03-27-2004, 01:16 PM
~ஆனந்தசங்கரி நீ அரசியல் வாதியா, அரசியல் வியாதியா?|
<b>தந்தை செல்வாவுடன் சங்கரி கற்பனைச் சந்திப்பு
வாசகன் இரட்ணதுரை - கனடா</b>
வீடியோவில் பாட்டுக் கசட்டைப் போட்டுப் பார்த்தபடி இருக்கிறார் ஆனந்தசங்கரி.. ரிவியில்; எம்.ஐpஆரின் படப்பாடல்கள். அதில் எம்.ஐp.ஆர் ~புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே| என்று பாடுகின்றார்.
சங்கரி: இதென்ன உதய சூரியன், புதிய சூரியனாய் மாறிப்போச்சு. எனக்கேதும் பிரமையோ?
செல்வா: நீ எத்தனை முறை உந்த விடியோக் கசட்டைப் போட்டுப் பார்த்தாலும் அதிலை ~புதிய சூரியனின் பார்வையிலே| என்றுதான் இருக்கும்.
சங்கரி: யாரது? எங்கையோ கேட்டகுரல், எங்கையோ பார்த்த ஞாபகமாய் இருக்கு!
செல்வா: தம்பி சங்கரி! அது நான்தான் செல்வநாயகம்.. தந்தை செல்வா!
சங்கரி: ஐயா! செல்வநாயகமய்யா நீங்களே..! மறந்துபோனன்.
செல்வா: நீ, உன்னைக் கூட்டணியின் தலைவராக்கினவையே மறந்துபோனாய். கட்சியை உருவாக்கிய என்னை மறக்கிறது பெரிய காரியமே? உதென்ன தேர்தல் நேரத்திலை படம் போட்டுப் பாத்துக்கொண்டிருக்கிறாய்?
சங்கரி: இது எம்.ஐp.ஆரின் பாட்டுக் கசட். முந்தி இந்தப் பாட்டைத்தானே நாங்கள் உதய சூரியனுக்குப் போட்டு வாக்குக் கேட்டனாங்கள். கனடாவிலை இருக்கிற கேம்றிஞ் கல்விமான் ப10டகக்காரர் இதை அனுப்பினவர், புலிகளுக்கு எதிராய் தேர்தலுக்குப் பயன்படுத்தச் சொல்லி. இப்ப இந்தப் பாட்டு மாறிப்போய் கிடக்கு. அதுதான் எப்படி மாறினது என்று தெரியல்லை.
செல்வா: நீ எத்தனை முறை உந்த விடியோக் கசற்றைப் போட்டுப் பார்த்தாலும் அதிலை ~புதிய சூரியனின் பார்வையிலே| என்றுதான் இருக்கும்.. உதய சூரியனின் பார்வையிலே என்று வராது.
சங்கரி: ஏன் ஐயா?
செல்வா: எட சங்கரி! எம்.ஐp,ஆர் எப்ப தி.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவை ஆரம்பித்தாரோ அன்றே தன்னுடைய பழைய படங்களில் இருந்த ~உதய சூரியன்| என்ற சொல்லை வெட்டி அவற்றில் ~புதிய சூரியன்| என்று மாத்திப்போட்டார். பழைய ஓடியோக் கசற்றில் அல்லது கிராமப்போன் தட்டில்தான் மாறாமல் இருக்கும். இதுகூட தெரியாதே!
சங்கரி: (மெதுவாக) எல்லாரும் எனக்கெதிராச் சதி செய்துபோட்டாங்கள். ஏன் இதற்கு கருணாநிதி நீதிமன்றில் இடைக்காலத் தடையுத்தரவு வாங்கேல்லையே?
செல்வா: (மெதுவாக) உன்னாலை நீதிமன்றில் இடைக்காலத் தடையைத்தான் வாங்க முடியும். இடைக்கால சபையை வாங்கமுடியுமே?
சங்கரி: புரியேல்;லை ஐயா?
செல்வா: தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளால் மட்டும்தான் இடைக்கால சபையை வாங்கமுடியும். மற்றவையாலை இடைக்காலத் தடையைத்தான் வாங்க முடியும்.
சங்கரி: ஏன் நாங்களும் மக்களின் பிரதிநிதிகள் இல்லையே? ஏன் ஐயா! என்னையும், டக்ளசையும் நாலு பேர் கூப்பிட்டுக் கதைக்கினம்தானே?
செல்வா: முட்டாள். அப்படிக் கூப்பிடுகிறவங்கள் யார்?
சங்கரி: இந்தியா, சந்திரிகா, ரணில், த ஐலண்ட் பத்திரிகை, ம்..ம்.. பிபிசி
செல்வா: இவையெல்லாம் தமிழர்களுக்கு எதிரான ஆட்கள். தமிழருக்குப் பிரதிநிதியாக உங்களைக் கூப்பிடேலை. தமிழருக்குப் பிரச்சினை குடுக்கக் கூம்பிடுகினம். உங்களை தமி;ழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகினமே தவிர உங்களைப் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டல்ல.
சங்கரி: அப்ப என்ன, என்னைப் புலிக்கு வாலாயிருக்கச் சொல்லுறியலே? என்ரை ஐம்பது வருட அரசியல் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?
செல்வா: முட்டாள், ப10னைக்கு மீசையாக இருப்பதைவிட, புலிக்கு வாலாயிருப்பது மேல்.
சங்கரி: போட்டியென்று வந்துவிட்டால் புலியென்ன ப10னையென்ன?
செல்வா: சங்கரி! நீ இன்று போட்டி போடுறது புலியோடையோ, ப10னையோடோ, தமிழ்க் கூட்டமைப்போடையோ அல்ல.
சங்கரி: அப்ப?
செல்வா: உனக்கும் டக்ளசுக்கும் தான் இம்முறை நேரடிப் போட்டி என்று சொல்லுகினம்.
சங்கரி: ஓ! மகேஸ்வரனும் அங்கையில்லை. ஐக்கிய தேசிய கட்சியும், Nஐ.வி.பியும் இல்லை. புலிகளுக்கு எதிரான வாக்குகளை வாங்குறதிலை எங்கள் இருவருக்கும்தான் யாழ்ப்பாணத்தில் நேரடிப் போட்டி.
செல்வா: நான் நேரடிப் போட்டியென்று சொன்னது - யாழ்ப்பாணத்திலை தேர்தல் வாக்குகளைப் பெறுவதையல்ல.
சங்கரி: அப்ப ஐயா?
செல்வா: இந்தியாவையும், சந்திரிகாவையும் பந்தம் பிடிக்கிறதிலை உனக்கும் டக்களசுக்கும் தான் போட்டியென்று கதைக்கினம்.
சங்கரி: அப்படியில்லை ஐயா! இந்தியா என்னைத்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று ஏற்றுக்கொண்டிருக்கையா!
செல்வா: எதிலை துரோகம் செய்யிறதிலையோ, காட்டிக் கொடுகிறதிலையோ?
சங்கரி: ஐயா?
செல்வா: எட சங்கரி, என்னத்துக்கெல்லாம் ஏக பிரதிநிதி என்று சொல்லுறதென்டு ஒரு விவஸ்தையே இல்லையே? பிரதிநிதித்துவம் என்றால் என்னென்று நினைக்கிறாய்?
சங்கரி: நாலுபேர் நாலு வாக்குப் போட்டால் அவரும் ஒரு பிரதிநிதி. அவரும் ஒரு அரசியல்வாதி
செல்வா: நடக்கிறது உடம்புக்கு நல்லது. அதற்காக நித்திரையில் நடக்கிறது நல்லதே?
சங்கரி: அதெப்படி? அது வியாதியல்லோ!
செல்வா: அப்படித்தான் நீயும் - அரசியல்வியாதி. அரசியல்வாதியல்ல. எட கடவுளே நாலு சின்ன வீடிருந்தால், நாலுக்கு நாலு வாக்குகள் விழும்தானே! அதுக்காக நாலு சின்ன வீடுகள் வைத்திருக்கிறவர் எல்லாம் நாங்களும் அரசியல்வாதிகள், நாங்களும் தமிழ் மக்களின் பிரநிதிகள் என்று சொல்லுறதே?
சங்கரி: ஐயா நீங்கள் என்ன சொல்லுறியள்!
