03-27-2004, 03:16 AM
நடிப்பது தமிழில், பேசுவது ஆங்கிலத்திலா? த்ரிஷாவை கடிந்து கொண்டார் டி. ராஜேந்தர்
சென்னை, மார்ச் 27: தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டு, மேடையில் ஆங்கிலத்தில் பேசியதற்காக நடிகை த்ரிஷாவைக் கடிந்து கொண்டார் நடிகர் டி.ராஜேந்தர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இயக்குநர்-நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் "நியூ' பட கேசட் வெளியீட்டு விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் டி. ராஜேந்தர் பேசியதாவது:
இப்போதைய நிலைமையில் படத்துக்கு கதைதான் நாயகன். எந்த நாயகனாக இருந்தாலும், நல்ல கதை வேண்டும்.
இதற்கு முன்பு பேசிய நடிகைகள் சிம்ரன், கிரண், த்ரிஷா ஆகியோர் ஆங்கிலத்தில் பேசினார்கள். த்ரிஷா, தமிழ் பெண். தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். தமிழில் பேசக் கூடாதா? ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறார்?
தமிழில் பேசுங்கள். திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டூங்கள்.
வரி: ஆந்திரத்தில் 8 சதவீத கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் வரி விலக்கு உண்டு. தமிழகத்தில் வரி அதிகமாக உள்ளது. திரைத்துறையைக் காப்பாற்ற யாரும் இல்லை. தமிழ்த் திரையுலகம் அழிந்து கொண்டிருக்கிறது. திருட்டு விசிடியில் திரைப்படம் பார்க்கக் கூடாது என்றார்.
நடிகர் சரத்குமார் பேசியதாவது:
நடிகை த்ரிஷா, தமிழிலேயே பேசி இருக்கலாம். இருந்தாலும் டி.ராஜேந்தரின் பேச்சை, ஒரு மூத்த கலைஞரின் அறிவுரையாக அவர் எடுத்துக் கொள்ள வேண்டும். வருத்தப்படத் தேவையில்லை.
நடிகர்கள் விஜய், சிலம்பரசன், அசோக், மகேஷ் பாபு, நடிகை ஐஸ்வர்யா, இயக்குநர்கள் சரண், வசந்த், தரணி, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மற்றும் பலர் பேசினர்.
நன்றி - திணமணி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>