03-27-2004, 03:27 AM
கருணாவை தீர்த்துக்கட்ட விடுதலைப் புலிகள் முடிவு!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட அதன் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதி முரளிதரன் என்கின்ற கருணாவை தீர்த்துக்கட்டப் போவதாக புலிகளின் தலைமை வெளிப்படையாக அறிவித்துவிட்டது!
மட்டக்களப்பு, அம்பாறை மக்களை பகுதி உணர்வை தூண்டி கருணா ஏமாற்றி வருவதை இதற்கு மேலும் அனுமதிக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தயாராக இல்லை என்றும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தேசிய உணர்விற்கும் எதிரான துரோகிகளின் எதிரிகளின் கைப்பாவையாகிவிட்ட கருணாவை இதற்கு மேலும் தமிழீழ மண்ணில் அனுமதிக்க முடியாது என்று புலிகளின் அரசியல் பிரிவு வன்னியில் இருந்து விடுத்துள்ள அறிக்கை கூறுகிறது.
"உண்மையை அறியாத மக்களையும், தொண்டர்களையும் பயன்படுத்திக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து வருகிறார் கருணா. ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக சிந்தப்பட்ட ரத்தத்தை, செய்யப்பட்ட தியாகத்தை எதிரிகளுடன் கருணா பேரம் பேசி வருகிறார். நமது தேசத்தையும், நமது மக்களையும் காப்பாற்ற இதற்கு மேலும் நமது மண்ணில் கருணா நீடித்திருக்க அனுமதிக்கப் போவதில்லை" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
கருணாவிற்கு விசுவாசமாக உள்ள தொண்டர்களை விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ள அந்த அறிக்கை, கருணாவிற்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை எதிர்க்கும் எவரொருவரும் தமிழ் தேசியத்தில் துரோகியாக கருதப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
நன்றி - வெப் உலகம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>