செல்வா: மக்களின் பிரதிநிதித்துவம் என்றது வாக்குப் போட்டு வாரேல்லை? அப்படியென்றால் ஏன் உங்களைக் கூப்பிட்டு சந்திரிகாவோ, ரணிலோ தமிழற்றை பிரச்சினை குறித்துக் கதைக்கேலை.
சங்கரி: அதுதானே?
செல்வா: மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லுறது - அந்த மக்களுக்காகச் செய்யிற தியாகத்தாலை வாறது. அரசாங்கத்துடன் போராடுகின்ற பலத்தால் வாறது. யாருக்கும் அடிபணியாத நெஞ்சுரத்தாலை வாறது. பேரம் பேசுற சக்தியாலை வாறது. மக்களுக்காக எதிரியோடை போராடிச் சாகுறதிற்கு அந்த மக்களின் பிரதிநிதியாக எவன் போறானோ அவன்தான் அந்த மக்களின் பிரதிநிதி.
சங்கரி: அப்ப நான் மக்களின் பிரதிநிதி அல்லவே!
செல்வா: நீ தமிழர்களுக்குப் பிரதிநிதி அல்ல பிடிச்ச சனி. இன்று தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினைகள் சொல்லு பார்ப்பம்?
சங்கரி: ம்..ம்.. பாதுகாப்பு, மற்றது.
செல்வா: பொறு பொறு. நீ இன்று யாரிட்டை இருந்து யாரை பாதுகாக்க வேணும்?
சங்கரி: இலங்கை அரச இராணுவத்திட்டை இருந்து தமிழரைப் பாதுகாக்க வேணும்.
செல்வா: நீயும் தமிழ்க் குழுக்களும் இன்று யாருடைய பாதுகாப்புலை யாழ்ப்பாணம் வந்திருக்கிறியள்?
சங்கரி: ஸ்ரீலங்கா இராணுவத்தினுடைய பாதுகாப்பிலை. வீட்டுக்கு வெளியிலை பாருங்கோ அவைதான் காவல் நிற்கினம்.
செல்வா: பார்த்தியே சங்கரி? ஸ்ரீலங்கா இராணுவத்தின் பாதுகாப்பில் உள்ள நீங்கள், எப்படி ஸ்ரீலங்கா இராணுவத்திடமிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பியள்? முதலிலை உங்களை நீங்கள் பாதுகாக்கத் தெரியவேணும். முதலிலை உன்னைப் பாதுகாக்கவே ஒரு பிரதிநிதி தேவைப்படுகுது. அதுக்குள்ள நீ தமிழரின் பிரதிநிதியென்று நினைக்கிறாய்!
சங்கரி: விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் பாதுகாப்பிலைதானே வெளிநாடுகளுக்கு அரசின் உலங்குவானு}ர்தியில் n;சல்லுகினம்.
செல்வா: முட்டாள் கள்ளனைப் பிடித்தாலும், சுற்றிப் பொலிஸ் காவலுடன் தான் கொண்டுபோவாங்கள். கவர்னர் போனாலும் சுற்றிப், பொலிஸ் காவலுடன்தான் போவார். இரண்டுபேரும் சமனே! இன்டைக்கு உனக்கு ஒண்டு நடந்தால் யாருக்குக் கெட்ட பெயர்.
சங்கரி: விடுதலைப் புலிகளுக்கு.
செல்வா: அப்ப உன்னை யார் இன்று பாதுகாக்க வேண்டும்?
சங்கரி: புலிகள். ஓ! சர்வதேச அரசியல் வாழ்க!
செல்வா: இப்படித்தான் ஸ்ரீலங்கா அரசுக்கும் - தங்களுக்கு எதிராக வெளிநாடு போய்க் கதைக்கிற புலிகளைப் பத்திரமாகக் கொண்டுபோய் பத்திரமாய்க் கொண்டுவந்து சேர்க்கவேண்டிய கஷ்டகாலம்.
சங்கரி: அதுக்காக நான் யாழ்ப்பாணம் போகாமல் நிற்கேலுமே?
செல்வா: நீ கடைசியாய் எப்ப யாழ். மாவட்டச் சனத்தைப் போய் பார்த்தாய் சங்கரி?
