03-27-2004, 09:35 PM
கருணாவுடன் தமக்கு தொடர்பு இல்லையென ""றோ'' மறுப்பு
(ப.தெய்வீகன்)
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மட்டு. அம்பாறை முன்னாள் தளபதி கருணாவுடன் தமக்கு எதுவித தொடர்பும் இல்லை என "றோ' அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருணா அம்மான் வெளிநாட்டு சக்திகளுக்கு விலைபோய்விட்டார் என்று மூத்த உறுப்பினர் கரிகாலன் குற்றம்சாட்டியிருந்தார்.
அதேவேளை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியபேட்டி ஒன்றில் விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள விரும்பாத வெளிச்சக்திகள் கருணாவின் பின்னணியில் செயற்பட்டிருக்கின்றன என்று குற்
றம்சாட்டியிருந்தõர்.
அவ்வாறானால் கருணா விவகாரத்தின் பின்னணியில் "றோ' செயற்பட்டிருக்கிறதா என்று வெளிநாட்டு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியபோதே "றோ' அதிகாரி இவ்வாறு மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
புலிகளின் தலைமைத்துவத்தைப் பலவீனப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்ட கருணாவின் பின்னணியில் கொழும்பில் சில தரப்புகள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கக்கூடும். புலிகளின் தலைமைத்துவத்துடன் கருணா பிரச்சினையில் ஒரு தரப்பை சார்ந்து நிற்பதை இலங்கை இராணுவத்தின் உயர்மட்டத்தவர்கள் தவிர்த்துவருகின்றனர். இராணுவத்தின் நடுத்தர உத்தியோகத்தர்களே கருணாவுடன் தொடர்புகளை வைத்திருக்கிறார்கள்.
கருணாவின் கோபமும் இலட்சியமும் விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பமாக இலங்கை இராணுவத்திற்கோ அல்லது இராணுவத்தின் புலனாய்வு பிரிவினருக்கோ வழங்கப்பட்டுள்ளது.
புலிகள் அமைப்புக்கும் சிறியசேதத்தை உண்டாக்கினாலும் பரவாயில்லை என எந்த சந்தர்ப்பத்தையும் அவர்கள் பற்றிப் பிடிப்பார்கள் என்றார்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் முறிவடைந்த காலம் முதல் புலிகளுக்கு எதிரான சக்திகளைப் பலப்படுத்தியதன் மூலம் தற்போது கருணா விவகாரத்திலும் சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்தே குறிப்பிட்ட "றோ' அதிகாரி இந்த கருத்தைத் தெரிவித்திருக்கிறார்
நன்றி -வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>