03-27-2004, 03:05 AM
திம்புக்கோட்பாடும் தமிழர் தாயகமும்
தி ம்புக்கோட்பாட்டுக்கு ஒரே குரலில் தமிழ் தேசிய மக்கள் குரல் கொடுத்தார்கள். வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம். அதன் இணைப்பு வரலாற்று முடிவாகும் என்று ஒரே குரலில் கூறினார்கள். விடுதலைப் புலிகளின் படைப்பலத்தையும் கண்ட பேரினவாதிகள் தங்களது நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கிவந்தார்கள். அதிகாரப் பகிர்விற்கு இணக்கம் தெரிவித்து நிற்கின்றனர். ஒஸ்லோ பிரகடனத்தின் மூலம் சமஷ்டி முறையை ஏற்றுக்கொண்டனர்.
1956 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கென்றும் கிழக்கென்றும் பாராது தமிழர்களின் உரிமைகளுக்காக பல போராட்டக்களங்களை அமைத்தனர். அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர். காலக்கிரமத்தில் ஆயுத போராட்டமாக மாறியது. ஆயுத போராட்ட காலத்தில் பல அழிவுகளைக் கண்டனர். 2003 ஆம் ஆண்டு வரையும் தமிழ் தேசிய மக்கள் தலை நிமிர்ந்து நின்றனர். தேர்தலும் வந்தது. பாராளுமன்ற கதிரைகளுக்காக ஐம்பது வருடங்களாக கட்டிக் காத்து வந்த கொள்கைகளை, கடமை கட்டுப்பாடுகளை காற்றிலே பறக்க விட்டு விடுகின்றனர்.
அதிகாரம் இன்றேல் அபிவிருத்தி இல்லை என்று முழங்கியவர்கள் இன்று அபிவிருத்திதான் வேண்டுமென்று முணுமுணுக்கின்றார்கள். கிழக்கிலே உதிக்கின்றது இந்த குரல் பேரின வாதிகளுக்கு இனியதோர் இரை.
தமிழர்களுக்குத் தெரியாதா? அரசியல் உரிமைகள் பற்றிப் பேசிய பொழுதெல்லாம் சிங்கள பேரினவாதிகள் அபிவிருத்தியை மட்டும் பேசி இருக்கின்றார்கள். அந்த அபிவிருத்தி அலைக்கு சிலதமிழ் தலைவர்களும் துணை சென்றார்கள்.ஆனால் வாக்குறுதிகள் அளித்த வண்ணம் அபிவிருத்திகள் நடைபெற வில்லை. அதிகாரம் அவர்கள் கையில் அவர்கள் விரும்பும் பொழுது அபிவிருத்தி தொடங்கும் விரும்பாத பொழுது அபிவிருத்தி முடிவடையும்.
உரிமைகளும் அபிவிருத்திகளும் தேர்தல் காலங்களில்தான் பெரிதாகப் பேசப்படுகின்றன. தேர்தல் முடிந்ததும் நீயார். நான் யார் என்று கைவிரித்து விடுகின்றனர். பேரின வாதிகள் உரிமைகளையும் கொடுத்ததில்லை. அபிவிருத்திகளையும் செய்ததில்லை. இந்த இரண்டு விடயங்களிலும் தமிழ் தேசிய மக்கள் எப்பொழுதும் ஏமாற்றப்பட்டார்கள். தமிழ் தலைவர்களும் ஏமாறி நின்றார்கள். இதுதான் வரலாறு.
1944 ஆம் ஆண்டில் அபிவிருத்தி
அதிகாரப் பகிர்வில் தமிழர்கள் பங்குடமை கேட்டது 1944 ஆம் ஆண்டில்தான். அன்றைய கால கட்டத்தில் ஆற்றல் மிகுந்த இளங்சிங்கமாக அரசியல் களத்தில் குதித்தவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம். அவர் 1938 ஆம் ஆண்டு தொடக்கம் சமபல பிரதிநிதித்துவத்திற்காக ஓங்கிக்குரல் கொடுத்தவர். 1944 ஆம் ஆண்டு சோல்பெரி ஆணைக்குழுவினர் இலங்கைக்கு வந்தனர்.
புதியதோர் அரசியலமைப்பை வரைவதற்கு முயன்றனர். அவ்வேளையில்தான் சமபல பிரதிநிதித்துவக் கொள்கைக்கு பலம் கொடுப்பதற்காக தமிழ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். தமிழ் மக்களின் தேசிய கட்சியாக தொடங்கியது. சமபல பிரதிநிதித்துவக் கொள்கை உந்து சக்தியாக மிளிர்ந்தது. 1944 ஆம் ஆண்டு சோல்பெரி ஆணைக்குழுவின் முன் ஏறக்குறைய 13 மணித்தியாலங்களாக சமபல பிரதிநிதித்துவத்திற்காக வாதிட்டவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம்.
1938 ஆம் ஆண்டு ஆளுமை கொண்ட ஜீ.ஜீ.யின் குரல் சமபல பிரதிநிதித்துவத்தை முன்வைக்கத் தொடங்கிய பொழுது பேரினவாதிகள் அபிவிருத்தியைப் பற்றிக் கதைத்தனர். அதிகாரப் பகிர்வினை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. டி.எஸ்.சேனநாயக்கா தொடக்கம் அன்றைய அரசியலில் கற்றுக்குட்டியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா வரையும் யாழ்ப்பாணம் சென்றனர். எவ்வளவு அன்பான ஆசைவார்த்தைகள், உடன் பிறந்த சகோதரர்கள் போல் அரவணைப்பு இரத்தத்தின் இரத்தமாக துடி துடிப்பு. மட்டக்களப்பு சென்றனர். அங்கும் அதே பேச்சு வவுனியா சென்றனர். அங்கும் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசினர். அன்பு மழையில் தமிழ் மக்களை நனையவைத்தனர்.
கண்டிய இராச்சியத்தை கடைசிவரை காப்பாற்ற போராடியவன் தமிழன். சிங்கக் கொடியை விழவிடாமல் தூக்கிப்பிடித்தவன். தமிழன். தமிழர்கள் சிலகாலம் இலங்கையை ஆண்டார்கள். சிங்களவர்கள் சில காலம் ஆண்டார்கள். சிங்களவர்களை நம்புங்கள். நாங்கள் தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். எங்கள் தலைமையின்கீழ் நீங்கள் எங்களது இணைபிரியா சகோதரர்கள். உங்களுக்கு வேண்டிய தொழிற்சாலைகள், வீதிகள், வைத்தியசாலைகள். எல்லா வகை அபிவிருத்திகளையும் செய்து தருகின்றோம் என்றும் வினயமாக வேண்டி நின்றார். டி.எஸ்.சேனாநாயக்கா, அக்காலத்தில் தான் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பண்ணை தாம்போதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பூநகரி மகாதேவா தாம் போதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.இரண்டாம் உலக மகா யுத்தத்தில் உபயோகிக்கப்பட்ட படைத்தளக்கட்டிடம் காச நோய் வைத்தியசாலையாக மாற்றப்பட்டது. அதிகாரப்பகிர்வு பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டது. அதனால் யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித்திட்டங்கள் தொடங்கப்பட்டன. மட்டக்களப்பில் பட்டும் படாமலும் சில அபிவிருத்தித்திட்டங்கள் தொடங்கப்பட்டன.
மகாதேவாவும் நடேசனும், சுந்தரலிங்கமும் சிற்றம்பலமும் ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவர் டி.எஸ்.சேன நாயக்காவையும். ஆதரித்து நின்றனர். மட்டக்களப்பில் நல்லையா ஆதரித்து நின்றார். இவர்கள் தமிழர்களுக்கு அதிகாரம் தேவையில்லை. அபிவிருத்திதான் தேவை என்று குரல் கொடுத்தார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்தது. சேனநாயக்கா உரிமை குரல் எழுப்பிய தமிழர் தலைவனான ஜீ.ஜீ.க்கு வலை விரித்தார்.