சங்கரி: போன எலக்சனுக்குப் போனனான். பிறகு யாழ் பொது நு}ல் நிலையம் திறக்கப் போறதென்டவுடனை போகப்பார்த்தன். ஆனால் திறக்கேல்லை. நான் போகேல்லை.
செல்வா: பார்த்தியே! அந்த மக்கள் உயர் பாதுகாப்பு வலயம், மீன்பிடித்தடை, நிவாரணவெட்டு, அகதிப்பிரச்சினை, பொங்குதமிழ், பசி பட்டினி என்றெல்லாம் போராடினபோது நீ அங்கை போகேல்லை. ஆனால், இப்ப யாழ் மாவட்டத்திலை தேர்தலிலை கூட்டமைப்பின் சார்பில் நிற்கிறவங்கள் யார்?
சங்கரி: இரண்டு பேர்தான் கூட்ணிக்காரர் மிச்சமெல்லாம் யாரோ?
செல்வா: இந்தப் போராட்ட காலத்தில் மக்களோடை கூட நின்றவை. நின்ற அமைப்புகள். அதிலும் அந்தப் பல்கலைக்கழகப் பெடியன் போர்நிறுத்த ;காலத்தில் - நீ உலாத்தித்திரிய - பேராட்டம் நடத்தி, பொலிசாராலை பிடிபட்டு அடிபட்ட பையன்;. இப்ப சொல்லு யார் அரசியல்வாதி, யார் அரசியல் வியாதி?
சங்கரி: ஐயா இது ரவிராஐ_ம் சம்பந்தரும் செய்த சதி, என்னை அவங்கள்தான் தனியா நிற்க வைச்சுட்டாங்கள்.
செல்வா: நீ இந்தியத் து}துவரையும், சந்திரிகாவையும் போய் சந்திக்கேக்கை அவங்களைக் கூட்டிக்கொண்டே போனனீ. தனியத்தானே போனனீ. அப்ப தனியாய்த்தான் நிற்கவேணும்.
சங்கரி: ஐயா நான் கூட்டணியின் தலைவராகத் தானே போனேன்?
செல்வா: உன்னை கூட்டணியின் தலைவராகத் தெரிவு செய்தது யார்? மக்களே?
சங்கரி: இல்லை. கூட்டணியின் செயற்குழு.
செல்வா: அந்தச் செயற்குழு உன் மீது நம்பிக்கையில்லையென்றால் நீ விலகவேண்டியதுதானே?
சங்கரி: ஐயா நீங்கள் தானே ஆயுட்கால தலைவர் என்று பதவியை எழுதிப்போட்டுப் போனீங்கள்.
செல்வா: வயதான காலத்திலை எனக்கிருந்த ஆயுள் கொஞ்சம். அதாலை எனக்குப் பிறகு, தான் பதவியை அனுபவிக்க அமிர்தலிங்கம் செய்த வேலையது. நான் விட்ட மிகப்பெரிய தவறு அது.
சங்கரி: அப்ப பார்த்தியலே? (இறுமாப்புடன்) எனது ஆயுள் இருக்கும்வரை நான் தான் கூட்டணியின் தலைவன்.
செல்வா: உண்மைதான் ஆயுள் இருக்கும்வரைதான். உனக்கு அமிர் போயும்.. சீ இவ்வளவு மயிர் போயும் மூளை வேலைசெய்யேல்லை.
சங்கரி: ஐயா நீங்கள் அப்ப சொன்னியள்தானே ~தமிழரை கடவுளாலையும் காப்பாற்ற முடியாது| என்று - அது இப்ப உண்மை ஐயா? என்னையே என்னால் காப்பாற்ற முடியவில்லை.
செல்வா: தமிழனை கடவுள் காப்பாற்ற முடியாது என்று நான் சொன்னது சிங்களவரிடமிருந்தல்ல. அதை மானமுள்ள ரோசமுள்ள தமிழன் பார்த்துக்கொள்வான். நான் கடவுளாலையும் தமிழனைக் காப்பாற்ற முடியாது என்று சொன்னது - உன்னை மாதிரி எட்டப்பர்களிடமிருந்து. நீ செய்யுற வேலை யாருக்கு லாபம்? தமிழருக்கோ, சிங்களவருக்கோ?
