03-27-2004, 10:41 AM
[b]சிறைக்கு அருகே ரகசிய ஆசிரமம் நடத்தும் பிரேமானந்தா!!
திருச்சி செக்ஸ் சாமியார் பிரேமானந்தா, சிறையில் இருந்தபடியே மர்ம ஆசிரமத்தை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஆசிரமம் என்ற பெயரில் இளம் பெண்கள், சிறுமிகளுடன் சல்லாபம் நடத்தி வந்த பிரேமானந்தா, சில பெண்களைக் கொலை செய்தும், கற்பழித்ததும் வெளியே தெரிய வர பிரபலமானார்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரது ஆஸ்ரமத்தில் பல புளூ பிலிம்களும் எடுக்கப்பட்ட விவரமும், அதில் சில விவிஐபிக்களின் நிர்வாண காட்சிகளும் அடக்கும் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிரேம்சுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் பிரேமானந்தா குறித்து பரபரப்பான புகார் எழுந்துள்ளது. கடலூர் சிறைக்கு அருகிலேயே மர்ம ஆசிரமத்தை பிரேமானந்தா நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள்.
இலங்கையைச் சேர்ந்த அந்த மர்ம ஆசிரமத்தை பராமரித்து வருவதாகவும், ஆனால் பிரேமானந்தாவின் மறைமுக கண்காணிப்பில் இந்த ஆசிரமம் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வழக்கு விசாரணைக்காக சிறையிலிருந்து கொண்டு செல்லப்படும்போது, போலீசாருக்கு மாமூல் கொடுத்துவிட்டு, இந்த ஆசிரமத்திற்கு பிரேமானந்தா வருவதாகவும், அங்கு பூஜைகள் நடத்தி தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதாகவும் அப்பகுதியினர் கூறுகிறார்கள்.
இந்த மர்ம ஆசிரமத்திற்கு ஏராளமான தான் அதிக அளவில் வருவதாகவும், பிரேமானந்தா சம்பந்தப்பட்டிருப்பதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், போலீஸார் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் அப் பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறைக்கு அருகிலேயே, போலீஸ் உதவியுடன் பிரேமானந்தா மர்ம ஆசிரமத்தை நடத்துவதாக வெளியாகியுள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>