சகல விதமான ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட சிங்கத்தமிழன் ஜீ.ஜீ. பொன்னம்பலம் டி.எஸ்.விரித்த வலையில் அகப்பட்டுக் கொண்டார். 1948 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 4 ஆம் திகதி அமைச்சரானார். அத்தோடு தமிழர்களின் அதிகாரப்பகிர்வின் வேட்கையும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழர்களின் அரசியல் உரிமைகளை அதிகாரப் பகிர்வை மழுங்கடிப்பதற்காக சேனநாயக்கா செயல்பட்டார். அதற்காகவே சில அபிவிருத்தி திட்டங்களைச் செய்வதற்கு தடைபோடாது விட்டார். புதிய அரவணைப்பின் கதகதப்பில் இருந்த ஜீ.ஜீ.சீமெந்து தொழில்சாலையை அபிவிருத்தி செய்தார். வாழைச்சேனை காகித தொழிற்சாலையையும் உருவாக்கினார். ஜீ.ஜீ.பொன்னம்பலம் அமைச்சராக இருந்த காலத்தில் தான் வடக்கிலும் கிழக்கிலும் சில அபிவிருத்திதிட்டங்கள் செய்யப்பட்டன. ஜீ.ஜீ.யின் சமபல பிரதிநிதித்துவத்தை மழுங்கடிப்பதற்காக சில அபிவிருத்தி எலும்புகளை தமிழர் முன்போட்டனர்.
கொடுக்கப்பட்ட சில அபிவிருத்தித்திட்டங்களுக்குப் பதிலாக தமிழர்களின் உரிமைகளை இல்லாது ஒழித்து விட்டனர். தமிழர்களுக்கு கொடுக்க வேண்டிய அதிகாரங்கள் மழுங்கடிக்கப்பட்டபின் கொடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒருவித முன்னேற்றத்தையும் அளிக்காது விட்டுவிட்டார்கள்.
ஜீ.ஜீ.க்குப் பின் வந்த அமைச்சர்கள் ஒருவித கப்பையும் தான் தமிழ் மக்களுக்காக போட முடியவில்லை. அவர்கள் அதிகாரங்களைக் கேளாது விட்டதினால் அபிவிருத்தித் திட்டங்களை கொடுக்காமல் விட்டனர். சுதந்திரம் அடைந்தபின் மட்டக்களப்பிலிருந்து வந்த அமைச்சர்கள் நல்லையா, இராசதுரை, தேவநாயகம் போன்றோர் என்ன அபிவிருத்தித் திட்டங்களை மட்டக்களப்பில் போட்டார்கள். அவர்கள் அபிவிருத்தி விதைகள் எவற்றையும் விதைக்க வில்லை. உண்மையில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிகாரம் சிங்கள அமைச்சரவையில குவிந்திருந்தது. அவர்களிடம் இருக்கவில்லை.
1977 ஆம் ஆண்டிலும் அபிவிருத்தி
1977 ஆம் ஆண்டு அரசியல் உரிமைகளுக்காக தமிழர்கள் வான் முட்ட முழக்கம் இட்டனர். தமிழீழம் வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆணை கொடுத்தனர். தமிழ் தேசிய மக்கள் கொடுத்த ஆணையை மழுங்கடிக்க குள்ளநரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா திட்டம் தீட்டினார். தமிழர்களின் தானைத் தளபதி அண்ணன் அமிர்தலிங்கத்தை வளைத்துப்பிடிக்க கொழும்பிலே வலைவிரித்தார்.
ஜே.ஆர்.விரித்த வலையில் அண்ணன் அமிர்தலிங்கமும் அகப்பட்டுக் கொண்டார். எவ்வாறு ஜீ.ஜீ.விழுந்தாரோ அவ்வாறே அண்ணன் அமிர்தலிங்கமும் வீழ்ந்தார். ஜீ.ஜீ. அமைச்சரானார். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் ஆனார் ஜீ.ஜீ.சில தொழிற்சாலைகளைக் கட்டுவித்தார். அண்ணன் அமிர்தலிங்கம் மாவட்ட அபிவிருத்தி சபையைப் பெற்றார். தமிழ் ஈழத்தை கை விட்டார். அபிவிருத்தி சபையை இறுக்கிப் பிடித்துக்கொண்டார்.