சங்கரி: ஐயா அது என்னுடைய மூளை. அரசியல் சாணக்கியம்.
செல்வா: எது இடைக்காலத் தடை உத்தரவு வாங்கியதோ?
சங்கரி: ஓமய்யா! எனக்கில்லாதது எவருக்கும் இல்லை. இதைவிட்டால் எனக்கு வாழ்க்கையே இல்லை!
செல்வா: எட உன்னிட்டை இருக்கிற பெரிய ஆயுதம் - சட்டம் - இடைக்காலத் தடை உத்தரவு. அதை நீ இந்தமுறை தேர்தலிலை கூட்டமைப்புக்கு எதிராய் பயன்படுத்திறாய். சரி. போன தேர்தலிலை டக்ளசிட்டை இருந்த பெரிய ஆயுதம் துவக்கும், பொல்லும். அதை அவன் பொடி, நெடுந்தீவிலை உங்களுக்கு எதிராய்த் தேர்தலிலை பயன்படுத்தியது மட்டும் - அப்ப என்ன தவறு. அதுவும் தேர்தல் சாணக்கியம்தானே?
சங்கரி: ஐயா! உதய சூரியன் கிடைக்காமல் செய்தது கெட்டித்தனமில்லையோ?
செல்வா: தமிழருக்கு உதய சூரியன் இல்லாமல் பண்ணலாம். அது அரசியல். மன்னிக்கலாம், ஆனால் நீங்கள் தமிழருக்கு விடியலே இல்லாமல் பண்ணப்பாக்கிறியள் அதுதான் தவறு.
சங்கரி: ஐயா! அப்ப நான் மீண்டும் தலையெடுக்கேலாதே?
செல்வா: எட சங்கரி! நீ தலையெடுக்க வேணும் என்று நினைக்கிறவங்கள் இப்ப உன்னுடைய தலையெடுக்க வேணும் என்றும் நினைக்கலாம்.
சங்கரி: என்னய்யா சொல்லுறியள். விளங்கேலை.
செல்வா: நீ தலையெடுத்து, அதாலை புலிகளுக்கு வாற நட்டத்தைவிட, உன் தலையெடுத்து, அதாலை புலிகளுக்குக் கெட்டபெயர் உண்டாக்கிறது அவங்களுக்கு லாபம். எதற்கும் கவனமாய் இரு.
சங்கரி: ஐயா அப்ப எனக்குப் பிரச்சினையோ?
செல்வா: தேர்தலையும், பிரச்சினையையும் வைத்தே சீவிக்கிறவங்கள் இருக்கிறாங்கள். பிரச்சினையிக்கை பிரச்சினையாய் சில பிரச்சினைகளை பிரச்சினையி;ல்லாமல் முடித்துப் போடுவாங்கள். (ஆலாலசுந்தரத்துடன் சேர்ந்து எனக்கும் அடுக்குமொழி வருகுது.)
சங்கரி: ஐயா என்ன சொல்லுறியள்? எனக்குப் பயமாயிருக்கு.
செல்வா: எதிரியின் எதிரி நண்பன் என்று நினைக்கிறது அந்தக்கால உள்ளுர் அரசியல், இப்ப எதிரியின் எதிரியைக் கொலைசெய்து எதிரிக்கு சர்வதேச மட்டத்திலை கெட்ட பெயரைக் கொண்டுவாறது இந்தக்கால சர்வதேச அரசியல். இப்ப தமிழரற்றை பிரச்சினை சர்வதேசப் பிரச்சினையாய் போச்சு. புரிஞ்சால் சரி.
சங்கரி: ஐயா நான் இப்ப என்ன செய்யிறது? நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேணும்.
செல்வா: நீ அரசியல்வாதியாய் இருந்தால் காப்பாற்றலாம். ஆனால் நீ அரசியல் வியாதி. புலிகள் மூலம் தமிழ் மக்களைக் காக்கிற ஆண்டவன்தான் உன்னையும் காப்பாற்றவேண்டும்.
நன்றி: ஈழமுரசு

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>