03-27-2004, 01:11 PM
கருணா குழுவின் எச்சரிக்கையை அடுத்து ஜோசப்தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறுத்தம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவின் எச்சரிக்கையை அடுத்து, தமிழ்த் தேசியக் கூ ட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் ஜோசப் பரராஜசிங்கம் நேற்று வெள்ளிக்கிழமையுடன் தனது, தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே தமிழினத்தின் தலைவர் எனவும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனவும் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்திற்காகவே தாங்கள் குரல் கொடுப்பதாகவும் குறுகிய பிரதேச வாதத்திற்கு எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜோசப் பரராஜசிங்கம் வலியுறுத்தி வந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா நீக்கப்பட்ட பின்னரும் அவர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததால், கருணா குழுவினர் ஜோசப் பரராஜசிங்கத்தை இது தொடர்பாக பல தடவைகள் எச்சரித்திருந்தனர்.
ஆனாலும், தனது மேற்படி, கோரிக்கைகளிலிருந்து தான் விலகப் போவதில்லை எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டி யிடும் பெருமளவு வேட்பாளர்கள் தனது இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்கி வருவதையும் கருணா குழுவிடம் சுட்டிக் காட்டி யிருந்தார்.
இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஜோசப் பரராஜசிங்கத்துடன் தொடர்பு கொண்ட கருணா குழுவைச் சேர்ந்த துரை உடனடியாக தேர்தலிலிருந்து ஒதுங்க வேண்டுமெனவும், தேர்தல், பிரசாரத்தில் ஈடுபடக் கூ டாதெனவும் தங்கள் எச்சரிக்கையையும் மீறிச் செயற்பட முனைந்தால் மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்திருந்தார்.
ஆனாலும், தேர்தலிலிருந்து தான் ஒதுங்கப் போவதில்லை எனவும், தனது கோரிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தெரிவித்துள்ள ஜோசப் பரராஜசிங்கம் தற்போதைய நிலைமையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்காக தனது தேர்தல் பிரசாரங்களை உடனடி யாக நிறுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, ஜோசப் பரராஜசிங்கத்தை தேர்தலிலிருந்து ஒதுங்குமாறு கருணா குழுவினர், மிரட்டியதைக் கேள்வியுற்று நேற்று மாலை ஜோசப் பரராஜசிங்கத்தின் வீட்டில் திரண்ட நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் அவருக்கு தங்கள் முழு ஆதரவையும் தெரிவித்ததுடன், இந்தத் தேர்தலில் அவரை அதிகப் படியான வாக்குகளால் வெற்றி பெறச் செய்து மட்டக்களப்பில் பிரதேச வாதத்திற்கு இடமில்லையென்பதையும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும், பிரபாகரனே தங்கள் தலைவன் என்பதையும் முழு உலகத்திற்கும் நிரூபிக்கப் போவதாகவும் கூ றியுள்ளனர்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>