கடைசியில் அச்சபைக்கு மேசையும் கதிரையும் வாங்க பணம் திரட்டவே அதிகாரம் இல்லை என்று அதன் தலைவர் செனட்டர் நடராஜா தூக்கி எறிந்துவிட்டார். தமிழர்கள் எப்பொழுது அதிகாரத்தில் பங்கு கேட்கின்றார்களோ அப்பொழுது அபிவிருத்தியைப் பற்றி பேரினவாதிகள் பேசுவார்கள். தமிழ் தலைவர்கள் சிலரும் தலை அசைத்து நிற்பார்கள். இன்று சிறு மாற்றத்துடன் இக்கதை மேடை ஏறுகின்றது. அதிகாரம் கேட்ட தளபதியே அபிவிருத்தி போதும் என்று கிழக்கில் குரல் கொடுக்கின்றார். அதற்கு சாமரை வீசுகின்றனர் ஜனாதிபதியும் ஜே.வி.பி.யினரும். தேர்தல் முடிந்தபின்பு ஜீ.ஜீ.க்கு நடந்தகதை கருணாவுக்கும் நடந்துவிடும். அண்ணண் அமிர்தலிங்கத்திற்கு போட்ட அபிவிருத்தி சபை எனும் மாலை கருணா அம்மானுக்கு போடப்படும். எல்லோருக்கும் நடந்தகதை தமிழ் தேசிய மக்கள் நன்கறிவர். அதனால் தான். தலைவர்கள் ஏமாந்த பொழுதும் ஏமாற்றப்பட்ட பொழுதும் தமிழ் தேசிய மக்கள் ஒரு பொழுதும் ஏமாறவில்லை. 1947 ஆம் ஆண்டிலும் தமிழ் தலைவர்கள் கேட்ட ஆணையைக் கொடுத்தனர். சோல்பரி ஆணைக்குழுவின் ஆலோசனைகளை நிராகரித்தனர். 1977 ஆம் ஆண்டிலும் தமிழ் தலைவர்கள் கேட்டவாறு தமிழீழ ஆணைதனைக் கொடுத்தனர். தலைவர்கள் தளம்பினார்கள். தமிழ் தேசிய மக்கள் தளம்பவில்லை. 2004 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய கூட்டணியை முன்னிறுத்தி ஆணை கேட்கின்றார்கள். நிச்சயமாக தமிழ் தேசிய மக்கள் ஏப்ரல் மாதம் இரண்டாந்திகதி கேட்டவாறு ஆணைதனை வழங்குவார்கள். ஏனெனில் தமிழ் தேசிய மக்கள் தங்களது உரிமைகளுக்கு எதிராக ஒருபொழுதும் நடந்ததில்லை. துரோகத்திற்கு ஒரு பொழுதும் துணைபோனதில்லை. எப்பொழுதும் உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர்கள். தங்களது வீடுகளைக் காப்பாற்ற இரண்டாந் திகதி ஒரே அணியில் ஒன்றாக திரண்டிடுவர். பொங்கு தமிழர்களுக்கு இன்னல்கள் விளைகின்ற இந்நேரத்தில் சிங்களஞ்சேர் தமிழ் தேசிய மக்கள் வடக்கென்றும் பாராது. கிழக்கென்றும் பாராது இரண்டாந்திகதி ஒன்றாகி விடுவர். தமிழ் தேசிய கூட்டணியை பாராளுமன்றம் அனுப்பிடுவர். இரண்டாம் திகதிக்குப்பின் எங்கள் பகைவர்கள் எங்கோ மறைந்திட வீடுதனைக் காப்பாற்றி வீறு நடைபோடுவர். வாழ்க தமிழீழ தேசிய மக்கள். வளர்க அவர்கள் ஒற்றுமை. வெல்க திம்புக் கோட்பாடு.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>