03-27-2004, 01:03 PM
kuruvikal Wrote:செய்தியில் பெயர்விபரங்கள் உள்ளடங்களாக அனைத்தும் இருந்தும் செய்தியை நம்பத் தயக்குபவர்கள்...எப்படி அநாமதேயத் தளம்/தளங்களில் இருந்து பெறப்படும் தமிழ்தேசியத்துக்கு எதிரான செய்திகளை நம்பி எடுத்து வந்து இங்கே போடுகிறார்கள்....???! :roll:
அந்த செய்தி வெளிவந்து இவ்வளவு நேரமாகியும் அது புலிகள் சார்பு ஊடகங்களிலோ, கருணா சார்பு ஊடகங்களிலோ, அரசாங்க ஊடகங்களிலோ இல்லை சர்வதேச ஊடகங்களிலோ வெளிவரவில்லை. அதனாலேயே கேட்டேன். மற்றும் நான் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளையே இங்கே போட்டேன். அவற்றை 100% உறுதிப்படுத்த என்னால் முடியாது, நாம் இரண்டு பக்க செய்திகளையும் படித்து புரிந்து கொள்ளவேண்டியது தான். இப்போது செய்தி நிறுவனங்கள் அவர்களுக்கு சார்பான செய்திகளையே தருவதால் இரண்டு பக்க செய்திகளையும் படிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
kuruvikal Wrote:அதுபோக ஒரு பானை சோற்று ஒரு சோறு பதம்....! இங்கு கண்டனமோ அறிக்கையோ தண்டனையோ அந்தச் சிறுமியின் எதிர்காலத்தைச் செழிப்பாக்குமா...இவர்களை ஒழித்துக்கட்டுவதே மீண்டும் இவ்வாறான குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்க உதவும்.... அதைச் செய்வது யார்...மக்கள் தாம் செய்ய வேண்டும்...!
:twisted: :evil::!:
கண்டனமோ அறிக்கையோ தண்டனையோ அந்தச் சிறுமியின் எதிர்காலத்தைச் செழிப்பாக்காது என்பது உண்மைதான். ஆனால் நம்மால் முடிந்தது அது தான். கருணா விடயத்தில் கூட கண்டனம், அறிக்கை எதற்காக வெளியிடப்படுகின்றது? மக்களுக்கு நிலைமையை புரியவைப்பதற்காக, அதேபோல்தான் அந்த சிறுமியின் விடயத்தில் நமது கருத்துக்களைதான் வெளியிட முடியும் படிக்கும் மக்கள் சரியானதை அலசி ஆராய்ந்து நீங்கள் சொன்ன மாதிரி தேவையற்றவர்களை புறக்கணிக்க வேண்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


:!: