாம். சண்டை ஒன்றுக்கான வாய்ப்பு உருவானால் அரசாங்கம் தனது மூலோபாயத் திட்டத்தை கிழக்கை நோக்கி நகர்த்தினாலும் ஆச்சரியமில்லை.
இந்தத் திட்டத்தில் கருணாவை நண்பனாக அரவணைப்பதிலும் விட கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலவீனமாகவுள்ள புலிகளை அழித்து கிழக்குப் பகுதி முழுவதையும் கைப்பற்றவே படைத்தலைமை எத்தனிக்கலாம்.
எப்போதுமே கிழக்குப் பகுதியைத் தான் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும் என அரசாங்கமும் படைகளும் விரும்புகின்றன. வடபகுதிக்கு உரிமைகளை வழங்க எப்போதுமே அரசு மறுக்கவில்லை; கிழக்கில் தான் பிரச்சினையே.
எனவே தனது பழைய மூலோபாயத்தின் அடிப்படையில் கிழக்கின் மீது படை நடவடிக்கை மேற்கொண்டு அழிவுகளை ஏற்படுத்தி அதைத் தக்கவைத்துக் கொண்டால் பின்னர் படிப்படியாக வடக்கின் மீது கைவைக்கலாம் எனப் படைத்தரப்பு கருதலாம். ஏனெனில் கிழக்கை கைப்பற்றி விட்டால் படைத்தரப்பால் அதைத்தக்க வைப்பது சுலபம். ஆனால், வடக்கை கைப்பற்றுவதோ தக்கவைப்பதோ சுலபமானதல்ல' என்பதை ஒயாத அலைகள் நடவடிக்கைகள் நிரூபித்திருக்கின்றன. இந்தச் சூழலில் கருணாவினால் ஆயுத, உணவு விநியோகங்களை தனது கட்டுப்பாட்டிலுள்ள போராளிகளுக்கு வழங்குவது கடினமானதென்பதை உணர்ந்து படைத்தலைமை வியூகங்களை வகுக்கலாம்.
அத்துடன், கிழக்கில் மட்டக்களப்பு நகரத்தை மீட்பதற்குரிய முன்னாயத்த நிலையை கருணா இரண்டு வருடங்களுக்கு முன்னரே செய்திருந்தார். இதைப்படைத்தரப்பும் அறிந்ததே. கருணாவை படைத்தரப்பு நண்பனாக நிரந்தரமாக நம்பும் என எதிர்பார்க்க முடியாது.
இருபது வருடகாலம் ஒரே கொள்கையுடன் புலிகளுடன் இருந்துவிட்டு தனித்துச் செயற்படத் தீர்மானித்த கருணா போன்றவர்களை எந்த நாடுமே நண்பனாக வைத்திருக்க விரும்பாது. தமது அவசர வேலைகளுக்கு அவரை பயன்படுத்திவிட்டு கறிவேப்பிலை போல தூக்கி எறிந்துவிடவே எத்தனிக்கும். எனவே கருணா எடுத்திருக்கும் இந்த முடிவினால் நிரந்தரமாக எந்த இலாபத்தையும் அடைந்துவிட முடியாது. மாறாக அவர் எந்த மக்களுக்காக இந்த முடிவினை எடுத்ததாக கூறி தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறாரோ அதே கிழக்குப் பகுதி மக்களை சிங்களப் பேரினவாதத்தின் வாய்க்குள் கொண்டுபோய் அழிவுக்குள் தள்ளுவதாகவே முடியும்.
முகிலன்
நன்றி -வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>