03-27-2004, 10:55 AM
<b>ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தொடரும்: மதிமுக தேர்தல் அறிக்கை</b>
<span style='font-size:21pt;line-height:100%'>ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு மதிமுகவின் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும். இதற்கு எந்தத் தடை வந்தாலும் அதைக் கண்டு பயப்பட மாட்டோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</span>
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அக் கட்சியின் அறிக்கையை கோவையில் வைகோ வெளியிட அதை திருப்பூர் துரைசாமி பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய பகுதிகள்:
அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல, தெற்காசியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான தனது நிலையை இந்தியா மாற்றிக் கொள்ளவேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியாவும் முக்கியப் பங்களிக்க வேண்டும்.
இலங்கைக்கு சம்பந்தமே இல்லாத பல நாடுகள் இலங்கையில் காலூன்ற நினைக்கின்றன. எனவே தனது சொந்த பாதுகாப்பைக் கருத்தில் கொண்டாவது, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும்.
சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற இலங்கை முட்டுக் கட்டை போட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்ற மதிமுக பாடுபடும்.
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களால் மீன் பிடிக்க முடியாத நிலை உள்ளது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர். எனவே கச்சத்தீவை மீண்டும் இந்தியாவே கைவசப்படுத்த மத்திய அரசை வற்புறுத்துவோம்.
மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை நீக்க வேண்டும், தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும், செம்மொழியாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
பாஜகஅதிமுக சதி: வைகோ
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், திராவிட இயக்கங்களை அழிக்க பாரதீய ஜனதாக் கட்சி திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதற்கு அதிமுக உதவுகிறது.
தமிழகத்தில் பலமாக காலூன்றும் வகையில் பா.ஜ.கவினர் செயல்படுகிறார்கள். பலம் பெற்ற பின்னர் திராவிட இயக்கங்கள் அத்தனையையும் வேரோடு அழிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அதிமுகவும் உடந்தை. இவர்களை ஒருங்கிணைக்கும் சக்தி எது என்பது மக்களுக்கே தெரியும். (காஞ்சி மடத்தை வைகோ மறைமுகமாகக் குறிப்பிட்டார்)
அதிமுக அரசு மதமாற்றத்தைத் தடை செய்துள்ளது. அதேபோல ஆடு, கோழி பலியிட தடை விதித்தது. பின்னர் தேர்தலுக்காக அதை நீக்கியுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அதை அமல்படுத்துவார்கள்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் நாட்டையே அது பிளவுபடுத்தி விடும். தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியாவில் சிறுபான்மையினராக வாழும் இந்தியர்களுக்கு அது பெரும் ஆபத்தாக முடியும்.
1947ம் ஆண்டுக்கு முன்பு இருந்த முக்கிய கட்டடங்களை தேசிய நினைவுச் சின்னங்களாக அறிவிப்பது ஒன்றுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்றார் வைகோ.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>